Saturday, February 23, 2019

01.எச்சரிக்கை நிருவாகம் பொருப்பல்ல...


1.இங்கே நான் எழுதும் கட்டுரைகள் எதிர்காலத்தில் மதங்கள் எனும் கற்பிதங்கள் எனும் நூல் வடிவம் பெற இருப்பதால் மக்களை மூடநம்பிக்கையிலிருந்து வெளிக்கொணர வேண்டி இக்கட்டுரைகளை முழுமையாகவோ, பத்தியாகவோ, வார்த்தையாகவோ பயன்படுத்துவார் கட்டாயம் இந்நூலின் பெயரையும், என் பெயரையும் (கவிமதி) குறிப்பிட வேண்டுகிறேன்.

2. இக்கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துகள் சடங்குகள் பெயரில் மக்களை ஏமாற்றும் எல்லா மதங்களுக்கும் பொருந்தும் (ஒரு சில வேறுபடலாம்). எனவே அப்பாடா என்னை சொல்லவில்லை என யாரும் வருத்தபட வேண்டாம். இவற்றை வாசிக்கும் போது உங்களுக்கு கோபம் வந்து நரம்பு புடைத்தால் அறிந்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்கள் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுகிறீர்கள் மற்றும் ஏமாறுகிறீர்கள் என்று.

3. இக்கட்டுரைகளை வாசித்து தங்களுக்குள் தர்க்கரீதியான விவாதங்கள் நடத்தி அறிவுபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்தித்து நீங்கள் உங்கள் மதங்களை துறந்து மனிதனாக எல்லோரையும் அரவணைத்து வாழ வேண்டும் என்பதே என் விருப்பமே தவிர யாருடனும் விதண்டாவதம் நடத்துவதோ, உங்கள் நம்பிக்கையை உடைப்பதோ, யாரையும் திருத்துவதோ என் நோக்கம் அல்ல.

இக்கட்டுரைகளை வாசிப்பதால் நிகழும் உங்களின் மன மாற்றத்திற்கு நிருவாகம் பொருப்பல்ல என்பதனையும் பேரன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள்
கவிமதி

நூறு அடிமைகளின் உதவியோடு நான்கு திருடர்கள்

ஒரு ஊரில் நூறு அடிமைகளின் உதவியோடு நான்கு திருடர்கள் சேர்ந்து திருடிப் பிழைத்து வந்தனர். பெரிய திருடன் சபலப் பேர்வழி.. இரண்டாமவன் பரவாயில்லை அவனுக்கு பெண் பித்து மட்டும்தான். இவர்கள் அளவுக்கு மூன்றாமவன் மோசமில்லை அவன் ப்ளேபாய் மட்டும்தான். நான்காமவனுக்கு பெண்களோடு தனியறையில் உலகவிசயங்கள் பேசிக்கழிப்பது பிடிக்கும். அவ்வளவுதான்.
இந்த நான்குபேரும் ஊரையும் மார்கத்தையும் காக்கவந்த ரட்சகர்களென்று அந்த நூறு அடிமைகளும் நம்பினர். இவர்களைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால், கேட்பவர் வீட்டுப் பெண்களுக்கு வேசிப்பட்டம் சூட்டி மகிழும் பரந்த உள்ளம் கொண்டவர்கள் அவர்கள். இப்படியாக இவர்களின் தொடர் பிரச்சாரத்தால் ஊருக்குள் நிறையப் பெண்கள் வேசிப்பட்டத்தோடு திரிந்துகொண்டு இருந்தனர்.
ஆச்சா...!!
ஒருநாள் பங்கு பிரிப்பதில் அவர்களுக்குள் தகராறு. முதலாமவன் நான்காமவன் மீது புகார் தெரிவித்தான். இரண்டாமவனும் மூன்றாமவனும் ஆதாரம் கொடுத்தனர். அந்த நூறு பேரும் "ஆமா ஆமா ஆமோய்.." என்று கோரஸ் பாடினார்கள்.
'அந்நியப் பெண்களோடு தனியறையில் இருந்து உலக விசயம் பேசிய குற்றத்துக்காக உன்னை ஊரை விட்டு விலக்குகிறோம்..' திருச்சபை தீர்ப்பு சொன்னது.
இன்னொருநாள் ஊரில் ஒரு பெரிய குடும்பத்தில் கணவன் மனைவிக்கு பிரச்சனை. பஞ்சாயத்து முதலாமவனிடம் வருகிறது. 'இப்படிப்பட்ட ஒரு கணவனோடு சேர்ந்து வாழ முடியாது நீங்கள் பிரிந்து விடுங்கள்' திருச்சபை தீர்ப்பு சொல்கிறது. இரண்டாவது மூன்றாவது நபர்கள் ஆதாரம் உள்ளது என்றார்கள். அடிமைகள் நூறு பேரும் "ஆமா ஆமா ஆமோய்..." கோரஸ் பாடுகிறார்கள்.
பிரிந்து வந்த பெண்ணோடு ராடு வியாபாரம் செய்துவந்த முதலாமவன் ஆர்வக்கோளாரில் வீடியோ காலிங் செய்துவிட கால் ரெக்கார்டாகி பஞ்சாயத்தாகி லட்சங்களில் பைசலாகி.... ஒரு வழியாய் முடிந்த கதை குறித்து கேள்வியெழுப்பிய எல்லார் பொண்டாட்டிகளும் வேசிகளாக்கப் பட்டனர். ஆனாலும் கேள்விகள் ஓயவில்லை.
தலைவர் ஆபீஸ் பாத்ரூமின் ரெண்டாவது கதவில் காவல்காத்தபடி இரண்டாமவனும் மூன்றாமவமும் ஆதாரம் இல்லையென்றனர். 'எங்கள் தலைவர் தங்கம் போன்றவர்.. அவர்மீது அவதூறு செய்பவர்களின் மனைவிகள் வேசிகள்..!!' திருச்சபை தீர்ப்பு சொல்லியது. அடிமைகள் நூறு பேரும் "ஆமா ஆமா ஆமோய்..." கோரஸ் பாடினர்.
ஒரு சுபயோக சுப தினத்தில், ஒரு கோயமுத்தூர் குசும்பனிடம் ஆதாரம் சிக்கிக்கொள்ள முதலாமவன் ராடு எலிப்பொரியில் மாட்டிக்கொண்டு சின்னாப்பின்னமாய் நசுங்கிப் போனது.
நசுங்கிய ராடோடு ஓடிய கிழட்டு பெருச்சாளி திரும்பி வராது.. இனி இந்த தொழிலும் நூறு அடிமைகளும் நமக்குத்தான் எனச் சப்புக்கொட்டிய இரண்டாமவனும் மூன்றாவனும் முதலாமவனை முத்தலாக் செய்து திருச்சபை தீர்ப்பு சொன்னது. நூறுபேர்க் கூட்டம் "ஆமா ஆமா ஆமோய்..." என்றது.
முதலாமவன் தோண்டிவைத்த குழியில் இரண்டாவது மூன்றாமவனும் விழுந்துவிட இவன் மீது அவனும், அவன்மீது இவனும் மாற்றி மாற்றிச் சேரள்ளிப் பூசிக்கொண்டனர். வேடிக்கை பார்த்தபடி அடிமைக்கூட்டம் "ஆமா ஆமா ஆமோய்...!" என்று கத்திக்கொண்டிருந்தது.
"நான்குபேரும் திருடர்கள்.. இனி திருச்சபைக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை..! இனி இந்தத் திருச்சபையின் திருட்டையெல்லாம் புதிய நிர்வாகிகள் கவனித்துக் கொள்வார்கள்.." புதிய திருடர்களின் அறிக்கையையைப் பார்த்து "ஆமா ஆமா ஆமோய்..." எனப்பாடி மகிழ்ந்தது கூட்டம்.
முன்னாள் திருடர்களில் சிலர் வீடியோ வெளியிட்டனர்.
"நாங்கள் செய்தது தவறுதான்.. அல்லாவின் பெயரால் எங்களை மன்னியுங்கள்.."
கண்ணீர் வடித்தபடி அந்த அடிமைகள் கூட்டம், "ஆமா ஆமா ஆமோய்...!!" என்று அழுதுகொண்டிருக்கிறது.
🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
நன்றி:
Samsu Deen Heera

Saturday, February 09, 2019

காதலர் தினமும் நமது ஆதரவும்

*காதலர் தினமும் நமது ஆதரவும்*

நாம் ஏன் காதலர் தினத்தினை ஆதரிக்கவேண்டும் என யாராவது கேட்டால் உடனடியாக ஒரு பதில் என்னவெனில் *மதவாதிகளும், மிதவாதிகளும் எதிர்க்கின்றார்கள் எனவே நாம் ஆதரிக்கிறோம்* என்றுவிடலாம். ஆனால் நமக்கு பிடிக்காத ஒருவர் அல்லது ஒரு கூட்டம் ஒருவிடயத்தை எதிர்க்கிறது என்பதாலேயே நாம் அவற்றை ஆதரிப்பது அறிவுடைமையாகாது. ஆதாரிப்பதிலோ, எதிர்ப்பதிலோ சமுதாய மக்களுக்கு அதிலிருக்கும்  நுணுக்கமான அரசியலை எடுத்துச் சொல்வது நமது கடமையாகும்.

காதலர் தினம் என்பது இந்தியாவை பொருத்தமட்டில் பெரும்பாலும் எதிர்மறை சேர்க்கையாளர்களை (ஆண்+பெண்) கொண்டே கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் காதல் என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது காதல் என்கிற ஒரு உணர்வு இல்லாத உயிரினமே இப்புவியில் இல்லை எனலாம். ஆனால் தற்போதைய சூழலில் *“காதலர் தினம்”* என கடைபிடிக்கப்படுவது ஆண், பெண் என்கிற எதிர்மறை சேர்க்கையாளர்கள் பழகும் விதத்திலானது மட்டுமல்ல. இது *ஓரினச்சேர்கையாளர்களுக்கென்றே* தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது.

சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் வாலண்டைன் என்கிற ஐய்ரோப்பிய சிறை அதிகாரி ஒருவர் சிறையில் கைதிகளுக்கிடையில் ரகசியமாக பழக்கத்தில் இருந்த ஓரினச்சேர்க்கையை வெளிப்படையாக நடத்திக்கொள்ள அனுமதியளித்தார். இதனால் சிறைக்குள் நடக்கும் வன்முறை செயல்கள் கட்டுக்குள் வந்ததாக பதிவு செய்தார். இதை தொடர்ந்து ஓரினச்சேர்க்கையில் மகிழ்ந்த கைதிகள் ஒன்றுக்கூடி சிறையதிகாரிக்கு ஒரு விருந்து உபரிசரிப்பு அளித்தனர். அன்று முதல் அவர் பெயரில் அந்த நாள் *“வாலண்டைன் தினமாக”* சிறைவாசிகளால் கொண்டாப்பட்டது. அதுவே தற்போது காதலர் தினமாக கடைபிடிக்க வைக்கப்பட்டு உலக வியாபார சந்தையாளர்களால் பெரிதாகப்பட்டு இன்று (பிப்ரவரி 14ந் தேதி) *காதலர் தினம் என்கிற பொதுப்படையான பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களாலும், எதிர்மறை சேர்க்கையாளர்களாலும்* கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலர் தினத்தினை நாம் ஆதரிப்பது முழுக்க முழுக்க சாதியொழிப்பு, ஆண் பெண் விடுதலை என்பதனை முன்வைத்தே. தற்போதைய சூழலில் தமிழகத்தில் தொடர்ந்து வரும் *“ஆணவபடுகொலைகள்”* சாதி தவிர்த்து காதலிக்கும் இளவயதினரை குறிவைத்தே நடத்தப்படுகிறது. சாதி மதயொழிப்பின் அடிப்படையில் நாம் இப்படிபட்ட காதலர்களை ஆதரிப்பதன் மூலம் சமத்துவம் ஓங்குவதுடன் எதிர்காலத்தில் சாதி, மதம் என்கிற ஆணவம் அழிந்து இந்திய துணைக்கண்டத்தில் மக்கள் அனைவரும் மனித இனமென்ற ஒரே இனமாக வாழவேண்டும் என்பதே நமது அவா.

*காதலை எதிர்ப்பவர்களின் அச்சமே மதம், சாதி, இவற்றின் சடங்குகள் என்கிற பெயரில் ஆண், பெண் அடிமைகளை உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதைகளும், சாதி, மத உணர்வும் உடையும் என்பதும், இவற்றின் பெயரால் தாங்கள் அடைந்துவரும் அரசியல், பொருளாதார இலாபங்கள் பாதிக்கப்படும் என்பதேயாகும்*

அடுத்து இதில் ஓரினச்சேர்க்கையினை நாம் ஆதரிப்பதும் இதே சாதி, மத எதிர்ப்பின் அடிப்படையில் தான் எனலாம். ஓரினச் சேர்க்கையாளர்களால் முதன்முதலில் *மக்கள் தொகை கட்டுக்குள் வரும்*, *குடும்பம் என்கிற* லொவ்கீக வாழ்க்கை முறை அழிக்கப்பட்டு இதன் மூலமாக ஆண், பெண் மீதான *”குடும்பம் சுமத்தல்”* , குடும்பத்திற்கான தன் வாழ்நாள் தியாகம் செய்தல், தனக்கான வாழ்க்கையில் எந்த ஒரு நலனும் பேணாதிருத்தல் என்கிற வாழ்க்கை சுமை குறைக்கப்பட்டு இதன் காரணங்களால் எழும் *“ஒருதலை சுமை”* குறைக்கப்பட்டு ஆண், பெண் அனைவரும் சமமாகவும், தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே ஏற்படுத்திக்கொண்டு மகிழ்வாக வாழவும் வகைசெய்கிறது. மேலும் ஓரினச்சேர்க்கையால் பால்வினை நோய்களும் கட்டுக்குள் வரலாம்.

எங்கெல்லாம் சாதி, மத அடிப்படையில் சமத்துவம் பாதிக்கபடுகிறதோ அங்கெல்லாம் புகுந்து கிளர்ச்சி செய்து மக்களை சாதி, மத போதனையிலிருந்து வெளிக்கொண்டுவருவதும் இதன் மூலம் சமூக வாழ்க்கை முறையில் பற்பல மாற்றங்களை கொண்டுவந்து அனைத்து சமூக மக்களும் சமநிலை கண்டு தங்களுக்கென இயற்கையால் வழங்கப்பட்டிருக்கும் *ஒற்றை வாழ்க்கையினை* பெரும் மகிழ்வோடும், சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்பதற்காகவே காதலர் தினத்தினையும் அதுனுடன் இயற்கையாக பிண்ணிபினைந்திருக்கும் ஓரின மற்றும் எதிரின சேர்க்கையாளர்களையும் ஆதரிக்க மக்களாகிய நம் அனைவருக்கும் பெரும் கடமையுண்டு.

Monday, November 05, 2018

பரியேறும் பெருமாள்

ஆயிரம் கண்ணாடி ஓடுகளின் மேல் மல்லாக்க கிடத்தி தர தரவென்று இழுத்துச் செல்வதுபோல் இரணமிகுந்த “வலியினை” மீண்டும் என் முதுகில் தடவி பார்த்துக்கொண்டேன். என் தகப்பன் என் கண் முன்னே நிர்வாணமாக்கப்பட்டு நடுத்தெருவில் ஓடுகையில். இந்திய கூட்டு மனசாட்சிக்கான மாட்சிமை தாங்கிய வலிகளை திணித்தே வளைந்த முதுகுகள் எங்களது என அந்த அப்பாவி தகப்பன் கையெடுத்து கும்பிட்டு ஓடும் காட்சி. 

கும்மிடுவது என்னெவோ அவனது கை தான் வெட்கி கூனி குறுகுவதோ இந்திய மதசார்புடைய மேட்டிமை மனிதர்களின் தலைகளும், சாதிய அடக்குமுறைகளுக்கெதிராக வாய்மூடி ஏட்டில் மட்டுமே கிடக்கும் சட்டங்களும் தான். அதில் ஒரு தலை என்னுடையதாகவும் இருக்கும் கையாலாகாத நிலைக்கு நானும் மெளன குற்றவாளிகாகவே நிற்கிறேன்.

“உன் கெளரவம் என்பது நான் உனக்கு போட்ட பிச்சை” என்கிற உரையாடலைவிட எதிர்வினை, எத்தனை அருவாக்கள் எடுத்து வீசினாலும், எத்தனை சட்டங்கள் போட்டு அடக்கினாலும் இயலாது.

சாதிய கெளரவம் என்பது தாழ்த்தப்பட்டு கிடப்பவரது அறவழி காக்கும் அமைதியால் மட்டுமே காக்கப்படுகிறதோடல்லாமல் மேல்சாதிய திமிரால் அடக்கப்பட்டு கிடக்கவில்லை. எங்கெல்லாம் சாது மிரல்கிறதோ அங்கெல்லாம் சாதியத்திமிர் மிரண்டு ஓடுகிறது என்பதனை வரலாறு நிரைய பதிவாகியிருக்கிறது.

ஒரு படத்தின் சில காட்சிகள் குறியீடாக வரலாம் முழுபடமே குறியீடாக வரமுடியுமா என்கிற கேள்வியை உடைத்தெரிந்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.  ”கருப்பி ஆணவக்கொலை” செய்யபடுகிறபோதும், இறுதிக்காட்சியில் ”ஒரு ஆணவநாய்” தற்கொலை செய்துக்கொள்ளுகிற போதும் இது வெறும் மூன்று மணிநேர சினிமா காட்சிகளின் குறியீடுகள் தான் என்று கடந்துவிட இயலாமல், சாதிய கொலைவெறியென்பது எப்படி நரம்பு மண்டலங்களில் புரையோடி கிடக்கிறது என்பதற்காக நாகரீக வளர்ச்சியின் அடையாளங்கள். ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டாலே அது காதல் தான் அவர்கள் ஓடத்தான் போகிறார்கள் அதுவும் இருவேறு சாதிகள் இங்கே எப்படி நண்பர்களாக கூட இணைய இயலும் என்கிற மனதில் படிந்திருக்கும் அழுக்கு சுவர்களை தகர்த்தெரிவதிலே அப்படியொரு நுணுக்கத்தை கையாண்டிருக்கிறார் இயக்குனர். 

சாதிய அழிவு என்பது எவன் கையில் அந்த கறை படிந்திருக்கிறதோ அதை அவன் அழித்துக் கொள்ளாதவரை தானே அழியாது அல்லது எதனாலும் அழிக்க முடியாது. கண்ணாடி குவளைக்கும் சிரட்டைக்கும் இடையேயான சாதிவெறியை சொல்வது கடந்தகால வலியெனில் ஒரே வகை கண்ணாடி குவளைகளில் சரிசமாக உட்கார்ந்து குடிக்கும் இருவேறு வகை தேனிரில் அப்பட்டமாக என்றும் இருக்கத்தான் செய்கிறது சாதிய வெறுப்புணர்வு என்பதை இதைவிட தெளிவாக எப்படி காட்ட இயலும்?.

பரியேறும் பெருமாள் என்பது வெறும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் இடைசாதியர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமுமல்ல, தீர்வுமல்ல. தலித்தல்லாதோர் கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் அத்துணை சாதி, மத வெறியர்களுக்கும் பொதுவான பாடம். 

தன் சாதி பெண்களோடு பழகாத வரை தாழ்த்தப்பட்டவனை அரவணைப்பதாக காட்டிக்கொள்ளும் அய்யோக்கியர்கள் ஆணவக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் மனதுக்குள் கைதட்டிக்கொள்வதை உணர தயங்கவில்லை நாம். தங்கள் சாதி, மதம் சார்ந்த விமர்சனங்கள் எழாதவரை மெளனம் காக்கும் இவன்களைவிட குலசாமிக்கென்று கொலை செய்பவன் நேர்மையான சாதிவெறியனாகவே தெரிகிறான். மற்றவெனெல்லாம்
மறைந்திருந்து நயவஞ்சக நாடகமாடும் நல்லவன்கள். அப்படிபட்ட நல்லவர்களால் தான் சொல்ல இயலும் “பரியேறும் பெருமாளில்” என்ன இருக்கிறது என்று. தன் சொந்த சாதிக்கெதிராக பேசாதவரை விமர்சகனை அறிவுசீவிகளாக அரவணைத்துக்கொள்வதில் வள்ளவர்கள் தான் இவ்வகையிலான சாதியை ஒழிக்க புறப்படுகிற நடுநிலை நாயகர்கள்.

”பரியேறும் பெருமாள்” தமிழ் சினிமாவின் மந்த புத்தியை கிளரி எதை சினிமாவாக்க வேண்டும் என்று ”தேவர்மகன்”களுக்கு கிடைத்திருக்கும் இந்நூற்றாண்டின் குட்டுகள். 

*கவிமதி*
துபாயிலிருந்து
==============================================
ஆயிரம் முட்டாள்களிடம் விவாதிப்பதை விட ஒரு புத்தகம் படிப்பது மேல்
----------------------------------------------------
www.kavimathy.blogspot.com
www.kavimathy.wordpress.com

Sunday, March 04, 2018

மீண்டும் வலைப்பூ உலகத்திற்கு...

ஆயிற்று ஆண்டுகள் சில

கடைசியாக எப்போது என் வலைப்பூவை திறந்தேன் என எனக்கே நினைவில்லாத போது சக தோழழைகளில் சிலர் என் வலைப்பூவுக்கு வந்து வாசித்து சென்றுக்கொண்டிருப்பதை நினைக்கையில் இன்னும் இந்த வலைப்பூ உலகம் செயல்பட்டுக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சியே.

மின்னனு எழுத்துலகம் தொடங்கிய போது நாங்கள் இந்த வலைப்பூ வழியே தான் எங்கள் எழுத்துக்களை பதிவேற்றினோம். சுமார் ஒரு அய்ந்து ஆண்டுகள் இதில் பயணித்ததில் நிறைய கற்றுக்கொண்டேன். புத்தகங்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட அரபுநாடுகளில் வலைதளங்கள் மூலம் நிறைய வாசிப்புகளை தொடர்ந்து கொள்ள இலகுவானது இந்த வலைப்பூக்கள் தான்.

பிரபலங்களின் எழுத்துக்கள் மட்டுமே எழுத்துகள் என ஒரு சார்புடைய மனநிலை இருந்த காலங்களில் புதிய புதிய எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் உலகறிய செய்ததில் இந்த வலைப்பூக்களுக்கு நிகர் இல்லை.

இப்படி தனிபெரும் படைப்புகலகில் வலைப்பூக்கள் கோலோச்சிக்கொண்டிருந்த வேலையில் இதை தொடர்ந்து வந்த முகநூல் அனைவரது வாசிப்பையும் முடக்கி, வலைப்பூ எழுதும் பழக்கத்தினையும் முடக்கியது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். என்னதான் முகநூலில் உடனடி “விருப்புகள்” நிரைய கிடைத்தாலும் நாம் எண்ணுகிற வகையிலான நீள் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களை முகநூலில் எழுதுவதில்லை. பல முன்னனி எழுத்தாளர்கள்கூட தங்களது வலைதளங்களிலிலோ, வலைப்பூக்களிலோ தங்களது ஆக்கங்களை எழுதி அவற்றின் தொடுப்புகளை முகநூலில் பதிவதையே பார்த்திருக்கிறோம்.

இது ஒருவகையில் முற்றுலும் உண்மை. முகநூல் பக்கத்தில் மிக குறைந்த பத்திகளுக்கு மேல் எழுத இயலாது அப்படியே எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். ஏனெனில் வலைப்பூ பிரியர்களுக்கு இருக்கும் வாசித்தல் பொருமை முகநூல் வாசிப்பாளர்களுக்கு இருப்பதில்லை. எப்படிபட்ட ஆக்கமாக இருந்தாலும் முகநூலில் ஒரு சில வரிகளில் மிக சுருக்கமாக சொல்லியே ஆகவேண்டும் என்பது ஒரு கட்டாயமான எழுத்து சுருக்கமே.

தொடர்ந்து முகநூலில் பயணித்து கொஞ்டம் சோர்வு அடைந்தாலும் முகநூலை விட்டு அகளாமல் அதே வேலையில் தேங்கிப்போன எண்ணபதிவுகளை மீண்டும் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி பதிவேற்றலாம் என்கிற சிந்தனையில் தான் இந்த மீண்டும்  வலைப்பூ உலகத்திற்கு.... என்கிற தொடக்கம்.

இதை ஒரு கடுமையான பத்தியமாகவே கடைப்பிடிக்க என்னுகிறேன். வழக்கப்படி பணி சுமைகளுக்கு நடுவே காலம் தான் என்னை தொடர்ந்து வலைப்பூ எழுத அனுமதி தரவேண்டும்.

எழுதுவேன் என்கிற நம்பிக்கையில் எப்போதும் போல உங்களோடு பயணிக்கிறேன்.

நன்றி.


தீர்ப்பும் சடங்கும்

காலங்கடந்த தீர்ப்பு மட்டுமல்ல நீதிக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பும் ஒரு வகை கொலைக்கு சமமாததே.இதை ஏதோ தீடீரென்று எடுத்த முடிவாக நீங்கள் கருத்தத்தேவையில்லை கடந்த 15 ஆண்டுகாளின் தொடர் தேடுதலின் காரணமான இது நிகழ்ந்திருக்கலாம். கடவுளை நான் விரட்ட அவன் எனக்கு போக்கு காட்டி ஓட இப்படியாக எங்கள் இருவருக்கிடையில் நடதுக்கொண்டிந்த கண்னாம்பூச்சி இன்று முடிகிறது என நினைக்கிறேன்.

இருப்பதை நோக்கி ஓடினால்  ஒருவேலை பயன் கிடைக்கலாம் இல்லாததை நோக்கி ஓடுவதில் பயன் ஏதுமில்லை என்பது இருட்டில் ஓடிக்கொண்டிருந்த எனக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. இசுலாம் என்கிற கோட்பாடு என்னுள் திணிக்கபட்ட தினத்திலிருந்து செரிக்கமாட்டாமல் குழம்பிக்கொண்டே இருந்தது உண்மை. ஏனெனில் என்னுள் திணிக்கபட்ட இசுலாம் நபிகள் நாயகம் அவர்கள் முன்வைத்த இசுலாம் இல்லை என்பது மட்டுமல்ல அவர்களின்  இசுலாம் இப்பூவுலகில் எங்கும் இல்லை என்பது இபோது தெளிவாகிவிட்டது. அப்படியெனில் தற்போது உலகில் கடைபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இசுலாம் ஆம் அது வெறும் சடங்குகளாகவே கடைபிடிக்கபடுவதால் இந்நிலை சரியானதே.

கடந்த காலங்களில் இசுலமிய மதகுருமார்களின் சித்து விளையாட்டில் சிக்கி தவிக்கும் இசுலாத்தை பலமுரை காப்பாற்ற நினைத்து தோற்றவர்களின் பட்டியலில் என் பெயரும் எழுதிக்கொள்ள்ட்டும். 15 ஆண்டுகளாக தொடந்த கடவுள் வேட்டை சகிப்புத் தன்மை அரவே இல்லாத மார்க்கம் என்ற பெயரில் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைத்தெடுக்கும் சமூக விரோதிகளின் சடங்கு நிரைவேற்றல்காலால் நிறைவடைகிறது.

ஆம் இங்கே கடவுள் தலையை வெட்டி அவனுக்கே படைக்கும் சடங்கே இசுலாம் என்று போலியாக வழிக்காட்டப்படுகிறது. இங்கே இந்த புள்ளியில் தான் என்கக்குள் தெளிவான கோடுகளை வரைகின்றது ஆம் ரிசானவின் தலை கீழே விழுந்த நொடியில் என் பகுத்தறிவு தலைநிமிர்கிறது. ஓஒரே நேரத்தைல் ஒரே இடத்தில் நீதியின் தலையை வெட்டிவிட்டு அநீதிக்கு தலைவைக்கும் இச்செயலை எப்படி உண்மை இசுலாம் ஏற்கும்....ஏற்கிறது எனில் அது எப்படி உண்மை இசுலாமாக இருக்க முடியும்?

Wednesday, January 28, 2015

நீர்த்துப்போன ஈழப்பிரச்னை ஓர் அலசல்

நியாயமான போராட்டங்களை கலவரமாக மாற்றி நீர்த்துப்போகச் செய்தல்,போராடுபவர்களின் பக்கமே பிரச்னையை திசைதிருப்பிவிட்டு போராடுபவர்களை குற்றவாளிகூண்டில் ஏற்றிவிடுவது; முதலில் அதிலிருந்து அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடுவது; அவர்கள் எதற்காக தொடங்கினார்களோ அந்தப் புள்ளியை விட்டு அவர்களை வெகுதூரத்திற்கு கடத்திச்சென்று மறக்கடித்து,மழுங்கடித்துவிடுவது; அதன் பின் அவர்களின் மீதே தவறென்று மீண்டும் மீண்டும் கொளுத்திவிட்டு குளிர்காயும் உத்தியைக் கையாண்டு, பாதிக்கப்படுபவர்களை விட மேலதிக மன உளைச்சளை பாதிக்கப்படுவோருக்காக போராடுபவர்கள்மீது திணித்து தான் எப்போதும் பேரினவாதத்தின் தோழன்தான் என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது.

அப்பாவி முத்துக்குமரனின் அறியாமையிலிருந்தே தொடங்குகிறேன்.ஈழ்ப்பிரச்னை என்பது தமிழீழத்தில் இருந்து போராடுபவர்கள் அதனால் பாதிகப்படுபவர்களுக்கு அத்தியாவ‌சியம் எனில் தமிழகத்திலிருந்து போராடுபவர்களுக்கு அவசரம், அப்பாவித்தனம்,அரசியல் என்கிற சமுக கட்டமைப்பைத் தாண்டியதுதான், தன் இன அழிப்பிற்கு எதிரான போராட்டம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவிட்டது.

ஈழப்பிரச்னைக்காக தமிழகத்தில் இதற்கு முன்னர் எழுந்த எழுச்சி இப்போது இல்லை. எனினும் இப்போதைக்கு ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்கும் முன்னர் ஏற்பட்ட எழுச்சிக்கும் பொதுவாக இருப்பது அரசியல் தான் என்பதனை நன்கறிவோம். ஏனெனில் முன்னர் ஏற்பட்ட ஈழப்போராட்டங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. ஆளுங்கட்சியான அதிமுக (எம்.ஜி.ஆர்) எவ்வளவுதான் ஈழமக்களுக்காக ஆதரவளித்தாலும் தனக்கு மட்டுமே தமிழ் சொந்தம், தமிழன் சொந்தம், தமிழனின் பிரச்னைகளை தான் மட்டுமே பேசவேண்டும்,தனக்காக போராடும் தலைவர் என தமிழனுக்கு என் பெயரே தெரியவேண்டும், தமிழனின் பிரச்னைகளைவைத்து தான் மட்டுமே அரசியல் பண்ணவேண்டும் என்கிறதான பிடிவாதம் அல்லது அடங்கமாட்டாத அச்சத்தின் வெளிப்பாடே எதையும் செய்யும் மடமை திமுகவிடம் இருக்கிறது என்பதை அன்றைய அரசியலில் மட்டுமின்றி இன்றைய நிலைபாடுகளிலும் வெட்டவெளிச்சமாக வெளிப்படுகிறது.

இப்போது அதே திமுக அதிகாரத்தில் இருக்கிறதென்பதால் எப்படி தமிழுணர்வு தன்னைவிட தன்னால் தாழ்த்தப்பட்ட கட்சிகளுக்கு வரலாம், தான் இருக்கையில் தன்னையல்லவா இந்த சில்லுண்டிக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எப்படி போரடவேண்டுமென்று கேட்டிருக்கவேண்டும் அப்படி கேட்டிருந்தால் தன் ஆட்சிக்கு ஆபத்துவராமலும் அதே நேரத்தில் தமிழுணர்வு குன்றாமலும் எப்படி? யாரிடம் கோரிக்கைவைத்து கடிதம் எழுதி போட்டுவிட்டு நாம் நம்வேலையை பார்ப்பது என்று சொல்லிக்கொடுத்திருக்கலாம் அல்லவா? அதை விட்டுவிட்டு தன் தமிழுணர்வை பங்குபோட்டுக்கொண்டு களத்தில் இறங்கினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்கிற கதியில்தான் திமுகவின் செயல்பாடுகள் இருக்கின்றன. காயத்திற்கு மருந்துபோடுவற்கு பதிலாக காயம்பட்ட இடத்தை தடவிக்கொடுத்தால் போதுமா எனன? தன் அதிகாரத்தைவைத்து ஈழமக்களுக்காக போராடாவிட்டாலும் பரவாயில்லை குறைந்த அளவு போராடுபவர்களை தண்டிக்காமலாவது இருக்கலாம் அல்லவா! அதைவிட்டு மனுக்களும், கோரிக்கைகளும், மனித சங்கிலி போராட்டங்களும், நிதி சேகரிப்புகளும் என எதற்கும் உதவாத செயல்பாடுகளினால் தன் தமிழுணர்வு அணைந்துவிடாமல் பாதுகாப்பாக நடந்துகொள்வ‌தாக‌ எண்ணி இன‌ உண‌ர்வாள‌ர்க‌ள் க‌ண்க‌ளில் ம‌ண்தூவுகிற‌து.

ஈழ ஆதரவுப் பேச்சாளர்களை கைது செய்வ‌தானது ஈழமக்கள் மீது விழும் குண்டைவிட ஆபத்தானது. ஏனெனில் தலையில் குண்டுவிழுந்தால் உடனே இறந்துவிடக்கூடும்! ஆனால் அவர்களுக்காக போராடுபவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அடக்கமுயல்வதும், மீறிப்போராடினால் உன் சகவாழ்க்கை பாதிக்கப்படும், உன் குடும்பம் பாதிக்கப்படும், உன் சொத்துக்கள் பாதிக்கப்படும் அல்லது சேதப்படுத்தப்படும் என மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது ஈழத் தமிழர் தலையில் வண்டிகணக்கில் குண்டைப் போடுவதைவிட கொடுமையானது.

ஈழத்தில் இலங்கை பேரினவாதம் இன அழிவைத் தொடங்கினால் அதன் எதிரொலியாக தமிழகத்தில் எங்கெல்லாம் ஆதரவு அலைகள் பீறிட்டுக் கிளம்பும் என்று இந்திய உளவுப் பிரிவினர் முன்னதாக தங்கள் எசமானர்களுக்குத் தெரிவித்துவிடுகின்ற‌ன. எனவே இலங்கை அரசிற்கு தங்களால் என்னமாதிரியான உதவிகள் செய்யலாம் என்பதை பல மாதங்களுக்கு முன்னமே நடுவண் அரசும், மாநில அரசும் கூடி திட்டமிடத் தொடங்கிவிட்டன. அப்படியே திட்டமிட்டப்படி இரண்டுபேரின‌வாதங்களும் செயல்படவும் தொடங்கிவிட்டன. அதில் நேரடியானது மத்திய அரசு இலங்கைக்கு படைகளையும், கருவிகளையும் அனுப்பிவைத்து முடிந்தமட்டும் தானே முன்னின்று போரைநடத்துவது அதே நேரம் மாநில அரசானது இதற்கு எதிரான குரல்களை நசுக்குவது என திறம்படச் செய்து ந‌டுவ‌ண‌ர‌சுக்கு துணை நிற்கிற‌து.

போராட்டம் கிளம்பும் என்று அவர்கள் எதிர்ப்பார்த்த தளங்கள் மூன்றுதான்:

1.மாணவர் போராட்டம், 2. வழக்கறிஞர்கள் போராட்டம், 3. எதிர்கட்சிகளுடன் தன்னால் எப்போதும் ஒதுக்கப்படுகிற தமிழார்வல‌ர் அமைப்புகள் எனவே இதை நன்கறிந்த ஆளும் அதிகாரம் இவற்றை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நீர்த்துப்போகச் செய்ய அனைத்து திட்டங்களையும் செவ்வனே தீட்டி அதன்படி நடைமுறைபடுத்தியும் வருகிறது. ஆளும்அதிகாரவர்க்கமே எதிர்பாராமல் நடந்தவைகள் தான் தீக்குளிப்புகள்! நல்லவேலையாக அதையும் உடன் தனது திட்டத்தில் இணைத்துக்கொண்டது.

முதலில் தீக்குளிப்புகளை பார்ப்போம்.அதிகாரவர்க்கமே எதிர்பாராமல் நடந்து உலக அளவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திய திரு.முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்கு முதலில் ஆடிப்போனாலும் பிறகு சமாளித்துக்கொண்டு தனது ஆதரவாளர்களைக் கொண்டு உடலை கைப்பற்றி மீண்டும் எரித்து சாம்பலையும் கரைத்துவிட்டு ஓய்ந்தது.இதில் முத்துக்குமாரின் கோரிக்கையான தன் உடலைக் கைப்பற்றி ஈழப்பிரச்னை தீரும்வரை போராட‌ வேண்டும் என்கிறது எப்படி அழகாக மறக்கப்பட்டது என்பதை நன்கறிவோம்.
கூடுதலாக தீக்குளிப்போர் குடும்பத்திற்கு பணம் வழங்கி நீர்த்துப்போக செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் உதவுவதில் உள்ள அரசியலை சற்று ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே விளங்கிக்கொள்ள இயலும். தொடர்ந்து தீக்குளிப்புகள் நடந்தால் அது பணத்திற்காகவே என கொச்சைப்படுத்தி போராட்டம் என்பது நீர்த்துப்போகச் செய்ய தோதாக இருக்குமல்லவா. இருந்தும் முத்துக்குமாரின் பெற்றோர் வாங்க மறுத்ததால் ஆளும் அதிகார வர்க்கம் ஆடிப்போகவில்லை எனெனில் அதுவும் மிச்சமாகிவிட்டது. முத்துக்குமாரை தொடர்ந்து தீக்குளித்தவர்கள் எல்லாம் ஏழைகள்தான் அவனிடம் உணர்வு மட்டுமே இருக்கும் உணவு இருக்காது நாம் தான் நமது 40 ஆண்டுகால அரசியலில் அதற்குண்டான வேலை எதுவும் செய்யவில்லையே என கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது. இவர்களுக்கு நட்சத்திரவிடுதியில் எவனுக்காவது ஆபத்தென்றால்தான் முகாமிட்டு பாதுகாப்பு கொடுப்பார்கள். அவர்கள் தேச‌ பக்தர்கள்! அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கவேண்டுமென கிளர்ந்து எழும்பும். இனி எத்தனை தீக்குளிப்புகள் நடந்தாலும் கவலையில்லை என கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலேயே ஆளும் அதிகாரவர்க்கத்தின் அரசியல் என்ன என்பது புரிந்து இருக்கும்.

மாணவர் போராட்டம்:
மாணவர் போராட்டம் கிளம்பியதும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவார்ந்த சட்டத்தை நீட்டித் தடுத்து நிறுத்தப்பார்த்தது. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனில் எதற்காக பொருளியல், அரசியல்,சமுகவியல் என பாடத்திட்டங்களை வைத்தார்கள் என விளங்கவில்லை. அதற்கு பதில் அதிகாரவர்க்கத்துடன் கைக்கோர்ப்பது முதல் கழுவி விடுவதுவரை என பாடத்திட்டங்களை அமைத்தால் இவர்களுக்கு நிறைய "வீராச்சாமிகள்" கிடைப்பார்கள் அல்லவா!

மாணவர்களை அடக்குவது அல்லது அவர்களுக்கு விடுமுறை என்கிற பெயரில் களைப்பது அல்லது அவர்தம் பெற்றோர்களை அழைத்து எதிர்காலம் கெடும் என்கிற அறிவுரை என்பதுபோல் அச்சப்படுத்துவது, இறுதியாக கல்லூரி அதிகாரங்களுடன் சேர்ந்து மதிப்பெண்குறைப்பு, ஒழுக்கக்கேடு என மிரட்டுவது வரை அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி இறுதியில் வெற்றியும் கண்டது என்பது தற்போதைய நிலையைவைத்து உணரமுடிகிறது.

வழக்கறிகஞர்கள் போராட்டம்:
ஈழத்தமிழர் என்றில்லை எந்த போராட்டங்களாயினும் முதலில் களமிறங்கி பெரும் வீரிய்த்துடன் போராடுவது வழக்கறிஞர்கள்தான் என்பதை, தன் கடந்த கால அனுபவத்தில் நன்கு உணர்ந்த அதிகார வர்க்கம் வழக்கறிஞர்கள் போராட்டம் உச்ச நிலையில் இருக்கும் போது பொறியில் தேங்காய்வைத்து எலி பிடிப்பதுப்போல் சுப்பரமணியம் சாமியைவைத்து நடத்திய நாடகத்தில் மாட்டிக்கொண்ட வழக்கறிஞர்களை அடித்து துவைத்து இதெல்லாம் ஈழப்போராட்டத்தின் விளைவுதான் வழக்கறிஞர்கள் போராடியதால்தான் அவர்களுக்கு இப்படியானது என்று பிரச்னையை திசைதிருப்பிவிட்டது.

இதற்கு தகுந்தார்ப்போல் ஆளும் அதிகாரவர்க்கத்தால் மூளைச் சலவை செய்து அனுப்பப்பட்ட "கிருஷ்ணா கமிஷன்" வழக்கறிஞர்கள் மீதுதான் தவறு அவர்கள் ஆளும் அதிகாரத்திற்கு எதிராக போராடி இருக்கவேகூடாது என்கிற ரீதியில் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன எழுதிக்கொடுத்ததோ அதை அப்படியே திருப்பிக்கொடுத்து, வழக்கறிஞர்களை கூண்டிலேற்றி வழக்கை மாற்றி அவர்கள் பக்கமே குற்றதை தள்ளிவிட்டது. தற்போது வழக்கறிஞர்கள் தங்களின் உரிமைகளைக்கேட்டு போராடும் படியானதில் ஆளும் அதிகாரவர்க்கம் மனதுக்குள் கைத்தட்டி ஆராவாரம் செய்வதை இன்றைக்கு ஈழப்பிரச்னனயில் வெகுதூரம் போய்விட்ட வழக்கறிஞர்களின் நிலையை பார்த்தால் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழுணர்வாளர் போராட்டம்:
சக அரசியல் கட்சிகளின் போராட்டத்தை அடக்குவதற்கு ஆளும் அதிகாரவர்க்கம் அவ்வளவு சிர‌மம் எடுத்துக்கொள்ளவிலை. தான் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் சாதிய உணர்வு தேர்தல் நேரத்தில் கிளம்பினால் அல்லது கிளப்பபட்டால் எப்படியும் தமிழின உணர்வும், ஈழப்பிரச்னையும் தானாக நீர்த்துப்போகும் எனறு தெரியாதா என்ன? அதுமட்டுமல்ல வாரிசு அரசியலுக்கு தயாராகிவிட்ட கட்சிகளும், இன்னும் பெருங்கட்சிகளால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட கட்சிகளும், எப்போதும் ஈரத்துணிபோர்த்திய கோழியைப் போலிருக்கும் பொதுவுடமை கட்சிகளும், தன் இருட்டு இதயத்தில் மட்டும் இருக்கப்பழகிக்கொண்ட இதர கட்சிகளும் சேர்ந்து மூன்றாவது கூட்டணி அமைத்துவிடாமல் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையும், தமிழகத்தில் தங்களால் ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கும் சாதிய ஓட்டு அரசியலும் தன்னைவிட்டால் இவர்களுக்கு அண்டிப்பிழைக்க வேறுவழியே இல்லை என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் நன்கு அறிந்துவைத்திருக்கிறது.

அதற்குத் தகுந்தாற் போல் அரசியல் ஆதாயம் தேடும் சுயநல கட்சிகளும், அமைப்புகளும் ஈழப்பிரச்னைகளுக்கு போராடுவதைவிட்டு கையை உதறிக்கொண்டு தங்கள் கட்சிகளுக்கு ஓட்டு ஆதாயம் சேகரிக்கும்பொருட்டு இறங்கிவிட்டதால் இதற்காகத் தனியே திட்டம் எதுவும் போடாமலேயே நிலைமை தங்களுக்கு சாதகமாவது உணர்ந்து ஆளும் அதிகாரவர்க்கம் தனக்குள்ளேயே கைத்தட்டிக்கொண்டது. இதில் பாதிக்கப்பட்டது உண்மையான தமிழுணர்வுள்ள கட்சிகளும், தமிழுணர்வாளர்களும், தீக்குளித்தவர்களின் குடும்பங்களும், மனதிலும் உடலிலும் காயபட்டவர்களும்தான் இதுவும் ஒருவகை தனிமைபடுத்துதலே இதிலும் அதிகார வர்க்கத்திற்கு வெற்றிதான் எனலாம்.

ஊடகங்களின் நிலைப்பாடு:
இப்படிபட்ட நிலையில் ஊடகங்களின் பங்கானது எப்படியிருக்கிறது என்பதை பார்த்தோமானால் நமக்கு நாமே நொந்துக்கொள்வதை தவிர வேறுவழியில்லை. ஏனனெனில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது என்று நம் ஊடகங்கள் சில நேரம் கூக்குரலிடுவதை பார்த்திருக்கலாம் அது எப்போது நிகழ்கிறது என்பதை நாம் சரியாக உணரவேண்டும். எப்போதேல்லாம் தங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இவை குரல் கொடுக்கும் மற்றப்படி மக்களின் மனதை நிமிடத்திற்கு ஒருதரம் மாற்றும் வல்லமை படைத்தவையாக இருந்தபோதும் பெரும்பாலும் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன திட்டமிடுகிறது என்பதனை வெளிப்படையாக நிறைய ஊடங்கள் வெளிப்படுத்துவதில்லை. சில வேலைகளில் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன சொல்லிக்கொடுக்கிறதோ அதை பல ஊடகங்கள் பறை சாற்றுகின்றன எனலாம்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைநிலையையும், அவர்களுக்காக போராடுபவர்களின் நிலைகளையும், அதற்கு ஆளும் அதிகாரவர்க்கம் போட்டுவைத்திருக்கும் தடைகளையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பு ஊடகங்களிடமே இருக்கிறது. மாறாக இப்போது ஊடகங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறது எனில் எந்த ஒரு பிரச்னை கிளம்புகிறதோ அவற்றை சுடச்சுட வியாபாரமாக்கதான் முயற்சிக்கின்றன. எப்போதும் ஊடகங்கள் எழுதியிருக்கும் கதை வசனங்களையே மக்களும் தங்கள் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்கின்றனர். அடுத்த பிரச்னை எழும்வரை ஊடக‌ங்கள் எதை சொல்லுகின்றவோ அதையே நம்புகின்றார்கள். பிறகு ஊடகங்கள் புதிய பிரச்னைகளுக்கு தாவினால் மக்களும் நேற்றைய பிரச்னைகளை அடியோடு மறந்துவிட்டு அதை அம்போவென விட்டுவிட்டு புதிய பிரச்னைக்கு தாவிவிடுகின்றனர்.

இதனால் இதை உணர்ந்த ஆளும் அதிகாரவர்க்கமும், அரசியல் கட்சிகளும், வியாபார சந்தையும் தங்களுக்கென ஊடகங்களை ஏற்படுத்திக்கொண்டு தாங்கள் கூறும் கட்டுக்கதைகளுக்கு ஏற்ப மக்களை ஆட்டுவிக்கின்றன. உண்மையில் இப்படியிருக்கலாம் அப்படியிருக்கலாம் இப்படிநடந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் கற்பனையில் மிதப்பதை தங்களின் கற்பனை வளத்துடன் இணைத்து அதை அச்சாக்கி அதே மக்களிடமே விற்று காசாக்கி அந்த மக்களே அறியாவண்ணம் அவர்களை விவாதிக்கவைக்கின்றன.

இதில் மக்களின் மனநிலையும் ஊடகத்துடன் ஒத்துப்போகின்றன எனலாம் ஏனெனில் ஊடகங்கள் எதைப்பற்றி பேசுகிறதோ அதுதான் மக்களுக்கும் வேதவாக்காக அமைகிறது.மக்கள் தங்கள் நிலையிலிருந்து சிந்தித்து விவாதங்களையோ, போராட்டங்களையோ நடத்துவதென்பது இயல்பில் நடைபெறாமலேயே போய்விட்டது எனலாம். எனெனில் ஊடகங்கள் தங்கள் வியாபாரங்களை பெருக்கிக்கொள்ள இன்று கும்பகோணம் குழந்தைகளை பற்றி எழுதினால் மக்களும் அதையே பேசுவார்கள். அதேப்போல் அரசியல் ஊழல்கள், தருமபுரி பேருந்து எரிப்பு, சக்கீலா படம், அரசியல் கொலைகள், மானாட மயிலாட, தொலைக்காட்சி தொடர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம் இன்று இவற்றைப்போலவே ஈழப்பிரச்னையும் பேசப்படுகிறது.
எல்லாவற்றிக்கும் ஊடகத்தையே நம்பும் மக்களும் ஊடகம் தவிர்த்த சிந்தனைகளில் ஈடுபடுவதேயில்லை. குறிப்பாக ஆளூம் அதிகாரத்தில் இருப்பவர்களோ, அல்லது கட்சிகளோ தாங்கள் பிரச்னைகளை எந்த கோணத்தில் பார்க்கின்றவோ அதே கோணத்தில் தான் மக்களிடையே பரப்புகின்றனர்.

இத்தனை தடைகளையும் மீறி பெரும் பரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்த ஈழமக்களுக்கான போராட்டங்கள், விவாதங்கள் இன்று தேர்தல் என்கிற மனநிலைமாற்று அரசியலால் நீர்த்துப்போய்கிடக்கின்றன. இந்த தொய்வைப் பயன்படுத்திக்கொண்ட ஆளும் அதிகாரவர்க்கமும் ஈழப் பேரினவாத அரசுடன் கைக்கோர்த்து இன அழிவை இந்த தேர்தலுக்குமுன் முடித்துவிடுமாறு அர‌ச தூத‌ர்க‌ளை அனுப்பி இர‌க‌சிய‌ம் சொல்கிற‌து.

கட்சிமாறல்,ஆட்சிமாறலுக்கு வழிவகுக்கலாம்;அதுவே ஈழத்தமிழர்களுக்கு விடிவேற்படுத்துமா?
ஈழ ஆதரவுக்கு கைகோர்த்துவிட்டு எதிரெதிர் அணிகளில் அடைக்கலம் கொண்டு வாக்காளர்களை ஒருபுறம் குழப்பிவிட்டு அதிலும் குளிர்காய எத்தனிக்கும் இந்த அரசியல் சாக்கடையின் முடைநாற்றம் ஈழத்தமிழர்களின் நாசிகளில் அருவெறுப்பாய், விடமாய் பரவிக் குமட்ட வைத்துள்ளது! இந்த நாடகங்களை நமது வாக்காளர்கள் மெளனமாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்ன செய்ய?
ஈழத்தமிழருக்காய் அவர் தம் விடிவுக்காய் யாருமில்லையே எனற ஏக்கத்தோடும் வேதனையோடும் இன்றைக்கு வாக்காளர்கள்!
நாளை வாக்களிக்கும்போது கண்டிப்பாக இது எதிரொலிக்கும்!.

இயற்கை நனைக்கும் கவிஞன்... மஸ்கட் பஷீரின் "பாலைவன பூக்கள்" கவிதைநூல் பார்வை

அழுத்தமே ஆதரமாகிபோன அவசர வாழ்க்கையில் அவரவர் தனித்த வாழ்வின் அழுத்த சூழல் பலரை அரபு நாடுகளுக்கு அள்ளிவீசியது. அவசரமாக சம்பாதித்து, அவரமாக சிலவு செய்து, அவரமாகவே சென்றுவிடும் நடைமுறைகளுக்கிடையில் அழுத்திக்கொண்டிருக்கும் வாழ்வினை அதன் போக்கில்விட்டு, நிகழ்கால நிதர்சனத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் இன்ப துன்பங்களை கவிதை செய்து அழுத்தத்தை குறைத்து வாழ்க்கையினை அழகாக்கிக்கொள்ள கவிஞர்களுக்கு மட்டுமே நேரம் கிடைக்கிறது. அத்தகையதொரு வாழ்க்கை நேசத்தின் கவிதை சமைப்பவராக மஸ்கட் பஷீர் தெரிகிறார்.
வெந்தோம், தின்றோம், சென்றோம் என்றில்லாமல் இயற்கையினையும், தான் சார்ந்த மனிதயினத்தின் அவலங்களையும் சிந்திக்க முடிகிறதென்றால் “வாழ்க்கையே நீ தரும் அழுத்தங்கள் புலம்பெயர் கவிஞர்களின் காலுக்கு தூசு” என்பதுபோல் அரபுநாடுகளில் வாழ்ந்தாலும் மறபு மாறாமல் தாயகம் நோக்கியே தங்களின் சிந்தனைகளை வைத்திருக்கும் கவிஞர்கள் இருக்கும் வரை “மெல்லத் தமிழ் இனி சாகும்” தருணங்களை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருக்கும் என்பதில் அய்யமில்லை. தாயக தமிழர்கள் கொன்றாலும் தமிழ்த்தூக்கி நிறுத்த நாமிருபோம் என்கின்றன பஷீரின் கவிதைகள்.

புலம்பெயர்ந்த தமிழன் ஒன்று கவலையில் மாண்டுபோவான் இல்லை கவிதையில் மீண்டுவாழ்வான் என்பதற்கிணங்க அரபுநாடுகள் உறுவாக்கிய கவிஞர்கள் ஏராளாம். இங்கே பொருள் கிடைக்கிறது வாழ்வின் இருளும் கிடைக்கிறது, பொருளை அனுப்பிவிட்டு இருளைவைத்து இலக்கியம் செய்ய எம்மால் மட்டுமே இயலும் என சமகால கவிஞர் பஷீர் அரபுநாட்டு கவிஞர்களின் வரிசையில் சேர்ந்துக் கொள்கிறார்.

தொகுப்பில் தொடக்க கவிதைகள் குறும்பா (ஹைக்கூ) வடிவில் சென்றாலும் போக போக கவிஞரின் கோபம் சமூக அளவங்களை நோக்கி நீள் கவிதைகளாக நீள்கின்றன.

தமிழகத்தில் மின்சாரத்தால்
மரணம் இல்லை
தாளார மின் தடை


தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இயற்கையாக வந்ததல்ல தமிழகம் முழுதும் கூடங்குளங்களை கொண்டுவர அரசு நடத்தும் அநாகரீக தடையிது. மின் தடையால் மரணங்கள் இல்லை என்று சொல்ல இயலாது ஏனெனில் கொலை,கொள்ளை பெருகி எப்போதும் அரசு கொடுமைக்காரனுக்கானது என்பதனை நிரூபித்தே வருகிறது.
தாய்மொழி மறுப்பில் தமிழனை விஞ்ச ஆளில்லை ஆனால் எல்லா மொழி காக்கைகளும் தமிழிலேயே உறவுகளை அழைக்கின்றன என்பதனை

தமிழைவிற்று
தடுமாறி ஆங்கிலம்பேசி
தற்பெருமை கொள்வதில்லை


என்று தமிழ் பெருமை சொல்கிறது காகம். ஆறறிவு என்று அலட்டிகொள்வதில் அவமானம் இல்லையோ நமக்கு, ஆம் பெரும் இன அழிப்பையே பொருமையாக வேடிக்கை பார்த்தவர்களாயிற்றே நாம், தமிழன் காக்கைகளிடம் கற்கவேண்டும் “காக்கை” குணம்.
இயற்கை வளங்களை அழிப்பதில் இந்தியா முதலிடத்தில் இருகிறதாம். இந்தியா என்றால் இயற்கை... இயற்கை என்றால் இந்தியா என்ற காலம் போய் இன்று இந்திய திருநாட்டில் காசுக்காக இயற்கைவளங்கள் விற்கப்படுகின்றன. காடுகள் வளர நம்மை அழிப்பதில்லை நாம் வளர காடு அழித்தோம். பூமியே பொருமைக்கு ஆதாரம் அதன் பொருமை எல்லையை கடந்ததால் பூமி தன்னை சரிபடுத்திக்கொள்ளவே நடுக்கத்தையும், மண் சரிவுகளையும், மழை வெள்ளத்தையும் துணைக்கு அழைக்கிறது நாம் தான் அதை “இயற்கை சீற்றம்” என மாற்றி பேசுகிறோம்.

வீட்டுக்கு ஒரு
மரம்வை
முடியாவிட்டால்
வெட்டும் கோடாரியை
சிறை வை..


என்கிறார் பஷீர். இப்படி இயற்கை விரோதியான மனிதனைதான் உத்ராகாண்டில் உலுக்கி எடுத்தது. இது இயற்கைத்தாய் நமக்கு அடித்திருக்கும் எச்சரிக்கை மணி. புரிந்தால் பூமியை நாம் ஆளலாம் புரியாததுப்போல் நடித்தால் பூமி நம்மை ஆளும். மண்தான் வெல்லும் என்பதுதானே இயற்கை மரபு.

புலம்பெர்யர்ந்த வாழ்க்கை தேடலில் பஷீர் புனைந்து புனைந்து கவிதை செய்திருப்பது அழகு. இலக்கியத்தின் அத்தனை மரபுகளையும் அறிந்துதான் இலக்கியம் படைக்கவேண்டும் என்கிற இலக்கிய திருடர்களுக்கு பல கவிதைகள் படைவிரட்டியாக அமைகின்றன. ஹைக்கூ தொடங்கி இலக்கியத்தின் எண்ண ஓட்டங்கள் விரிந்து எழுத்து ஓட்டங்கள் சுருங்கினாலும் இன்னமும் வசன கவிதைகளை வடிக்கும் கவிஞர்கள் வளமாகதான் இருக்கிறார்கள்.

அன்பர் பஷீரின் கவிதைகள் எண்ண ஓட்டத்தில் எழுத்து வேகமெடுத்தாலும் பரந்துகொண்டிருக்கும் வாழ்க்கை சூழலில் குறுங்கவிதைகளை படிக்கவே நேரம் இல்லாத வாசகனுக்கு நெடுங்கவிதைகள் கொஞ்சம் நெளியவைக்கலாம். எண்ணத்தை விரிவுபடுத்தும் பஷீர்கள் எழுத்தை சுருக்கி கருத்தை கவிதையாக்க வேண்டுமென்பது வாசகனாகவும், சமகால படைப்பாளியாகவும் என் கருத்து.

கவிதையையும், வாழ்க்கையையும் இயற்கையாக வாழத்தெரிந்த மஸ்கட் பஷீர் புலம்பெயர் கவிஞர்களில் ஒருவராகவும், தமிழிலக்கிய உலகின் சிறந்த படைப்பாளியாகவும் மிளிர தோழமையோடு வாழ்த்துகிறேன்.

கவிமதி
துபாயிலிருந்து...
10 ஆகஸ்ட் 2013

தஸ்லிமா

புகைமூட்டத்தில் கண்கள் எரிய மூக்கை சிந்தி சிந்தி அழுகையை அடுப்படிக்கு மேல் வெளிவாராமல் அடக்கிக்கொள்ளும் அல்லது அடக்க வைக்கப்படும் முஸ்லீம் பெண்களுக்கிடையில் முளைத்த ஒரு வரலாற்று நெருஞ்சி...

பழைமைச்சொல்லி,வேதம் சொல்லி, கட்டுப்பாடுகள் சொல்லி பெண்ணை படுக்கையறை தாண்டவிடாத கயவர்களின் கண்களை தோண்டும் காகித வேல்.சன்னல் கம்பிகள் உடைத்து சனங்களின் கவிதைப்பாடும் ஒரு இனப்புயல்.அச்சம்,மடம்,நாணம்,பயிற்பு என்ற குறுகிய சிறையுடைத்த எழுத்தாணி.

"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய
மக்களை அவமதிக்கிறதோ,
எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,
எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்"


என்பது தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்களின் கூக்குரல் அல்ல... பெண் குலம் சொல்லி கட்டைவிரலுக்குமேல் கண்களை தூக்காதே என்பதற்கெதிரான கலகக்குரல்.
அத்தகைய கலகக்குரல்தான் என் காதுமடல் பிடித்து தூக்கி நிறுத்துகிறது.கடந்த 500 ஆண்டுகாலம் ஆணாதிக்கமே பேசிப்பேசி, புளித்துவிட்ட இலக்கியத்தை கேட்டுக்கேட்டு ஆகா போட்டுக்கொண்டிருப்பவர்களை ஒரு சாக்கடையை கடப்பதுப்போல் கடந்துவிட்டு, பேசட்டும் பெண்கள் பேசட்டும் தவறுயிருப்பின் தட்டிக்கேளுங்கள் இப்போதல்ல இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து என்கிற என் வேள்விக்கு தஸ்லீமாக்களின் இயக்கம் ஒரு போர்க்கருவி.

பூஞ்சை பிடித்த உங்கள் சட்டங்களால் மவுனமாக்கி விட முடியாது தஸ்லீமாக்களை, அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒலித்து ஒலித்து ஒலித்து நீங்கள் செவிப்பறைகள் கிழிய அலறிகொண்டே ஓடவேண்டும். இதோ தஸ்லிமாக்களின் பின்னால் தடிபிடித்து நிற்கிறேன். இங்கேயும் தேவைபடுகிறது வன்முறைக்கெதிரான வன்முறை. என்ன செய்ய திணித்தவர்கள் நீங்கள்தானே...

இனிமேல் அவர் பேசட்டும் நான் பொத்திக்கொண்டு ஒதுங்குகிறேன்.

--தோழமையோடு கவிமதி.

கிழக்கு பாகிஸ்தானின் மைகேன்சிங்கில் ஆகஸ்டு மாதம் 1962ல் பிறந்தார். 1971 க்கும் பின் அவர் பிறந்த இடம் பங்களாதேஷ் என தனி நாடாக அறிவிக்கப்பட்டு விட்டது.

அறிவியல் பாடத்தில் கல்வியைத் தொடர்ந்தாலும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம். அவர் வளர்ந்த சூழல் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாகும். தனது பதினைந்தாவது வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். செஞ்சுதி (1978-1983) என்னும் இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
தனது மருத்துவக் கல்லூரியின் இலக்கிய அமைப்புக்கு தலைவராக இருந்து பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். 1984ல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற அவர் எட்டு ஆண்டுகள் பொது மருத்துவமனையில் பணியாற்றினார்.

1986 ல் முதல் கவிதை நூல் வெளியானது. 1989 ல் வெளியான அவரது இரண்டாவது கவிதை நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்து எழுதத் துவங்கினார். மதம், பாரம்பரியம், கட்டுபாடான பண்பாடு, என அனைத்து குறித்தும் எந்த தயக்கமும் இல்லாமல் எழுதினார். தஸ்லீமாவின் எழுத்துகளில் உண்மையின் கடுமையும் கூர்மையும் ஆணாதிக்கத்தை கொஞ்சமும் தயங்காமல் தனது எழுத்துகளில் அம்பலப் படுத்திய தைரியமும் படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விரும்பினார்கள் பலர். வெறுத்தவர் சிலர்.

இதோ கோடி தஸ்லிமாக்களின் ஒற்றைக்குரல்...
------------------------------------------
எல்லை பிரக்ஞைக்கு திரும்பியது உலகை பார்க்க, நுகர,
உணர, கேட்க வேண்டி வாசலைக் கடக்கையில்
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்
இந்தச் சுவர்களே உனது வெளி
இந்த மேற்கூரை உனது வானம்
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்
இந்த தலையணைகள் இந்த வாசமிகு சோப்
இந்த டால்கம் பவுடர் இந்த வெங்காயங்கள்
இந்த ஜாடி, இந்த ஊசி
மற்றும் பூ வேலைப்பாடு
தலையணை உறைகள்
இவைகள்தான் உனது வாழ்க்கை

அடுத்தப் பக்கத்தில்
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை
எங்ஙனம் பார்ப்பது?
பின்கேட்டை திறந்து கொண்டு
போகும் அவள்
போகாதே என தடுக்கப்படுகிறாள்.
தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்
இந்த கீரையை, இந்த கொடியை
அடிக்கடி கவனித்துக் கொள்
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை
இந்த தூய்மையான பசுமை பரப்பை
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை
இந்த மணம் வீசும் மண்ணை
இவையனைத்தும் தான்
உனது உலகம்.

மலிவாய் கிடைப்பன
சந்தையில் பெண்களை விட மலிவாய் ஏதுமில்லை
அவர்களுக்கு சாய புட்டிகள் கொடுத்துவிட்டால்
மகிழ்ச்சியில் தூக்கம் விலக்குவார்கள் இரவெல்லாம்
அவர்கள் தோலில் தேய்க்க சோப்புக் கட்டிகளும்
மயிர்களில் பூச வாசனை எண்ணெயும்
கொடுத்துவிட்டால் அடிமையாகி விடுவார்கள்
அவர்கள் மாமிசதிட்டுகளை அள்ளி
வாரமிருமுறை சந்தையில் விற்க தயாராகி விடுவார்கள்
அவர்கள் மூக்கிற்கு நகை கிடைத்து விட்டால்
எழுபது நாட்களுக்கும் மேலாக கால் நக்குவார்கள்
ஒரு சுற்றுச் சேலை என்றால்
மூன்றரை மாதங்களுக்கு தொடர்வார்கள்
கரும்புள்ளிகள் கொண்ட வீட்டு நாய் கூட
எப்பொழுதாவது குரைத்து விடும்
ஆனால் மலிவாய் வாங்கப் பட்ட பெண்களின்
வாயில் பூட்டு
தங்கப் பூட்டு
0
தஸ்லீமா நஸ்ரின்
0
தமிழில் : ஆனந்த செல்வி

தஸ்லீமாவின் தளம்: http://taslimanasrin.com/index2.html

Thursday, November 13, 2014

அறிவோம் ஆத்திசூடியை ஆங்கிலத்தில் உலகறியச் செய்வோம்

Let's Spread Aathisudi to the World!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அஃகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார் / Ovvaiyaar

Saturday, August 16, 2014

ஊடக சுதந்திரமும் – அவமானமும்

முஸ்லீம்கள் மீதான ஊடக பயங்கரவாதம்.


ஊடக நிலைப்பாடு

தாமதிக்கப்பட்ட நீதி எப்படி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதோ அதேப்போல் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் நடுநிலை வகிப்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போவதேயன்றி வேறில்லை. இங்கே பயங்கரவாதம் என்று தொடங்கியவுடன் நமது பொது புத்தியில் பட்டென தோன்றும் காட்சிகள் ஏதோ ஒரு இயக்கத்தின் ஆவேச நடவடிக்கையோ என்றுதான் தோன்றும் ஆனால் நாம் இங்கே பார்க்கபோவது உலகில் உள்ள ஒரு சில இயக்கங்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதங்களைவிட கொடியதான "ஊடக பயங்கரவாதம்" என்ன? ஊடக பயங்கரவாதமாவென... உங்கள் புருவங்கள் உயரலாம், ஆம் அதுவே உண்மை ஏனெனில் தத்துவாதிரமான இயக்கங்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதம் உயிர்களைதான் கொல்லும் தவறாக வெளியிடப்படும் பத்திரிக்கை பயங்கரவாதமோ நிகழ்வில் கொஞ்சமும் சம்மந்தபடாத பல்லாயிர கணக்கான அப்பாவிகளது உணர்வுகளையும் கொல்லும்.

இது ஒரு முட்டாள்தனமான வாதம் என்றுக்கூட பலருக்கு தோன்றலாம் ஆனால் நமக்கு தெரிந்தே ஒரு புறம் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட இனம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டும் குறிவைத்து நிகழ்த்தப்படும் பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதமானது உலக முஸ்லீம் சமூகத்தினர் மீதும், சிறுபான்மை நாடுகள், இனங்கள் மீதும் கட்டமைக்கப்பட்டு அவர்கள் குறித்து உலகத்திற்கு தவறான பல செய்திகளை கொடுத்து குறிப்பிட்ட இனமக்களை சமூக மைய நீரோட்டத்திலிருந்து விலக்க நினைத்து உள்நாடுகள் முதல் உலக நாடுகள் வரை ஒரு மறைமுக பயங்கரவாதத்தினை ஊடகங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இவ்வித பயங்கரவாதத்திற்கு பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளாகி கிடப்பது முஸ்லீம் சமூக மக்களே என்பதனை நாம் நன்கறிவோம்.

இப்பாதக செயலில் மிக முக்கிய பங்கு வகிப்பது இந்திய ஊடகங்கள் எனலாம் ஏனெனில் இன்று தகவல் துறை  மிக வேகமாகவும் காத்திரமாகவும் வளர்ந்துவிட்ட ஒரு துறையாக இருப்பதாலும் அதிலும் முக்கியமாக ஊடகத்துறை காணப்படுவதாலும் தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டதை நாம் அறிவோம். உலகின் எந்த ஒரு மூலையில் நடைபெறும் ஒரு சிறுநிகழ்வும் ஒரு சில நொடிகளில் மற்றொரு மூலைக்கு சென்றடைவதும் அந்த நிகழ்வின் வீச்சுக்கேற்ப உலகின் பல பகுதிகளில் உள்ளூர் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பலவிதமான திடீர் செயல்பாடுகள் மாறுபடுவதும் அறிந்த ஒன்றே.

இப்படியான துரித செயல் ஓட்டம் மிகுந்த ஊடக வளர்ச்சியால் உலக மக்களில் அனைவரும் தகவல்களை நொடிக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளவும் தங்களுக்கு தேவையான தேவையற்ற தகவல்களை உடனுக்குடன் பெற்று கொள்ளும் பெரும் வசதியினையும் பெற்றுள்ளனர் என்பதனை நாம் மறுக்க இயலாது. எந்த ஒரு நல்ல/ தீய செய்தியாக இருக்கட்டும் அது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நமது வரவேற்பறைக்கும், கைப்பேசிக்கும் வந்துவிடுகிறது. இந்த வகையில் தகவல்களை வழங்குவதில் ஊடகங்களின் பங்கு மிக கடமையுணர்வுள்ளது மட்டுமல்ல மிகமிக முக்கியமானதும், மிகப் பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒரு சமூக பணியுமாகும். இதைவைத்துதான் ஊடகம் என்பது ஒரு நாட்டின் முகெலும்பிற்கு சமமான ஒன்று என்பதான நிலைப்பாடு எழுகிறது. ஊடகங்கள் தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை அலசி அராய்ந்து பார்க்காமலும், தகவலின் உண்மைத் தன்மையினை அறிந்துக்கொள்ளாமலும், நாகரிகமான முறையில் அவற்றை செழுமைபடுத்தாமலும் ஏதோ தகவல் கிடைத்துவிட்டது அதை உடனே தங்கள் ஊடகமூலம் வழங்கி தாங்கள்தான் அதிவே செய்தியாளர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எந்த ஒரு செய்தியையும் ஒரு பக்க சார்பாகவோ, உண்மைக்கு புறம்பாகவோ வழங்கக் கூடாது என்பதனை ஊடகங்களும் அதன் பொருப்பாளர்களும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.


ஊடக தர்மம்
ஊடக தர்மம் என்பது நம்மூர் ஊடகங்களுக்கு ஏட்டுச்சுரைக்காய் மட்டுமல்ல ஏடுகள் வழியாக நிகழ்த்தும் அதர்மகங்கள் என்றுதான் சொல்லவேண்டும். தனக்கு பிடித்த, பிடிக்காத தனிமனித அல்லது இயக்க அரசியல் ஏற்ற தாழ்விற்கு இடம்கொடுத்து  தங்களை அறிந்தே ஊடகங்கள் தங்களை விற்றுவிடுவதும் பிறகு அதிலிருந்து மீள மனமில்லாமல் அதிலேயே கிடந்து புரண்டுக் கொண்டு இருப்பதற்கும் காரணம் அதிலிருந்து தங்களுக்கு கிடைக்கும் அதீத லாபமான பணம்.. பணம்... பணம்... மட்டுமே. ஏனெனில் ஒரு பத்திரகை செய்தியானது எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய்வதைவிட இச்செய்தி சமூகத்தில் எவ்வித பரபரப்பை ஏற்படுத்தும் அதன்மூலம் தங்கள் பத்திரிக்கைக்கு எவ்வளவு பணமும் பெயரையும் வாங்கிக்கொடுக்கும் என்பதை பொருத்தே அமைகிறது. இதை தவிர்த்து சமூக அக்கரை, மறுமலர்ச்சி என்கிற பம்மாத்துகளை அவ்வப்போது அவிழ்த்துவிடவும் தவறுவதில்லை. ஏனெனில் ஊடக தர்மம் எதை சொல்லுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அடிமை மனப்பாண்மைதான் மக்களிடமும் பரந்துக்கிடக்கிறது. இதை நன்கு புரிந்துக்கொண்ட ஊடகங்கள் "நன்றாக தங்கள் தொழிலை" வளர்த்துக்கொள்கின்றன.

இப்படி ஊடக தர்மம் என்கிற நாடகங்களை நிகழ்த்திக்கு கொண்டு  தான் சமூக அக்கரையுள்ள ஒரே ஊடகம் என்பதாக மக்களை ஏம்மாற்றி பணம் சம்பாதிக்கும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தும் படியாக உலகப் புகழ்பெற்ற, மிக முக்கிய ஊடகங்களில் ஒன்றான ‘பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் சர்வீஸ்’ (பி.பி.சி.)யின் இயக்குனர் ஜார்ஜ் என்ட்விஸ்டில் ஒரு தவறான செய்தியை தனது பொறுப்பில் இருக்கும் பி.பி.சி. வெளியிட்டுவிட்டது என்பதால்! விலகியிருப்பது ஒரு ஊடக நேர்மையினை காட்டுகிறது.

‘ஒரு நாய்க்கு தண்டனை கொடுப்பதாக இருந்தாலும் விசாரித்து அதன்மேல் குற்றம் இருப்பதாக தெரிந்தால்  மட்டுமே கொடுக்கப்படும்’ என்பது பிரிட்டன் சட்டத்தின் முக்கிய அம்சமாக பல தருணங்களில் பலராலும் மேற்கோள் காட்டப்படும் ஒரு சொற்றொடர். இங்கிலாந்து நாட்டின் சட்டம் மட்டுமல்ல, ஊடகங்களும் இந்த தர்மத்தை பின்பற்ற முடிந்தவரையில் முயற்சித்து வருவதைத்தான் பி.பி.சி.யின் இயக்குனர் தனது பதவியை விட்டு விலகியிருப்பதிலிருந்து தெரிகிறது.


எதெற்கெடுத்தாலும் வளர்ந்த நாடுகளை மேற்கோள்காட்டி எழுதும் நமதூர் ஊடகங்கள் இதை வகையாக மறந்துவிட்டது மட்டுமல்ல எப்போதும் அவதூறுகளையும், பொய் புரட்டுகளையும் மட்டுமே எழுதி பழகிவிட்டதால் இது தங்களுக்கானதல்ல என கண்டுக்கொள்லாமல் விட்டிருக்கலாம் அப்படியே வெளியிட்டிருந்தாலும் நமது ஊடகங்களின் தாரக மந்திரமான "பரபரபிற்காக" மட்டுமே என்று நாம்தான் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமது ஊடகம் மீதான மக்களின் நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் ஊடக தர்மம் என்பது தன்னால் தன்பொருப்பில் இருக்கும் ஒரு ஊடகத்தால் பங்கம் விளைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தனது உயரிய பதவியை தாமே முன்வந்து துறநத ஜார்ஜ் எண்ட்விஸ்டில் போன்ற ஊடகவியலாளர்கள் எங்கே... சொந்த இனத்துக்கே துரோகம் செய்து பணம் பார்க்கும் இந்திய ஊடகக்காரர்கள் எங்கே... பி.பி.சி. தன் செய்தி தவறாக அமைந்துவிட்டதற்காக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. மன்னிப்பு கேட்டது. இதேப்போல் எத்தனையோ தவறான செய்தியினை இந்திய ஊடகங்கள் அட்டை படத்தில் போட்டுவிட்டு பிறகு அது தவறு என்று பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பினால் எங்கே தமது பணம் சம்மாதிக்கும் வியாபாரத்திற்கு கேடுவந்துவிடுமோவென அஞ்சி தன் தவற்றை "ரொம்ப உணர்ந்தவர்களாக" காட்டிக்கொள்ள தனது மறுப்பு செய்தியினை ஒரு சிறு பெட்டி செய்தியாக வெளியிட்டு தங்களை சமூக அக்கரையுள்ளவர்களாக காட்டிக்கொள்ளுவார்கள்.

தன்பொருப்பில் இருக்கும் ஊடகம் செய்தது தவறு என்று அந்த நிறுவனத்தின் பொறுப்பாளரே பதவி விலகியிருக்கிறார். இதே அளவுகோலை இந்திய/தமிழக ஊடகத்துறையுடன் பொருத்திப் பார்த்தால், பெரும்பான்மையான பத்திரிகைகளின் ஆசிரியரும், நிர்வாக இயக்குனரும் பதவியில் இருக்க முடியாது, ஊடகம் என்கிற பெயரில் தன்மானத்தை விற்று பணம் சம்பாதித்து கொழுக்கும் முதலாளிகளும் இருக்க முடியாது எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு போகவேண்டுயதுதான்.
இதற்கு சான்றாக எத்தனையோ நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.

பத்திரிக்கை சுதந்திரம்.
இந்த ஒரு சொல் படுத்துகிற பாடு இருக்கே சொல்லி மாளாது. இந்த பத்திரிக்கை சுதந்திரம் என்கிற பெயரில் இவர்கள் இருப்பதை எழுதினால் பரவாயில்லை இல்லாததும், தங்கள் கற்பனைக்கு உதிக்கிரதையும் எழுதுவது. ஒரு சிறிய செய்தி கிடைத்தால் அதற்கு கை,கால்கள் வைத்து தங்கள் கற்பனைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக திரைக்கதை அமைத்து பிரச்னை பெரிதாக்கி தங்கள் ஊடக சுதந்திரத்தை நிலை நாட்ட தவறுவதில்லை. உண்மையான சமூக பிரச்னை கண்டு ஓடிவிடுகிற ஊடக சுதந்திரம் பொய் புகட்டுகளை எழுதும்போது மட்டும் கரைபுரண்டு வந்துவிடும் இப்படியான பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பிற்குள்ளானவர்கள் ஏதாவது தட்டிக்கேட்டால் ஓ பாருங்கள் எங்களது பத்திரிக்கை சுதந்திரத்தை பரிக்கிறார் என்பதாக கூச்சலிடும்.
சினிமா கிசுகிசுகளையும், சினிமா உலக  பரபரப்புகளையும் காசாக்கும் பத்திரிக்கை சுதந்திரத்தை யாரும் தடுக்கப்போவதில்லை மாறாக இவர்கள் வெளியிடும் ஆபாச படங்களுக்கும், செய்திகளுக்கும்  இவர்களுக்கு இல்லாத சுதந்திரமா! பெரும்பாலும் கிசுகிசு எழுதினால் யாரும் வந்துக்கேட்கபோவதில்லை என்கிற துணிவினை அப்படியே சமூக நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துவதால்தான் நாம் பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசவேண்டியிருக்கிறது.

எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கையாளர் சொன்னது "சென்னையில் ஒரு காவலர் புகார் கொடுக்கவரும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ளுவதை ஆய்வு செய்தவர் அது உண்மை என்கிற செய்தியினை சேகரித்து அதை உடனே வெளியிடாமல் சமமந்த பட்ட காவலரிடம் போய் இதுப்பற்றி பேசியபோது "நீ வெளியிட்டுக்கொள் எனக்கு என்ன கவலை" என்பதுப்போல் பேசியிருக்கிறார் இருந்தும் அந்த காவலருக்கு வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் இருப்பதால் இதை எழுதாமல் விட்டேன்" என்றார். ஏன் செய்திதான் கிடைத்துவிட்டதே என்பதற்காக தனது பத்திரிக்கை சுதந்திரத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா. அவர் பத்திரிக்கை தர்மம்/ பத்திரிக்கை சுதந்திரம் என்றால் என்ன என்பதை உண்மையாக புரிந்து செயல்பட்டதால் சமூகத்தில் அந்த பெண்பிள்ளைகள் தலைநிமிர்ந்து நடக்க இயலுமா என்பதை யோசித்து எழுதாமல் விட்டிருக்கிறார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்பது உண்மையினை எவருக்கும் அஞ்சாமல் எழுதுவதில்தான் இருக்கிறது. மாறாக பொய்,புரட்டுகளையோ, கற்பனை வடிவாக்கங்களையோ எழுதி சமூக அமைதியில் தேவையற்ற பிரழ்வுகளை ஏற்படுத்தி தங்கள் பத்திரிக்கையினை பரபரப்பாக்கி பணம் சம்பாதிப்பதில் இல்லை என்பதை ஊடகவியலாளர்கள் உணர்ந்தாலே ஊடக பயங்கரவாதங்கள் தடுக்கபடும். 

முஸ்லீம்கள் மீதான ஊடக பயங்கரவாதம்.
இதில் சிறுபான்மையினத்தவர் என்கிற முழுபட்டியலையும் இணைத்துக்கொள்ளலாம் ஏனெனில் உலகில் ஊடக பயங்கரவாதங்களால் பாதிக்கப்படுவதில் உலக சிறுபான்மையினத்தவரே அதிகம் இதை ஏன் ஆணித்தரமாக நம்மால் சொல்லமுடிகிறது எனில் உலகில் எங்கு ஒரு நோய் பரவினாலும் உடனே அது ஆப்ரிக்காவிலிருந்து பரவியிருக்கலாம் என்றும், எங்காவது ஒரு புரட்சியோ, மக்கள் விரோத போக்குகளோ நிகழ்த்தப்படும் எனில் உடனே அது முசுலீம் தீவிரவாதிகளால் இருக்கிமோ என்கிறதான அனுமானங்களை ஊடகங்கள் அழித்துவிட்டு தங்களின் விற்பனை மதிப்பை கூட்டிக்கொள்ளுவதுடன் சம்மந்தபட்ட நாட்டின் அரசியல் அதிகாரங்களுக்கு தாங்கள் அடிமைகள் என்பதனையும் வெளிகாட்டிக்கொண்டு பெருமிதம் கொள்ளும்.
ஆளும் வர்க்கத்திற்கோ, தான்சார்ந்த சாதி,மத தலைவர்களுக்கோ, மக்களின் பொதுபுத்திக்கோ எதை கொடுத்தால் தத்தமத்து விற்பனை கூடுவதுடன் தான் எப்போதும் ஒரு நடுநிலை நாளேடு என்பதை சொல்லக்கூட பத்திரிக்கைகளுக்கு அவ்வப்போது முஸீலிம்கள் குறித்து ஏதாவது செய்தி வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதில் தங்களுக்கு நிகர் தாங்களே என மார்தட்டிக்கொள்ளுவதில் உலக அளவில் இந்திய ஊடகங்களே முதலிடதில் இருக்கின்றன. இதற்கு சான்று பகிர்வதுப்போல் இந்திய அரசியலில் நடக்கும் நாடகங்களுக்கும், அரசியல்காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் கலவரங்களுக்கும் இந்திய ஊடகங்கள் இராஜபாட்டை போட்டுத்தருகின்றன என்றால் மிகையாகாது.
தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை அலசி அவற்றின் உண்மைத் தன்மையினை அறிந்து நாகரிகமான முறையிலும் தாங்கள் வெளியிடப்போகும் செய்தியால் மக்கள் மத்தியில் என்ன மனநிலை மாற்றங்கள் நிகழும் என்பதும் அதன் தொடர்ச்சியாக செய்தியில் சம்மந்தப்பட்ட சமூகம் எவ்விதத்தில் பாதிபுக்குள்ளாகும் என்கிறவற்றை ஆய்வு செய்யும் மனபக்குவமோ, சமூக அக்கரையோ இந்திய ஊடகங்களுக்கு சிறிதளவேனும் இருப்பதில்லை. எந்த ஒரு செய்தியினையும் பக்க சார்பாகவோ உண்மைக்கு புறம்பாகவோ வழங்கக் கூடாது என்கிற பொதுஅறிவுக்கூட நமது இந்திய ஊடகங்களுக்கு இருப்பதில்லை இந்த ஒருநிலை சார்ந்த ஊடக மனநிலை இந்திய சூழலில் ஒரு பாசிச வன்மங்களாகவோ, சாதிய அரசியல் சார்ந்தோ எல்லாவற்றிகும் மேலாக தாங்கள் வாங்கிய தொகைக்கு விசுவாசமாகவோ எடுக்கப்படுகிறது என்பதனை நமது இந்திய ஊடகங்கள் முசுலீம்கள் விசயத்தில் பல பொய் பரப்புரைகள் மூலம் நிரூபித்திருக்கின்றன என்றால் அது பொய்யில்லை.

தங்களுக்கு கிடைக்கும் செய்தியில் ஒரு பக்க சார்பின்மை, உண்மை தன்மை என்பது ஊடக தர்மமாக பார்க்கப் படுவதற்கு பதிலாக இந்துத்துவ அரசியல் சார்புதான் அதிக படியான இந்திய பத்திரிக்கைகளில் பரவிகிடக்கின்றது. ஊடகம் என்பது ஒரு செய்தியினை உடனுக்குடன் வழங்கும் அவசர உத்திகளை கையாளும் அதே நேரம் வழங்குகின்ற செய்திகள் மக்கள் மத்தியில் வேறு ஒரு கருத்தில் புரியப்பட்டு செய்தியில் சம்மந்தப்பட்ட இனம் ஒட்டு மொத்த இந்திய பொதுபுத்தியில் தவறாக புரிந்துக்கொள்ள நேரும் என்கிற பொருப்பின்மையும், செய்தியில் இருக்கும் நேர்மையும் கெடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் ஒரு ஊடகவியலாளனின் கடமையாகும் என்பதனை புரிந்துக்கொண்டே தவிர்த்து எழுதும் மன பிரழ்ந்த நிலையினைதான் இந்திய ஊடகங்கள் முசுலீம்கள் விசயத்தில் கையாள்கின்றன.
எனவே ஊடகம் என்பது ஒரு சமுக சீர்திருத்தத்திற்கான கருவி என்பதோ, சமூக நல்லிணக்க நகர்வுக்கான ஒரு பாதை என்பதையோ புரிந்து அதை சரியாக பயன்படுத்தும் நேர்மை உலக முசுலீம்கள் விசயத்தில் இந்திய ஊடகங்களுக்கு இல்லாமல் போனது கவலைக்கிடமான ஒன்று மட்டுமல்ல இந்திய இறையாண்மை என்பதின் கேள்விக்குறியாகவும் படுகிறது.
இந்திய ஊடகங்களின் பயங்கரவாத பார்வை உலக முசுலீம்கள் மீது மட்டும் ஒரு நிலை சார்பாக பதிந்துவிட்டதற்கான காரணங்களை நாம் ஆராய தேவையில்லை என எண்ணுகிறேன். ஏனெனில் உலக அளவில் நிகழ்த்தப்படும் அரசியல் நகர்வுகளில் இசுலாம், இசுலாம் அல்லாத என்கிற இரண்டே அளவுகோள்பிடித்துதான் நிகழ்த்தப்படும் இதை உள்வாங்கும் இந்திய ஊடகங்கள் இந்துவ பாசிச கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் இச்செய்தி எந்தவகையில் உறுதுணையாக இருக்கும் என்பதனை உணர்ந்தே வெளியிடப்பட்டு ஒட்டு மொத்த இந்திய முசுலீம்களின் இந்திய சார்புநிலைக்கு வேட்டுவைக்க நினைக்கின்றன. இது பல சந்தர்ப்பங்களில் தோல்வியை கண்டாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு வெற்றியைதான் தந்திருக்கின்றன என்பதற்கு ஆங்காங்கே நடைபெரும் கைதுகளும், தண்டனைகளும், போலி என்கவுண்டர்களும் உறுபடுத்திவிடுகின்றன.
இந்த ஊடக ஒருநிலை சார்புடைய தன்மை என்பது காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை ஒரே தன்மையுடையதாக இருப்பதன் நோக்கம் நமக்கு அதிர்வை தருகிறது. "இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேய எதிர்ப்பு ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு தங்களது மதகோட்பாடுகளில் எவ்வித சமரசமும் செய்துக்கொள்ளாமல் போராடிய இசுலாமிய களவீரர்களுக்கு சுதந்திர இந்தியாவில் எந்த நிலை தரப்படுகிறது என்பதுதான் இந்திய இறையாண்மையினை கேள்விக்குறியாக்குகிறது". இந்நிலை தொடர்ந்து நிகழ்த்தப்படுமெனில் ஊடகங்கள் மீதான மக்களின் நம்பிக்கையின்மை தளர்ந்து வெருப்புக்குள்ளாகும் அதே நேரத்தில் தங்கள் சொந்த நாட்டின் ஒரு இன மக்கள்மீதான வெறுப்பு எதிர் இனத்திரிடையே வளர்ந்து வளர்ந்து எதிர்கால இந்திய கூட்டு இறையாண்மைக்கே வேட்டுவைக்கும் நிலை ஏற்படலாம் என்பதும் கண்கூடு.
காஷ்மீரில் ஒரு இந்திய முசுலீம் கைதாகிறான் எனில் அது காஷ்மீரின் உள்ளூர் பிரச்னைக்காக கூட இருக்கலாம். காஷ்மீர மக்கள் தங்களின் தனிமனித சுதந்திரம் அல்லது வாழ்வுரிமையில் இந்திய அரசு தலையிடுவதை எதிர்த்து களமாடி இருக்கலாம் ஒரு காஷ்மீரி இந்திய அரசை எதிர்த்த விடயம் ஊடகங்களால் பயங்காரவாதமாக கட்டமைக்கப்பட்டு தங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதனை உணராத கன்னியாக்குமரி மக்களுக்கு முசுலீம் பயங்கரவாதம் என்கிறதாக மூளை சலவை செய்யப்படுவதாகவே படுகிறது.
உலக ஊடக பயங்கரவாத அளவுகோலினால் பார்த்தோமானால் இந்திய ஊடகங்களுக்கு இல்லாத பத்திரிக்கை சுதந்திரம் உலக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதாவென ஒரு அய்யம் ஏற்படுகிறது. ஏனெனில் இதுவரை உலக ஊடகங்கள் குறிப்பாக இசுரேலிய பின்னணியில் இயங்கும் ஊடகங்கள் வேண்டுமென்றே இசுலாமிய மத கோட்பாடுகளை சீண்டிப்பார்ப்பதிலேயே தங்களின் பத்திரிக்கை விளம்பரத்தினை வளர்த்துக் கொள்ளுகின்றன என்பதை பல நிகழ்வுகளிலும், செய்தி வெளியிடலிலும் நாம் அறிந்திருக்கிறோம்.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டுமெனில் அமெரிக்காவில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட "INNOCENCE" படத்தின் முன்னோட்டம் வெளியான போது உலக முஸ்லீம்களிடையே கிளர்ந்த எதிர்ப்புக்குரல் ஒருபுரமிருக்க மேலும் உலக இஸ்லாமியர்களின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக சார்லி ஹெப்டோ என்கிற பிரரெஞ்சு பத்திரிக்கை நபிகளின் படத்தை நிர்வாண கேலிச் சித்திரமாக வெளியிட்டு மேலும் கடுப்பை கிளப்பியது. இவற்றை கண்டித்து அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான அல்ஜீரிய ஜனநாயக ஒன்றியமும், அரேபிய ஒன்றிய அமைப்பும் இணைந்து சுமார் 780,000 யூரோ இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தன (வெரும் இழப்பீடு தொகை இதற்கு தீர்வாகது என்பது எமது கருத்து) இவற்றை எதிர்க்கும்விதமாக எதிரிகள் தரப்பில் வாதாடும் ரிச்சர்ட் மால்கா என்கிற வழக்கறிஞர் கூறுகையில் "மதங்களை நகைச்சுவை பண்புடன் விமர்ச்சிக்கும் பிரஞ்சு மரபை உடைப்பதாக" வாதாடினார்.

ஒரு மதத்தின் கோட்பாடுகளையோ, வழிபடும் தன்மைகளையோ விமர்ச்சிக்கும்போது அது ஒருநிலை சார்பாகவோ சம்மந்தப்பட்ட மதத்தினை ஏற்றுக்கொண்ட மக்களின் மனதினை வேதனைபடுத்தும் விதமாகவோ அமைய கூடாது என்பதனை கிருத்தவ மத அடிப்படையிலான பிரிவினைகளை இருவேறு "கிருத்துவ அமைப்புகள் ஒருவருக்கொருவர் விமர்சிக்கும்போது அது கருத்து கலந்தாய்வுகளாகவே இருத்தல்வேண்டும் மாறாக ஒரு கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட இன்னொரு கிருத்துவ மக்களின் கருத்தினை கேளி செய்வதாக இருத்தல் கூடாது" என்பதனை ரோமானிய கத்தோலிக்க மற்றும் பெந்தகொஸ்தே அமைப்புகளுக்கிடையேயான மோதலின்போது இதே பிரஞ்சு நீதிமன்றம் கண்டித்ததாக எங்கோ படித்த நினைவு. இதே கண்டிப்பு இசுலாமிய மத கோட்பாடுகளை கேளி செய்யும் யூத,கிருத்தவ பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும் என்பதை அந்த வழக்கறிஞரின் மண்டைக்குள் ஏற்றுவதோடு இசுலாமிய எதிர்ப்பு என்றவுடன் கோவணத்தை வரிந்துக்கட்டுக்கொண்டு இறங்க நினைக்கும் ஊடக பயங்கரவாதத்தினையும் கண்டித்தே தீரவேண்டும்.
இப்படியான கண்டிப்புகளை எதோ சம்மந்தப்பட்ட இசுலாமிய அமைப்புகள் மட்டுமே முன்னெடுக்க வேண்டும் என்று கைகழுவி விட்டுவிடாமல் இத்தகைய ஊடக பயங்கரவாதங்களுக்கு எதிராக பிர ஊடகங்களும், பிரமதங்களும் கூட முன்னெடுக்க வேண்டும். ஏனனெனில் கேளிச்சித்திரங்கள்தானே என கிருத்தவ மத நம்பிக்கைகளை இதுவரை எந்த இசுலாமிய பத்திரிகையும் வெளியிட்டு அவமான படுத்தியாதவோ, வழக்கு தொடர்ந்ததாகவோ உலகளவில் செய்திகள் இல்லை.
உலக பத்திரிக்கை பயங்கரவாதம் என்பது இசுலாமிய கருத்தியல் கேளிக்கையாக மட்டுமே நின்றுவிட இந்திய பத்திரிக்கை பயங்கரவாதம் என்பது கருத்தியலுடன் சேர்ந்த இந்திய எளியமக்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாகவே நிகழ்த்தப்படுகிறது. இந்தியாவில் ஏதாவது மூளையில் ஒரு சில முஸ்லீம்கள் இந்திய சட்டமீறல் அடிப்படையிலான வேறு வழக்குகளில் (ஒரு சாதாரன சந்தேக வழக்காகக்கூட இருக்கலாம்) சிக்கிக்கொண்டாலும்கூட உடனடியாக அது ஒரு பயங்கரவாத செயலாக உருமாற்றப்பட்டு அவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை இருக்கும் இசுலாமியர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்கிற ஊடக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அவரை ஒரு தீவிரவாதியாக உறுதிபடுத்தும்வரை ஓயமாட்டோம் என்கிறரீதியில் குதிக்க தவறுவதில்லை.
இதேப்போல் இந்தியாவில் பலமுறை இந்துத்துவ தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கும் உடனடியான இசுலாமிய தீவிரவாதம் என்கிற வண்ணம் பூசப்படுவதும். இந்தியாவிலேயே அதிசிறந்த!!! அத்வானி போன்ற இந்துத்துவ அரசியல்வாதிகள் இது பாகிஸ்தானின் உளவுப்பிரிவின் வேலையாகவோ, இந்திய முசுலீம் அமைப்புகளின் வேலையாகவோ இருக்கக்கூடும் என்பதாக எதாவதொரு பத்திரிக்கையில் கருத்து வெளியிடுவதால் சம்மந்தப்பட்ட நிகழ்விற்கான வழக்கின் போக்கை மாற்றும் வகையிலேயே அமைந்துவிடுகிறது. இதுபோன்ற கருத்து அத்வானியால் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கருத்துகூறப்பட்டு விசாரணையின் போக்கை மாற்றியது நினைவிருக்கலாம். இதேபோன்றே மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இசுலாமிய தீவிரவாதம்தான் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய பத்திரிக்கை பயங்கரவாதம் பின் தொடர்ந்த விசாரணையில் அது "இந்து தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது" என்பதையும்  முக்கிய குற்றவாளியாக பெண் சாமியார் சாத்விபிரக்னயா கைது செய்யப்பட்டார் என்று உறுதிசெய்துக் கொண்ட பின்னரும் இச்செயலுக்காக இசுலாமியர்களிடம் மன்னிப்போ, தங்களது ஊடகங்களில் மறுப்போ வெளியிடவில்லை என்பதே இசுலாமியர்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் எது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
இந்நிலை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் சம்மந்தமே இல்லாத அப்பாவிகளை சந்தேகத்தின் பேரில் நள்ளிரவில் கைது செய்வதும், அவர்களை விசாரணை என்கிற பெயரில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் நடந்தேரியது. இப்படியான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் ஊடகங்கள் தங்கள் இறையாண்மையினை இந்துவத்திற்கு சாதகமாக எழுதிவிடுவதால் சம்மந்தபட்ட வழக்குகளின் விசாரணையின் போக்கு மாறி கைதானவர் மற்றுமின்றி அவர்சார்ந்த குடும்பத்தாரும், அவர்தம் சமூகமும், அவர் நம்பிக்கை கொண்ட மத கோட்பாடுகளும் வெரும் வாய்களின் அவலாக மெல்லப்படும் அபாயகரமான பயங்கரவாதத்தினை வளர்ப்பதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கே சார்ரும் என்பதில் மாற்று கருத்தில்லை.
இதேப்போல் அண்மையில் ஏதாவதொரு வழக்கில் தேடப்படும் முஸ்லீம் குற்றவாளி எங்காவது கைது செய்யப்பட்டால் அத்துடன் பழைய நிகழ்வுகளையும் தூது தட்டி இணைத்து மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் சம்மந்தமில்லாமல் இதற்குமுன் இன்ன இன்ன தீவிரவாதிகள் இங்கேதான் கைது செய்யப்பட்டார்கள், இவர்களுக்கும் அவனுக்கும் தொடர்பா? இந்த ஊர் தீவிரவாதிகளின் கோட்டையா? என்றெல்லாம் புனைந்து ஒரு அப்பட்டமான திரைக்கதையாக எழுதி வெளியிட்டு தங்களின் வியாபாரத்தையும், இந்துத்துவ சிந்தனையினையும் பரப்பிக்கொள்ளுவதில் முனைந்து நிற்கின்றன. அதுவும் ஒரு பத்திரிக்கை வெளியிடும் பொய் செய்தியினை மீண்டும் திரித்து இன்னும் சில பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இவை அனைத்தும் ஒரே சமூகத்தின் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றனவே தவிர வேறொன்றும் இல்லை. இதே நிலையில் இந்தியாவில் பல இடங்களில் இந்துதீவிரவாதிகளால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், வன்முறை பேச்சுகள், வன்முறை தூண்டல்கள் அதை தொடர்ந்த கலவரங்கள் என எதுவும் பரவலாக வெளிக்கொண்டுவருவதில்லை இந்த ஊடகங்கள். இவற்றை வெளிக்கொண்டுவராமல் இருக்க இந்துத்துவ அரசியல்வாதிகளால் இவர்கள் "நன்றாக கவனிக்கபடுவது" மற்றுமின்றி, எதை எழுதவேண்டும் எப்போது எழுத வேண்டும் என்பது உள்பட பாடம் எடுப்பதும் உண்டாம்.

இதை எப்படி நம்மால் இவ்வளவு ஆணித்தரமாக உணர முடிகிறது என்பதை /நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நேர ஊடக தர்மங்கள் விலக்குகின்றன. தேர்தலின் போது எல்லா ஊடகங்களும் மோடி புராணம் பாடியதை நாம் அறிவோம். இதனால் பாமர மக்களின் மனபிரழ்வு நிகழ்திருப்பதையும் அதை தொடர்ந்த அரசியல் மாற்றத்தையும் நம்மால் உணர முடிகிறது. ஒரு ஊடகம் என்பது எந்நிலையிலும் தனது தர்மம் தவறாது நடத்தல் வேண்டும் அது தவறப்படுகிறது என்றால் அத்தகைய ஊடகம் சமூகத்திலிருந்து விளக்கப்பட வேண்டும் ஏனெனில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஊடகமும் சமூகத்திற்கான செய்தி  வழங்குதலுக்கு தகுதியற்றவை என்றே நாம் கூற இயலும்.

மேலும் பொருள் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்க குறிப்பிட்ட இசுலாமிய மக்களின் மீது மட்டும் வெருப்பை உமிழும்படி ஊடக தர்மம் செயல்படுவது அழகும் அல்ல தர்மமும் அல்ல என்பதனை ஊடவியலாளர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். மேலும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக ஒருபோதும் உலகளவில் இஸ்லாம் மதமோ அதை பின்பற்றும் முசுலீம்களோ இருக்கப்போவதில்லை என்பதையும் தெள்ளத்தளிவாக ஊடகவியலாளர்கள் உணர்ந்து அப்படிபட்ட முசுலீம் சமூகத்தின் உணர்வுகளோ அல்லது இந்திய இறையாண்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்கிற சமூக நல்லிணகத்திற்கு தங்கள் ஊடகம் வெளியிடும் தவறான செய்திகள் வழிவகுக்கக்கூடாது என்பதையும் உணர்ந்து, முசுலீம்கள் குறித்த ஒரு செய்தி கிடைக்கிறதெனில் அதன் உண்மை தன்மையினை அறியும்விதம் பல நிலைகளில் ஆய்வு செய்து செய்தியில் துளியேனும் கற்பனை கலக்காமல் வெளியிட வேண்டும் எனவும். தொடர்ந்து முசுலீம் சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையே இருக்கும் நல்லுறவினையும் பேணவேண்டும் எனவும் வளியுறுத்து கூறிக்கொள்ளுவதில் கடமை பட்டிருக்கிறோம்.

http://www.pnotimes.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/ 
துபை.12.08.2014
(கட்டுரைக்கு தேவையான குறிப்புகள் வலைதளங்களில் எடுக்கப்பட்டவையே நம் கற்பனையல்ல)