Saturday, February 23, 2019

02. மரணம் என்பது யாதெனில்


நமது உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒன்று இயற்கையான காரணங்களால் தன் இயல்பு நிலை இயக்கத்திலிருந்து பாதை விலகி செல்வது அல்லது தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்வதையே நாம் மரணம் என்கிறோம்.

மரணம் நிகழ்வதற்கு இயற்கையான காரணங்களைத் தவிர வேறொன்றுமில்லை, சிலர் தற்கொலை செய்து கொண்டாலும் ஒழிய அதுவும் இயற்கையான மரணமே தற்கொலை என்பதற்கான முயற்சியை மட்டுமே அவர்கள் மேற்கொள்கின்றனர் ஆனால் மரணம் இயற்கையாகவே நிகழ்கிறது. அதாவது மரணத்தை விரும்பியவர் தன் உடலின் இயக்கத்தை தானே நிறுத்த முயல்கிறார். இம்முயற்சியினை காலம் அனுமதித்தால் மட்டுமே மரணமடைவார் காலம் அனுமதிக்காவிட்டால் காப்பாற்றபடுவார். இதனால் தான் 
"புல் தடுக்கி விழுந்தவன் இறந்தான்"
"புரையோடி கிடப்பவன் பிழைத்தான்" என்பார்கள்.

இப்படி இயற்கையான முறையில் நிகழும் மரணங்களை தான், உடல் உறுப்புக்கள் தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொள்வதவதை தான் நாம் இறப்பு என்கிறோம் இதற்கு இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது என்று அறிவியல் ஆய்வுகள் ரீதியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி இயற்கையான முறையில் நிகழும் மரணத்தை வைத்தே பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என மக்களை அச்சுறுத்தும் வகையில் கடவுள் என்றும் கடவுளை வணங்க மதங்கள் என்றும் அம்மதங்களுக்கென்று கடைபிடிக்க பலவகையான சடங்குகள் என்றும் ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனர்.
இதில் கூடுதலாக வேதங்களை நன்கு கற்றறிந்தவர்களாக சிலர் தங்களை பிரகடன படுத்திக் கொள்வதும் அவர்களுக்கு அவர்களை போன்றே ஏமாற்று பேர்வழிகள் கல்லூரிகள் வரை அமைத்து சான்றிதழ் வழங்குவதும் இவர்களின் மூலமே மத சடங்குகள் மக்களுக்கு விவரிக்கப்படும் எனவும் சாமானிய மக்களால் இறைவேதங்களை நேரடியாக புரிந்துகொள்ள முடியாது எனவும் அப்படி புரிந்துகொள்ள முயன்றால் அது பெரும் பாவம் எனவும் சொல்லி சொல்லி மக்களின் மண்டையில் கதைகளை பன்னெடுங்காலமாக அடுக்கி வைத்திருப்பதாலும், மக்களை மரண அச்சத்திலும், சொர்க்கம், நரகம் என்கிற கற்பிதங்களாலும் முட்டாளாகி வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.
இப்படிப்பட்ட பிழைப்பு வாதிகள் மதங்களுக்கு மதம் வேறுபட்டாலும் அடிப்படையில் எல்லாம் ஒன்றே. அது மக்களை முட்டாளாக்குவது என்பதை தவிர வேறில்லை. (தொடரும்...)
என்னுடைய #மதங்கள்_எனும்_கற்பிதங்கள் நூலிலிருந்து...

No comments:

Post a Comment