Saturday, November 05, 2005

தற்கொடை

நாளைய வரலாறுகள்
சொல்லும்
எம்மின
வலிமையின்
வழங்குதல் பற்றி

களம்
அதிர அதிர
கடும் சமர் புரிகையில்
எதிரிக்கு விளக்கப்படும்
எம்மின வீரம்

பணவிடை
கொடுப்பதில் இல்லை
கொடையுள்ளம்
தன்னை விடைக்கொள்வதே
தற்கொடை

பசி கிள்ளும்
வயிறுகளுக்கெல்லாம்
விருந்தாகும்
எம்மின விடுதலை

வெரும் ஆறடி நிலத்தில்
அமிழ்வதல்ல
எம்மின உயிர்

காற்றில்
நீரில்
மண்ணில்
கரைந்து

மீண்டும்... மீண்டும்
மீண்டு வரும்
பயிர்

(மண்ணின் உயிர்காக்க விதைகளாய் விழுந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்)

3 comments:

  1. புலமை மொழியை சற்று குறைத்து இயல்பான நடைக்கு வாருங்கள்

    கவிதை நன்றாக உள்ளது...

    ReplyDelete
  2. பூவுலகமெங்கும் மகரந்த மணத்தை மனமுவந்து தரவிரும்புகிற ஒரு பூவின் உலகமாக உங்களின் பதிவுகள் தென்படுகின்றன.
    தற்கொடை என்கிற இக்கவிதை நன்று.
    1). உங்களால் மேலும் ஆழமாக எழுத முடியும் என்று நம்புகிறேன்.
    2). தேவை இல்லாத போது புலமை நடையை சற்றே புறந்தள்ளலாம். தப்பில்லை.

    ReplyDelete
  3. பூவுலகமெங்கும் மகரந்த மணத்தை மனமுவந்து தரவிரும்புகிற ஒரு பூவின் உலகமாக உங்களின் பதிவுகள் தென்படுகின்றன. தற்கொடை என்கிற இக்கவிதை நன்று.
    1). உங்களால் மேலும் ஆழமாக எழுத முடியும் என்று நம்புகிறேன்.
    2). தேவை இல்லாத போது புலமை நடையை சற்றே புறந்தள்ளலாம். தப்பில்லை.

    ReplyDelete