நிலவியல் காலக்கணக்கிலிருந்து, பிரிவுகளிலிருந்து எந்தெந்த வகை உயிரினங்கள் எந்தெந்த யுகத்தில், எந்தெந்த பீரிடில், எந்தெந்த எப்போக்கில் வாழ்ந்தன என்பதை அப்பிரிவுகளில் கிடைக்கும் ஃபாசில்களிலிருந்து கணக்கிட்டுள்ளனர், சான்றாக,
1.புது யுகத்தில் மனிதன் தோன்றினான், பாலூட்டிகளும் தோன்றிய. இந்த யுகத்தில் பாலூட்டிகளின் காலம் (Age
of Mammals) என்பர்.
2.நடு யுகத்தில் பூக்காத தாவரங்களும் நிறைந்திருந்தன. இந்த யுகத்தை ஊர்வனவற்றின் காலம் (Age
of Reptils) என்பர்.
3.தொல்யுகத்தில் இலையுள்ள தாவரங்கள், கடல் வாழ்ஒட்டுடலிகள், நீர் நில வாழ்வன, பூச்சி வகைகள் ஆகிய நிறைந்திருந்தன .இந்த யுகத்தை பழைமையான உயிரினத்தின் காலம் (Age
of Ancient life ) என்பர்.
4.தொல் யுகத்தின் முந்தைய யுகமாகும் புரோடெசோயிக் யுகத்தில்தான்
"பாக்டீரியா "போன்ற தாவரங்கள் தோன்றின.
எனவே நமக்குக் கிடைக்கும் ஃபாசில்கள் எந்த யுகத்தின் பாறை அடுக்கிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பாறையின் அடுக்கிலிருந்து
(Rocklayer) கிடைக்கின்றனவோ அந்தப் பாறையின் காலத்தில்தான் அந்த ஃபாசில்களுடைய உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
நிலவியல் கால அளவையை
(Geological time scale) இன்னும் சிறிது விரிவாகப் பார்ப்போம். ஆய்வாளர்களின் சிலர் இன்றைய நாளிலிருந்து 57கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலத்தை
1.முதல் அயான்
2.இரண்டாவது அயான்
3.மூன்றாவது அயான்
4.நான்காவது அயான்
5.ஐந்தாவது அயான்.
என ஐந்து அயான்களாகப் பிரித்துள்ளனர். சைபரிலிருந்து57(0---57)கோடி ஆண்டுகளிலுள்ள பகுதிகளில் மாற்றமில்லை.
ஆய்வாளர்களில் வேறு சிலர் இந்த கால அளவை
1.அயான்.
2.ஈரா---யுகம்.
3.பீரிட்
4.எப்போக்
என்கின்ற நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஆர்க்கியன் சோயிக் புரொட்டரோ சோயிக் என்பனவற்றை அயான்பிரிவில் சேர்த்துள்ளார். ஆக, அயான் பிரிவில்1.ஆர்க்கியன்சோயிக்
2.புரொட்டெரோசோயிக்
3.ஃபெனரோசோயிக் என்கிற மூன்று பிரிவுகள் உள்ளன.
1.ஆர்க்கியன்:
இது நீடித்த காலம் இன்றைய நாளிலிருந்து 250கோடி ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து 500கோடி ஆண்டுகள் வரையாகும்.
2.புரொடெரோசோயிக் அயான்:
இது நீடித்த காலம் இன்றைய நாளிலிருந்து 57கோடி ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து 250கோடி ஆண்டுகள் வரையாகும்.
250--57=193கோடி ஆண்டுக்கும்.
ஃபெனரோசோயிக் அயான்:
இது நீடித்த காலம் இன்றைய நாளிலிருந்து சைபரிலிருந்து
57(0----57)கோடி ஆண்டுகள் வரையாகும். இதைக் கேம்பிரியன் காலம் என்கின்றனர்.
இவற்றுள் ஆர்க்கியன், புரெட்டெரோசோயிக் ஆகிய இரண்டும் பிரிகேம்பியன் என்ற பகுதியிலுள்ள.
பேனாரோசோயிக் அயான் காலத்தின் தொடக்கம்தான் நல்ல ஃபாசில்கள் உருவாகிய காலமாகும்.
இன்றைய நாளிலிருந்து 57 கோடி ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து 400கோடி ஆண்டு வரை அனைத்தும் பிரிகேம்பியன் பகுதியில் அடங்குகின்றன.
பெனோசோயிக் அயான் என்பது.
1.பேலியோசோயிக் ஈரா=32.50
கோடி
2.மெசோசோயிக் ஈரா=18கோடி
3.செனோ சோயிக் ஈரா=6.50கோடி,
ஆக மொத்தம் 57கோடி என்கின்ற மூன்று யுகம் பகுதிகளைக் கொண்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு ,பாறை அடுக்கிலிருந்து கிடைக்கப்பெற்ற ஃபாசில்களின் அடிப்படையில் பூமியின் காலத்தையும் உயிரினங்களின் தோற்றத்தையும் வரையத்துள்ளனர்.
ஆனால், இந்த ஆரியர்கள் ஓரு சதுர்யுகத்தில் மொத்தம்
43,20,000 மானுட ஆண்டுகள் உள்ளன.
இதில் கிருதயுகம்
17,28,000 ஆண்டுகளும்.
திரேதாயுகம்
12,96,000 ஆண்டுகளும்
துவாபரயுகம்
8,64,000ஆண்டுகளும்,கலியுகம் 4,32,000ஆண்டுகளாகவும் ,பிரித்துள்ளனர். இவை எதன் அடிப்படையில் பிரித்துள்ளார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது
இவையில்லாமல் 43,20,000
ஆண்டுகள் கொண்டது 1 சதுர்யுகமென்றும்,
18 சதுர்யுகங்கள் சேர்ந்தது 1 மனுவென்றும்,
74 மனுக்கள் சேர்ந்தது 1 இந்திரன் என்றும்,
270 இந்திரன்கள் சேர்ந்தது 1 பிரம்ம நாள் என்றும்,
30 பிரம்ம நாட்கள் சேர்ந்தது 1 பிரம்ம மாதமென்றும்,
12பிரம்ம மாதங்கள் சேர்ந்தது 1 பிரம்ம ஆண்டென்றும்,
100 பிரம்ம ஆண்டுகள் சேர்ந்தது 1 பிரம்மாவின் ஆயுட்காலமென்றும்
1000சதுர்யுகங்கள் 1கல்பமென்றும்,
2 கல்பங்கள் 1 பிரம்ம மாதமென்றும்,
720 கல்பங்கள் 1 பிரம்ம ஆண்டுமென்றும் கூறி வைத்துள்ளார்கள்.
நன்றிகள்
முகநூல் பதிவு.