Monday, November 05, 2018

பரியேறும் பெருமாள்

ஆயிரம் கண்ணாடி ஓடுகளின் மேல் மல்லாக்க கிடத்தி தர தரவென்று இழுத்துச் செல்வதுபோல் இரணமிகுந்த “வலியினை” மீண்டும் என் முதுகில் தடவி பார்த்துக்கொண்டேன். என் தகப்பன் என் கண் முன்னே நிர்வாணமாக்கப்பட்டு நடுத்தெருவில் ஓடுகையில். இந்திய கூட்டு மனசாட்சிக்கான மாட்சிமை தாங்கிய வலிகளை திணித்தே வளைந்த முதுகுகள் எங்களது என அந்த அப்பாவி தகப்பன் கையெடுத்து கும்பிட்டு ஓடும் காட்சி. 

கும்மிடுவது என்னெவோ அவனது கை தான் வெட்கி கூனி குறுகுவதோ இந்திய மதசார்புடைய மேட்டிமை மனிதர்களின் தலைகளும், சாதிய அடக்குமுறைகளுக்கெதிராக வாய்மூடி ஏட்டில் மட்டுமே கிடக்கும் சட்டங்களும் தான். அதில் ஒரு தலை என்னுடையதாகவும் இருக்கும் கையாலாகாத நிலைக்கு நானும் மெளன குற்றவாளிகாகவே நிற்கிறேன்.

“உன் கெளரவம் என்பது நான் உனக்கு போட்ட பிச்சை” என்கிற உரையாடலைவிட எதிர்வினை, எத்தனை அருவாக்கள் எடுத்து வீசினாலும், எத்தனை சட்டங்கள் போட்டு அடக்கினாலும் இயலாது.

சாதிய கெளரவம் என்பது தாழ்த்தப்பட்டு கிடப்பவரது அறவழி காக்கும் அமைதியால் மட்டுமே காக்கப்படுகிறதோடல்லாமல் மேல்சாதிய திமிரால் அடக்கப்பட்டு கிடக்கவில்லை. எங்கெல்லாம் சாது மிரல்கிறதோ அங்கெல்லாம் சாதியத்திமிர் மிரண்டு ஓடுகிறது என்பதனை வரலாறு நிரைய பதிவாகியிருக்கிறது.

ஒரு படத்தின் சில காட்சிகள் குறியீடாக வரலாம் முழுபடமே குறியீடாக வரமுடியுமா என்கிற கேள்வியை உடைத்தெரிந்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.  ”கருப்பி ஆணவக்கொலை” செய்யபடுகிறபோதும், இறுதிக்காட்சியில் ”ஒரு ஆணவநாய்” தற்கொலை செய்துக்கொள்ளுகிற போதும் இது வெறும் மூன்று மணிநேர சினிமா காட்சிகளின் குறியீடுகள் தான் என்று கடந்துவிட இயலாமல், சாதிய கொலைவெறியென்பது எப்படி நரம்பு மண்டலங்களில் புரையோடி கிடக்கிறது என்பதற்காக நாகரீக வளர்ச்சியின் அடையாளங்கள். ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டாலே அது காதல் தான் அவர்கள் ஓடத்தான் போகிறார்கள் அதுவும் இருவேறு சாதிகள் இங்கே எப்படி நண்பர்களாக கூட இணைய இயலும் என்கிற மனதில் படிந்திருக்கும் அழுக்கு சுவர்களை தகர்த்தெரிவதிலே அப்படியொரு நுணுக்கத்தை கையாண்டிருக்கிறார் இயக்குனர். 

சாதிய அழிவு என்பது எவன் கையில் அந்த கறை படிந்திருக்கிறதோ அதை அவன் அழித்துக் கொள்ளாதவரை தானே அழியாது அல்லது எதனாலும் அழிக்க முடியாது. கண்ணாடி குவளைக்கும் சிரட்டைக்கும் இடையேயான சாதிவெறியை சொல்வது கடந்தகால வலியெனில் ஒரே வகை கண்ணாடி குவளைகளில் சரிசமாக உட்கார்ந்து குடிக்கும் இருவேறு வகை தேனிரில் அப்பட்டமாக என்றும் இருக்கத்தான் செய்கிறது சாதிய வெறுப்புணர்வு என்பதை இதைவிட தெளிவாக எப்படி காட்ட இயலும்?.

பரியேறும் பெருமாள் என்பது வெறும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் இடைசாதியர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமுமல்ல, தீர்வுமல்ல. தலித்தல்லாதோர் கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் அத்துணை சாதி, மத வெறியர்களுக்கும் பொதுவான பாடம். 

தன் சாதி பெண்களோடு பழகாத வரை தாழ்த்தப்பட்டவனை அரவணைப்பதாக காட்டிக்கொள்ளும் அய்யோக்கியர்கள் ஆணவக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் மனதுக்குள் கைதட்டிக்கொள்வதை உணர தயங்கவில்லை நாம். தங்கள் சாதி, மதம் சார்ந்த விமர்சனங்கள் எழாதவரை மெளனம் காக்கும் இவன்களைவிட குலசாமிக்கென்று கொலை செய்பவன் நேர்மையான சாதிவெறியனாகவே தெரிகிறான். மற்றவெனெல்லாம்
மறைந்திருந்து நயவஞ்சக நாடகமாடும் நல்லவன்கள். அப்படிபட்ட நல்லவர்களால் தான் சொல்ல இயலும் “பரியேறும் பெருமாளில்” என்ன இருக்கிறது என்று. தன் சொந்த சாதிக்கெதிராக பேசாதவரை விமர்சகனை அறிவுசீவிகளாக அரவணைத்துக்கொள்வதில் வள்ளவர்கள் தான் இவ்வகையிலான சாதியை ஒழிக்க புறப்படுகிற நடுநிலை நாயகர்கள்.

”பரியேறும் பெருமாள்” தமிழ் சினிமாவின் மந்த புத்தியை கிளரி எதை சினிமாவாக்க வேண்டும் என்று ”தேவர்மகன்”களுக்கு கிடைத்திருக்கும் இந்நூற்றாண்டின் குட்டுகள். 

*கவிமதி*
துபாயிலிருந்து
==============================================
ஆயிரம் முட்டாள்களிடம் விவாதிப்பதை விட ஒரு புத்தகம் படிப்பது மேல்
----------------------------------------------------
www.kavimathy.blogspot.com
www.kavimathy.wordpress.com

Sunday, March 04, 2018

மீண்டும் வலைப்பூ உலகத்திற்கு...

ஆயிற்று ஆண்டுகள் சில

கடைசியாக எப்போது என் வலைப்பூவை திறந்தேன் என எனக்கே நினைவில்லாத போது சக தோழழைகளில் சிலர் என் வலைப்பூவுக்கு வந்து வாசித்து சென்றுக்கொண்டிருப்பதை நினைக்கையில் இன்னும் இந்த வலைப்பூ உலகம் செயல்பட்டுக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சியே.

மின்னனு எழுத்துலகம் தொடங்கிய போது நாங்கள் இந்த வலைப்பூ வழியே தான் எங்கள் எழுத்துக்களை பதிவேற்றினோம். சுமார் ஒரு அய்ந்து ஆண்டுகள் இதில் பயணித்ததில் நிறைய கற்றுக்கொண்டேன். புத்தகங்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட அரபுநாடுகளில் வலைதளங்கள் மூலம் நிறைய வாசிப்புகளை தொடர்ந்து கொள்ள இலகுவானது இந்த வலைப்பூக்கள் தான்.

பிரபலங்களின் எழுத்துக்கள் மட்டுமே எழுத்துகள் என ஒரு சார்புடைய மனநிலை இருந்த காலங்களில் புதிய புதிய எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் உலகறிய செய்ததில் இந்த வலைப்பூக்களுக்கு நிகர் இல்லை.

இப்படி தனிபெரும் படைப்புகலகில் வலைப்பூக்கள் கோலோச்சிக்கொண்டிருந்த வேலையில் இதை தொடர்ந்து வந்த முகநூல் அனைவரது வாசிப்பையும் முடக்கி, வலைப்பூ எழுதும் பழக்கத்தினையும் முடக்கியது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். என்னதான் முகநூலில் உடனடி “விருப்புகள்” நிரைய கிடைத்தாலும் நாம் எண்ணுகிற வகையிலான நீள் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களை முகநூலில் எழுதுவதில்லை. பல முன்னனி எழுத்தாளர்கள்கூட தங்களது வலைதளங்களிலிலோ, வலைப்பூக்களிலோ தங்களது ஆக்கங்களை எழுதி அவற்றின் தொடுப்புகளை முகநூலில் பதிவதையே பார்த்திருக்கிறோம்.

இது ஒருவகையில் முற்றுலும் உண்மை. முகநூல் பக்கத்தில் மிக குறைந்த பத்திகளுக்கு மேல் எழுத இயலாது அப்படியே எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். ஏனெனில் வலைப்பூ பிரியர்களுக்கு இருக்கும் வாசித்தல் பொருமை முகநூல் வாசிப்பாளர்களுக்கு இருப்பதில்லை. எப்படிபட்ட ஆக்கமாக இருந்தாலும் முகநூலில் ஒரு சில வரிகளில் மிக சுருக்கமாக சொல்லியே ஆகவேண்டும் என்பது ஒரு கட்டாயமான எழுத்து சுருக்கமே.

தொடர்ந்து முகநூலில் பயணித்து கொஞ்டம் சோர்வு அடைந்தாலும் முகநூலை விட்டு அகளாமல் அதே வேலையில் தேங்கிப்போன எண்ணபதிவுகளை மீண்டும் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி பதிவேற்றலாம் என்கிற சிந்தனையில் தான் இந்த மீண்டும்  வலைப்பூ உலகத்திற்கு.... என்கிற தொடக்கம்.

இதை ஒரு கடுமையான பத்தியமாகவே கடைப்பிடிக்க என்னுகிறேன். வழக்கப்படி பணி சுமைகளுக்கு நடுவே காலம் தான் என்னை தொடர்ந்து வலைப்பூ எழுத அனுமதி தரவேண்டும்.

எழுதுவேன் என்கிற நம்பிக்கையில் எப்போதும் போல உங்களோடு பயணிக்கிறேன்.

நன்றி.


Wednesday, January 28, 2015

நீர்த்துப்போன ஈழப்பிரச்னை ஓர் அலசல்

நியாயமான போராட்டங்களை கலவரமாக மாற்றி நீர்த்துப்போகச் செய்தல்,போராடுபவர்களின் பக்கமே பிரச்னையை திசைதிருப்பிவிட்டு போராடுபவர்களை குற்றவாளிகூண்டில் ஏற்றிவிடுவது; முதலில் அதிலிருந்து அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடுவது; அவர்கள் எதற்காக தொடங்கினார்களோ அந்தப் புள்ளியை விட்டு அவர்களை வெகுதூரத்திற்கு கடத்திச்சென்று மறக்கடித்து,மழுங்கடித்துவிடுவது; அதன் பின் அவர்களின் மீதே தவறென்று மீண்டும் மீண்டும் கொளுத்திவிட்டு குளிர்காயும் உத்தியைக் கையாண்டு, பாதிக்கப்படுபவர்களை விட மேலதிக மன உளைச்சளை பாதிக்கப்படுவோருக்காக போராடுபவர்கள்மீது திணித்து தான் எப்போதும் பேரினவாதத்தின் தோழன்தான் என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது.

அப்பாவி முத்துக்குமரனின் அறியாமையிலிருந்தே தொடங்குகிறேன்.ஈழ்ப்பிரச்னை என்பது தமிழீழத்தில் இருந்து போராடுபவர்கள் அதனால் பாதிகப்படுபவர்களுக்கு அத்தியாவ‌சியம் எனில் தமிழகத்திலிருந்து போராடுபவர்களுக்கு அவசரம், அப்பாவித்தனம்,அரசியல் என்கிற சமுக கட்டமைப்பைத் தாண்டியதுதான், தன் இன அழிப்பிற்கு எதிரான போராட்டம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவிட்டது.

ஈழப்பிரச்னைக்காக தமிழகத்தில் இதற்கு முன்னர் எழுந்த எழுச்சி இப்போது இல்லை. எனினும் இப்போதைக்கு ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்கும் முன்னர் ஏற்பட்ட எழுச்சிக்கும் பொதுவாக இருப்பது அரசியல் தான் என்பதனை நன்கறிவோம். ஏனெனில் முன்னர் ஏற்பட்ட ஈழப்போராட்டங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. ஆளுங்கட்சியான அதிமுக (எம்.ஜி.ஆர்) எவ்வளவுதான் ஈழமக்களுக்காக ஆதரவளித்தாலும் தனக்கு மட்டுமே தமிழ் சொந்தம், தமிழன் சொந்தம், தமிழனின் பிரச்னைகளை தான் மட்டுமே பேசவேண்டும்,தனக்காக போராடும் தலைவர் என தமிழனுக்கு என் பெயரே தெரியவேண்டும், தமிழனின் பிரச்னைகளைவைத்து தான் மட்டுமே அரசியல் பண்ணவேண்டும் என்கிறதான பிடிவாதம் அல்லது அடங்கமாட்டாத அச்சத்தின் வெளிப்பாடே எதையும் செய்யும் மடமை திமுகவிடம் இருக்கிறது என்பதை அன்றைய அரசியலில் மட்டுமின்றி இன்றைய நிலைபாடுகளிலும் வெட்டவெளிச்சமாக வெளிப்படுகிறது.

இப்போது அதே திமுக அதிகாரத்தில் இருக்கிறதென்பதால் எப்படி தமிழுணர்வு தன்னைவிட தன்னால் தாழ்த்தப்பட்ட கட்சிகளுக்கு வரலாம், தான் இருக்கையில் தன்னையல்லவா இந்த சில்லுண்டிக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எப்படி போரடவேண்டுமென்று கேட்டிருக்கவேண்டும் அப்படி கேட்டிருந்தால் தன் ஆட்சிக்கு ஆபத்துவராமலும் அதே நேரத்தில் தமிழுணர்வு குன்றாமலும் எப்படி? யாரிடம் கோரிக்கைவைத்து கடிதம் எழுதி போட்டுவிட்டு நாம் நம்வேலையை பார்ப்பது என்று சொல்லிக்கொடுத்திருக்கலாம் அல்லவா? அதை விட்டுவிட்டு தன் தமிழுணர்வை பங்குபோட்டுக்கொண்டு களத்தில் இறங்கினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்கிற கதியில்தான் திமுகவின் செயல்பாடுகள் இருக்கின்றன. காயத்திற்கு மருந்துபோடுவற்கு பதிலாக காயம்பட்ட இடத்தை தடவிக்கொடுத்தால் போதுமா எனன? தன் அதிகாரத்தைவைத்து ஈழமக்களுக்காக போராடாவிட்டாலும் பரவாயில்லை குறைந்த அளவு போராடுபவர்களை தண்டிக்காமலாவது இருக்கலாம் அல்லவா! அதைவிட்டு மனுக்களும், கோரிக்கைகளும், மனித சங்கிலி போராட்டங்களும், நிதி சேகரிப்புகளும் என எதற்கும் உதவாத செயல்பாடுகளினால் தன் தமிழுணர்வு அணைந்துவிடாமல் பாதுகாப்பாக நடந்துகொள்வ‌தாக‌ எண்ணி இன‌ உண‌ர்வாள‌ர்க‌ள் க‌ண்க‌ளில் ம‌ண்தூவுகிற‌து.

ஈழ ஆதரவுப் பேச்சாளர்களை கைது செய்வ‌தானது ஈழமக்கள் மீது விழும் குண்டைவிட ஆபத்தானது. ஏனெனில் தலையில் குண்டுவிழுந்தால் உடனே இறந்துவிடக்கூடும்! ஆனால் அவர்களுக்காக போராடுபவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அடக்கமுயல்வதும், மீறிப்போராடினால் உன் சகவாழ்க்கை பாதிக்கப்படும், உன் குடும்பம் பாதிக்கப்படும், உன் சொத்துக்கள் பாதிக்கப்படும் அல்லது சேதப்படுத்தப்படும் என மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது ஈழத் தமிழர் தலையில் வண்டிகணக்கில் குண்டைப் போடுவதைவிட கொடுமையானது.

ஈழத்தில் இலங்கை பேரினவாதம் இன அழிவைத் தொடங்கினால் அதன் எதிரொலியாக தமிழகத்தில் எங்கெல்லாம் ஆதரவு அலைகள் பீறிட்டுக் கிளம்பும் என்று இந்திய உளவுப் பிரிவினர் முன்னதாக தங்கள் எசமானர்களுக்குத் தெரிவித்துவிடுகின்ற‌ன. எனவே இலங்கை அரசிற்கு தங்களால் என்னமாதிரியான உதவிகள் செய்யலாம் என்பதை பல மாதங்களுக்கு முன்னமே நடுவண் அரசும், மாநில அரசும் கூடி திட்டமிடத் தொடங்கிவிட்டன. அப்படியே திட்டமிட்டப்படி இரண்டுபேரின‌வாதங்களும் செயல்படவும் தொடங்கிவிட்டன. அதில் நேரடியானது மத்திய அரசு இலங்கைக்கு படைகளையும், கருவிகளையும் அனுப்பிவைத்து முடிந்தமட்டும் தானே முன்னின்று போரைநடத்துவது அதே நேரம் மாநில அரசானது இதற்கு எதிரான குரல்களை நசுக்குவது என திறம்படச் செய்து ந‌டுவ‌ண‌ர‌சுக்கு துணை நிற்கிற‌து.

போராட்டம் கிளம்பும் என்று அவர்கள் எதிர்ப்பார்த்த தளங்கள் மூன்றுதான்:

1.மாணவர் போராட்டம், 2. வழக்கறிஞர்கள் போராட்டம், 3. எதிர்கட்சிகளுடன் தன்னால் எப்போதும் ஒதுக்கப்படுகிற தமிழார்வல‌ர் அமைப்புகள் எனவே இதை நன்கறிந்த ஆளும் அதிகாரம் இவற்றை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நீர்த்துப்போகச் செய்ய அனைத்து திட்டங்களையும் செவ்வனே தீட்டி அதன்படி நடைமுறைபடுத்தியும் வருகிறது. ஆளும்அதிகாரவர்க்கமே எதிர்பாராமல் நடந்தவைகள் தான் தீக்குளிப்புகள்! நல்லவேலையாக அதையும் உடன் தனது திட்டத்தில் இணைத்துக்கொண்டது.

முதலில் தீக்குளிப்புகளை பார்ப்போம்.அதிகாரவர்க்கமே எதிர்பாராமல் நடந்து உலக அளவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திய திரு.முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்கு முதலில் ஆடிப்போனாலும் பிறகு சமாளித்துக்கொண்டு தனது ஆதரவாளர்களைக் கொண்டு உடலை கைப்பற்றி மீண்டும் எரித்து சாம்பலையும் கரைத்துவிட்டு ஓய்ந்தது.இதில் முத்துக்குமாரின் கோரிக்கையான தன் உடலைக் கைப்பற்றி ஈழப்பிரச்னை தீரும்வரை போராட‌ வேண்டும் என்கிறது எப்படி அழகாக மறக்கப்பட்டது என்பதை நன்கறிவோம்.
கூடுதலாக தீக்குளிப்போர் குடும்பத்திற்கு பணம் வழங்கி நீர்த்துப்போக செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் உதவுவதில் உள்ள அரசியலை சற்று ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே விளங்கிக்கொள்ள இயலும். தொடர்ந்து தீக்குளிப்புகள் நடந்தால் அது பணத்திற்காகவே என கொச்சைப்படுத்தி போராட்டம் என்பது நீர்த்துப்போகச் செய்ய தோதாக இருக்குமல்லவா. இருந்தும் முத்துக்குமாரின் பெற்றோர் வாங்க மறுத்ததால் ஆளும் அதிகார வர்க்கம் ஆடிப்போகவில்லை எனெனில் அதுவும் மிச்சமாகிவிட்டது. முத்துக்குமாரை தொடர்ந்து தீக்குளித்தவர்கள் எல்லாம் ஏழைகள்தான் அவனிடம் உணர்வு மட்டுமே இருக்கும் உணவு இருக்காது நாம் தான் நமது 40 ஆண்டுகால அரசியலில் அதற்குண்டான வேலை எதுவும் செய்யவில்லையே என கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது. இவர்களுக்கு நட்சத்திரவிடுதியில் எவனுக்காவது ஆபத்தென்றால்தான் முகாமிட்டு பாதுகாப்பு கொடுப்பார்கள். அவர்கள் தேச‌ பக்தர்கள்! அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கவேண்டுமென கிளர்ந்து எழும்பும். இனி எத்தனை தீக்குளிப்புகள் நடந்தாலும் கவலையில்லை என கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலேயே ஆளும் அதிகாரவர்க்கத்தின் அரசியல் என்ன என்பது புரிந்து இருக்கும்.

மாணவர் போராட்டம்:
மாணவர் போராட்டம் கிளம்பியதும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவார்ந்த சட்டத்தை நீட்டித் தடுத்து நிறுத்தப்பார்த்தது. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனில் எதற்காக பொருளியல், அரசியல்,சமுகவியல் என பாடத்திட்டங்களை வைத்தார்கள் என விளங்கவில்லை. அதற்கு பதில் அதிகாரவர்க்கத்துடன் கைக்கோர்ப்பது முதல் கழுவி விடுவதுவரை என பாடத்திட்டங்களை அமைத்தால் இவர்களுக்கு நிறைய "வீராச்சாமிகள்" கிடைப்பார்கள் அல்லவா!

மாணவர்களை அடக்குவது அல்லது அவர்களுக்கு விடுமுறை என்கிற பெயரில் களைப்பது அல்லது அவர்தம் பெற்றோர்களை அழைத்து எதிர்காலம் கெடும் என்கிற அறிவுரை என்பதுபோல் அச்சப்படுத்துவது, இறுதியாக கல்லூரி அதிகாரங்களுடன் சேர்ந்து மதிப்பெண்குறைப்பு, ஒழுக்கக்கேடு என மிரட்டுவது வரை அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி இறுதியில் வெற்றியும் கண்டது என்பது தற்போதைய நிலையைவைத்து உணரமுடிகிறது.

வழக்கறிகஞர்கள் போராட்டம்:
ஈழத்தமிழர் என்றில்லை எந்த போராட்டங்களாயினும் முதலில் களமிறங்கி பெரும் வீரிய்த்துடன் போராடுவது வழக்கறிஞர்கள்தான் என்பதை, தன் கடந்த கால அனுபவத்தில் நன்கு உணர்ந்த அதிகார வர்க்கம் வழக்கறிஞர்கள் போராட்டம் உச்ச நிலையில் இருக்கும் போது பொறியில் தேங்காய்வைத்து எலி பிடிப்பதுப்போல் சுப்பரமணியம் சாமியைவைத்து நடத்திய நாடகத்தில் மாட்டிக்கொண்ட வழக்கறிஞர்களை அடித்து துவைத்து இதெல்லாம் ஈழப்போராட்டத்தின் விளைவுதான் வழக்கறிஞர்கள் போராடியதால்தான் அவர்களுக்கு இப்படியானது என்று பிரச்னையை திசைதிருப்பிவிட்டது.

இதற்கு தகுந்தார்ப்போல் ஆளும் அதிகாரவர்க்கத்தால் மூளைச் சலவை செய்து அனுப்பப்பட்ட "கிருஷ்ணா கமிஷன்" வழக்கறிஞர்கள் மீதுதான் தவறு அவர்கள் ஆளும் அதிகாரத்திற்கு எதிராக போராடி இருக்கவேகூடாது என்கிற ரீதியில் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன எழுதிக்கொடுத்ததோ அதை அப்படியே திருப்பிக்கொடுத்து, வழக்கறிஞர்களை கூண்டிலேற்றி வழக்கை மாற்றி அவர்கள் பக்கமே குற்றதை தள்ளிவிட்டது. தற்போது வழக்கறிஞர்கள் தங்களின் உரிமைகளைக்கேட்டு போராடும் படியானதில் ஆளும் அதிகாரவர்க்கம் மனதுக்குள் கைத்தட்டி ஆராவாரம் செய்வதை இன்றைக்கு ஈழப்பிரச்னனயில் வெகுதூரம் போய்விட்ட வழக்கறிஞர்களின் நிலையை பார்த்தால் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழுணர்வாளர் போராட்டம்:
சக அரசியல் கட்சிகளின் போராட்டத்தை அடக்குவதற்கு ஆளும் அதிகாரவர்க்கம் அவ்வளவு சிர‌மம் எடுத்துக்கொள்ளவிலை. தான் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் சாதிய உணர்வு தேர்தல் நேரத்தில் கிளம்பினால் அல்லது கிளப்பபட்டால் எப்படியும் தமிழின உணர்வும், ஈழப்பிரச்னையும் தானாக நீர்த்துப்போகும் எனறு தெரியாதா என்ன? அதுமட்டுமல்ல வாரிசு அரசியலுக்கு தயாராகிவிட்ட கட்சிகளும், இன்னும் பெருங்கட்சிகளால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட கட்சிகளும், எப்போதும் ஈரத்துணிபோர்த்திய கோழியைப் போலிருக்கும் பொதுவுடமை கட்சிகளும், தன் இருட்டு இதயத்தில் மட்டும் இருக்கப்பழகிக்கொண்ட இதர கட்சிகளும் சேர்ந்து மூன்றாவது கூட்டணி அமைத்துவிடாமல் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையும், தமிழகத்தில் தங்களால் ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கும் சாதிய ஓட்டு அரசியலும் தன்னைவிட்டால் இவர்களுக்கு அண்டிப்பிழைக்க வேறுவழியே இல்லை என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் நன்கு அறிந்துவைத்திருக்கிறது.

அதற்குத் தகுந்தாற் போல் அரசியல் ஆதாயம் தேடும் சுயநல கட்சிகளும், அமைப்புகளும் ஈழப்பிரச்னைகளுக்கு போராடுவதைவிட்டு கையை உதறிக்கொண்டு தங்கள் கட்சிகளுக்கு ஓட்டு ஆதாயம் சேகரிக்கும்பொருட்டு இறங்கிவிட்டதால் இதற்காகத் தனியே திட்டம் எதுவும் போடாமலேயே நிலைமை தங்களுக்கு சாதகமாவது உணர்ந்து ஆளும் அதிகாரவர்க்கம் தனக்குள்ளேயே கைத்தட்டிக்கொண்டது. இதில் பாதிக்கப்பட்டது உண்மையான தமிழுணர்வுள்ள கட்சிகளும், தமிழுணர்வாளர்களும், தீக்குளித்தவர்களின் குடும்பங்களும், மனதிலும் உடலிலும் காயபட்டவர்களும்தான் இதுவும் ஒருவகை தனிமைபடுத்துதலே இதிலும் அதிகார வர்க்கத்திற்கு வெற்றிதான் எனலாம்.

ஊடகங்களின் நிலைப்பாடு:
இப்படிபட்ட நிலையில் ஊடகங்களின் பங்கானது எப்படியிருக்கிறது என்பதை பார்த்தோமானால் நமக்கு நாமே நொந்துக்கொள்வதை தவிர வேறுவழியில்லை. ஏனனெனில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது என்று நம் ஊடகங்கள் சில நேரம் கூக்குரலிடுவதை பார்த்திருக்கலாம் அது எப்போது நிகழ்கிறது என்பதை நாம் சரியாக உணரவேண்டும். எப்போதேல்லாம் தங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இவை குரல் கொடுக்கும் மற்றப்படி மக்களின் மனதை நிமிடத்திற்கு ஒருதரம் மாற்றும் வல்லமை படைத்தவையாக இருந்தபோதும் பெரும்பாலும் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன திட்டமிடுகிறது என்பதனை வெளிப்படையாக நிறைய ஊடங்கள் வெளிப்படுத்துவதில்லை. சில வேலைகளில் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன சொல்லிக்கொடுக்கிறதோ அதை பல ஊடகங்கள் பறை சாற்றுகின்றன எனலாம்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைநிலையையும், அவர்களுக்காக போராடுபவர்களின் நிலைகளையும், அதற்கு ஆளும் அதிகாரவர்க்கம் போட்டுவைத்திருக்கும் தடைகளையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பு ஊடகங்களிடமே இருக்கிறது. மாறாக இப்போது ஊடகங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறது எனில் எந்த ஒரு பிரச்னை கிளம்புகிறதோ அவற்றை சுடச்சுட வியாபாரமாக்கதான் முயற்சிக்கின்றன. எப்போதும் ஊடகங்கள் எழுதியிருக்கும் கதை வசனங்களையே மக்களும் தங்கள் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்கின்றனர். அடுத்த பிரச்னை எழும்வரை ஊடக‌ங்கள் எதை சொல்லுகின்றவோ அதையே நம்புகின்றார்கள். பிறகு ஊடகங்கள் புதிய பிரச்னைகளுக்கு தாவினால் மக்களும் நேற்றைய பிரச்னைகளை அடியோடு மறந்துவிட்டு அதை அம்போவென விட்டுவிட்டு புதிய பிரச்னைக்கு தாவிவிடுகின்றனர்.

இதனால் இதை உணர்ந்த ஆளும் அதிகாரவர்க்கமும், அரசியல் கட்சிகளும், வியாபார சந்தையும் தங்களுக்கென ஊடகங்களை ஏற்படுத்திக்கொண்டு தாங்கள் கூறும் கட்டுக்கதைகளுக்கு ஏற்ப மக்களை ஆட்டுவிக்கின்றன. உண்மையில் இப்படியிருக்கலாம் அப்படியிருக்கலாம் இப்படிநடந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் கற்பனையில் மிதப்பதை தங்களின் கற்பனை வளத்துடன் இணைத்து அதை அச்சாக்கி அதே மக்களிடமே விற்று காசாக்கி அந்த மக்களே அறியாவண்ணம் அவர்களை விவாதிக்கவைக்கின்றன.

இதில் மக்களின் மனநிலையும் ஊடகத்துடன் ஒத்துப்போகின்றன எனலாம் ஏனெனில் ஊடகங்கள் எதைப்பற்றி பேசுகிறதோ அதுதான் மக்களுக்கும் வேதவாக்காக அமைகிறது.மக்கள் தங்கள் நிலையிலிருந்து சிந்தித்து விவாதங்களையோ, போராட்டங்களையோ நடத்துவதென்பது இயல்பில் நடைபெறாமலேயே போய்விட்டது எனலாம். எனெனில் ஊடகங்கள் தங்கள் வியாபாரங்களை பெருக்கிக்கொள்ள இன்று கும்பகோணம் குழந்தைகளை பற்றி எழுதினால் மக்களும் அதையே பேசுவார்கள். அதேப்போல் அரசியல் ஊழல்கள், தருமபுரி பேருந்து எரிப்பு, சக்கீலா படம், அரசியல் கொலைகள், மானாட மயிலாட, தொலைக்காட்சி தொடர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம் இன்று இவற்றைப்போலவே ஈழப்பிரச்னையும் பேசப்படுகிறது.
எல்லாவற்றிக்கும் ஊடகத்தையே நம்பும் மக்களும் ஊடகம் தவிர்த்த சிந்தனைகளில் ஈடுபடுவதேயில்லை. குறிப்பாக ஆளூம் அதிகாரத்தில் இருப்பவர்களோ, அல்லது கட்சிகளோ தாங்கள் பிரச்னைகளை எந்த கோணத்தில் பார்க்கின்றவோ அதே கோணத்தில் தான் மக்களிடையே பரப்புகின்றனர்.

இத்தனை தடைகளையும் மீறி பெரும் பரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்த ஈழமக்களுக்கான போராட்டங்கள், விவாதங்கள் இன்று தேர்தல் என்கிற மனநிலைமாற்று அரசியலால் நீர்த்துப்போய்கிடக்கின்றன. இந்த தொய்வைப் பயன்படுத்திக்கொண்ட ஆளும் அதிகாரவர்க்கமும் ஈழப் பேரினவாத அரசுடன் கைக்கோர்த்து இன அழிவை இந்த தேர்தலுக்குமுன் முடித்துவிடுமாறு அர‌ச தூத‌ர்க‌ளை அனுப்பி இர‌க‌சிய‌ம் சொல்கிற‌து.

கட்சிமாறல்,ஆட்சிமாறலுக்கு வழிவகுக்கலாம்;அதுவே ஈழத்தமிழர்களுக்கு விடிவேற்படுத்துமா?
ஈழ ஆதரவுக்கு கைகோர்த்துவிட்டு எதிரெதிர் அணிகளில் அடைக்கலம் கொண்டு வாக்காளர்களை ஒருபுறம் குழப்பிவிட்டு அதிலும் குளிர்காய எத்தனிக்கும் இந்த அரசியல் சாக்கடையின் முடைநாற்றம் ஈழத்தமிழர்களின் நாசிகளில் அருவெறுப்பாய், விடமாய் பரவிக் குமட்ட வைத்துள்ளது! இந்த நாடகங்களை நமது வாக்காளர்கள் மெளனமாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்ன செய்ய?
ஈழத்தமிழருக்காய் அவர் தம் விடிவுக்காய் யாருமில்லையே எனற ஏக்கத்தோடும் வேதனையோடும் இன்றைக்கு வாக்காளர்கள்!
நாளை வாக்களிக்கும்போது கண்டிப்பாக இது எதிரொலிக்கும்!.

இயற்கை நனைக்கும் கவிஞன்... மஸ்கட் பஷீரின் "பாலைவன பூக்கள்" கவிதைநூல் பார்வை

அழுத்தமே ஆதரமாகிபோன அவசர வாழ்க்கையில் அவரவர் தனித்த வாழ்வின் அழுத்த சூழல் பலரை அரபு நாடுகளுக்கு அள்ளிவீசியது. அவசரமாக சம்பாதித்து, அவரமாக சிலவு செய்து, அவரமாகவே சென்றுவிடும் நடைமுறைகளுக்கிடையில் அழுத்திக்கொண்டிருக்கும் வாழ்வினை அதன் போக்கில்விட்டு, நிகழ்கால நிதர்சனத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் இன்ப துன்பங்களை கவிதை செய்து அழுத்தத்தை குறைத்து வாழ்க்கையினை அழகாக்கிக்கொள்ள கவிஞர்களுக்கு மட்டுமே நேரம் கிடைக்கிறது. அத்தகையதொரு வாழ்க்கை நேசத்தின் கவிதை சமைப்பவராக மஸ்கட் பஷீர் தெரிகிறார்.
வெந்தோம், தின்றோம், சென்றோம் என்றில்லாமல் இயற்கையினையும், தான் சார்ந்த மனிதயினத்தின் அவலங்களையும் சிந்திக்க முடிகிறதென்றால் “வாழ்க்கையே நீ தரும் அழுத்தங்கள் புலம்பெயர் கவிஞர்களின் காலுக்கு தூசு” என்பதுபோல் அரபுநாடுகளில் வாழ்ந்தாலும் மறபு மாறாமல் தாயகம் நோக்கியே தங்களின் சிந்தனைகளை வைத்திருக்கும் கவிஞர்கள் இருக்கும் வரை “மெல்லத் தமிழ் இனி சாகும்” தருணங்களை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருக்கும் என்பதில் அய்யமில்லை. தாயக தமிழர்கள் கொன்றாலும் தமிழ்த்தூக்கி நிறுத்த நாமிருபோம் என்கின்றன பஷீரின் கவிதைகள்.

புலம்பெயர்ந்த தமிழன் ஒன்று கவலையில் மாண்டுபோவான் இல்லை கவிதையில் மீண்டுவாழ்வான் என்பதற்கிணங்க அரபுநாடுகள் உறுவாக்கிய கவிஞர்கள் ஏராளாம். இங்கே பொருள் கிடைக்கிறது வாழ்வின் இருளும் கிடைக்கிறது, பொருளை அனுப்பிவிட்டு இருளைவைத்து இலக்கியம் செய்ய எம்மால் மட்டுமே இயலும் என சமகால கவிஞர் பஷீர் அரபுநாட்டு கவிஞர்களின் வரிசையில் சேர்ந்துக் கொள்கிறார்.

தொகுப்பில் தொடக்க கவிதைகள் குறும்பா (ஹைக்கூ) வடிவில் சென்றாலும் போக போக கவிஞரின் கோபம் சமூக அளவங்களை நோக்கி நீள் கவிதைகளாக நீள்கின்றன.

தமிழகத்தில் மின்சாரத்தால்
மரணம் இல்லை
தாளார மின் தடை


தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இயற்கையாக வந்ததல்ல தமிழகம் முழுதும் கூடங்குளங்களை கொண்டுவர அரசு நடத்தும் அநாகரீக தடையிது. மின் தடையால் மரணங்கள் இல்லை என்று சொல்ல இயலாது ஏனெனில் கொலை,கொள்ளை பெருகி எப்போதும் அரசு கொடுமைக்காரனுக்கானது என்பதனை நிரூபித்தே வருகிறது.
தாய்மொழி மறுப்பில் தமிழனை விஞ்ச ஆளில்லை ஆனால் எல்லா மொழி காக்கைகளும் தமிழிலேயே உறவுகளை அழைக்கின்றன என்பதனை

தமிழைவிற்று
தடுமாறி ஆங்கிலம்பேசி
தற்பெருமை கொள்வதில்லை


என்று தமிழ் பெருமை சொல்கிறது காகம். ஆறறிவு என்று அலட்டிகொள்வதில் அவமானம் இல்லையோ நமக்கு, ஆம் பெரும் இன அழிப்பையே பொருமையாக வேடிக்கை பார்த்தவர்களாயிற்றே நாம், தமிழன் காக்கைகளிடம் கற்கவேண்டும் “காக்கை” குணம்.
இயற்கை வளங்களை அழிப்பதில் இந்தியா முதலிடத்தில் இருகிறதாம். இந்தியா என்றால் இயற்கை... இயற்கை என்றால் இந்தியா என்ற காலம் போய் இன்று இந்திய திருநாட்டில் காசுக்காக இயற்கைவளங்கள் விற்கப்படுகின்றன. காடுகள் வளர நம்மை அழிப்பதில்லை நாம் வளர காடு அழித்தோம். பூமியே பொருமைக்கு ஆதாரம் அதன் பொருமை எல்லையை கடந்ததால் பூமி தன்னை சரிபடுத்திக்கொள்ளவே நடுக்கத்தையும், மண் சரிவுகளையும், மழை வெள்ளத்தையும் துணைக்கு அழைக்கிறது நாம் தான் அதை “இயற்கை சீற்றம்” என மாற்றி பேசுகிறோம்.

வீட்டுக்கு ஒரு
மரம்வை
முடியாவிட்டால்
வெட்டும் கோடாரியை
சிறை வை..


என்கிறார் பஷீர். இப்படி இயற்கை விரோதியான மனிதனைதான் உத்ராகாண்டில் உலுக்கி எடுத்தது. இது இயற்கைத்தாய் நமக்கு அடித்திருக்கும் எச்சரிக்கை மணி. புரிந்தால் பூமியை நாம் ஆளலாம் புரியாததுப்போல் நடித்தால் பூமி நம்மை ஆளும். மண்தான் வெல்லும் என்பதுதானே இயற்கை மரபு.

புலம்பெர்யர்ந்த வாழ்க்கை தேடலில் பஷீர் புனைந்து புனைந்து கவிதை செய்திருப்பது அழகு. இலக்கியத்தின் அத்தனை மரபுகளையும் அறிந்துதான் இலக்கியம் படைக்கவேண்டும் என்கிற இலக்கிய திருடர்களுக்கு பல கவிதைகள் படைவிரட்டியாக அமைகின்றன. ஹைக்கூ தொடங்கி இலக்கியத்தின் எண்ண ஓட்டங்கள் விரிந்து எழுத்து ஓட்டங்கள் சுருங்கினாலும் இன்னமும் வசன கவிதைகளை வடிக்கும் கவிஞர்கள் வளமாகதான் இருக்கிறார்கள்.

அன்பர் பஷீரின் கவிதைகள் எண்ண ஓட்டத்தில் எழுத்து வேகமெடுத்தாலும் பரந்துகொண்டிருக்கும் வாழ்க்கை சூழலில் குறுங்கவிதைகளை படிக்கவே நேரம் இல்லாத வாசகனுக்கு நெடுங்கவிதைகள் கொஞ்சம் நெளியவைக்கலாம். எண்ணத்தை விரிவுபடுத்தும் பஷீர்கள் எழுத்தை சுருக்கி கருத்தை கவிதையாக்க வேண்டுமென்பது வாசகனாகவும், சமகால படைப்பாளியாகவும் என் கருத்து.

கவிதையையும், வாழ்க்கையையும் இயற்கையாக வாழத்தெரிந்த மஸ்கட் பஷீர் புலம்பெயர் கவிஞர்களில் ஒருவராகவும், தமிழிலக்கிய உலகின் சிறந்த படைப்பாளியாகவும் மிளிர தோழமையோடு வாழ்த்துகிறேன்.

கவிமதி
துபாயிலிருந்து...
10 ஆகஸ்ட் 2013

தஸ்லிமா

புகைமூட்டத்தில் கண்கள் எரிய மூக்கை சிந்தி சிந்தி அழுகையை அடுப்படிக்கு மேல் வெளிவாராமல் அடக்கிக்கொள்ளும் அல்லது அடக்க வைக்கப்படும் முஸ்லீம் பெண்களுக்கிடையில் முளைத்த ஒரு வரலாற்று நெருஞ்சி...

பழைமைச்சொல்லி,வேதம் சொல்லி, கட்டுப்பாடுகள் சொல்லி பெண்ணை படுக்கையறை தாண்டவிடாத கயவர்களின் கண்களை தோண்டும் காகித வேல்.சன்னல் கம்பிகள் உடைத்து சனங்களின் கவிதைப்பாடும் ஒரு இனப்புயல்.அச்சம்,மடம்,நாணம்,பயிற்பு என்ற குறுகிய சிறையுடைத்த எழுத்தாணி.

"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய
மக்களை அவமதிக்கிறதோ,
எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,
எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்"


என்பது தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்களின் கூக்குரல் அல்ல... பெண் குலம் சொல்லி கட்டைவிரலுக்குமேல் கண்களை தூக்காதே என்பதற்கெதிரான கலகக்குரல்.
அத்தகைய கலகக்குரல்தான் என் காதுமடல் பிடித்து தூக்கி நிறுத்துகிறது.கடந்த 500 ஆண்டுகாலம் ஆணாதிக்கமே பேசிப்பேசி, புளித்துவிட்ட இலக்கியத்தை கேட்டுக்கேட்டு ஆகா போட்டுக்கொண்டிருப்பவர்களை ஒரு சாக்கடையை கடப்பதுப்போல் கடந்துவிட்டு, பேசட்டும் பெண்கள் பேசட்டும் தவறுயிருப்பின் தட்டிக்கேளுங்கள் இப்போதல்ல இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து என்கிற என் வேள்விக்கு தஸ்லீமாக்களின் இயக்கம் ஒரு போர்க்கருவி.

பூஞ்சை பிடித்த உங்கள் சட்டங்களால் மவுனமாக்கி விட முடியாது தஸ்லீமாக்களை, அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒலித்து ஒலித்து ஒலித்து நீங்கள் செவிப்பறைகள் கிழிய அலறிகொண்டே ஓடவேண்டும். இதோ தஸ்லிமாக்களின் பின்னால் தடிபிடித்து நிற்கிறேன். இங்கேயும் தேவைபடுகிறது வன்முறைக்கெதிரான வன்முறை. என்ன செய்ய திணித்தவர்கள் நீங்கள்தானே...

இனிமேல் அவர் பேசட்டும் நான் பொத்திக்கொண்டு ஒதுங்குகிறேன்.

--தோழமையோடு கவிமதி.

கிழக்கு பாகிஸ்தானின் மைகேன்சிங்கில் ஆகஸ்டு மாதம் 1962ல் பிறந்தார். 1971 க்கும் பின் அவர் பிறந்த இடம் பங்களாதேஷ் என தனி நாடாக அறிவிக்கப்பட்டு விட்டது.

அறிவியல் பாடத்தில் கல்வியைத் தொடர்ந்தாலும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம். அவர் வளர்ந்த சூழல் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாகும். தனது பதினைந்தாவது வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். செஞ்சுதி (1978-1983) என்னும் இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
தனது மருத்துவக் கல்லூரியின் இலக்கிய அமைப்புக்கு தலைவராக இருந்து பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். 1984ல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற அவர் எட்டு ஆண்டுகள் பொது மருத்துவமனையில் பணியாற்றினார்.

1986 ல் முதல் கவிதை நூல் வெளியானது. 1989 ல் வெளியான அவரது இரண்டாவது கவிதை நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்து எழுதத் துவங்கினார். மதம், பாரம்பரியம், கட்டுபாடான பண்பாடு, என அனைத்து குறித்தும் எந்த தயக்கமும் இல்லாமல் எழுதினார். தஸ்லீமாவின் எழுத்துகளில் உண்மையின் கடுமையும் கூர்மையும் ஆணாதிக்கத்தை கொஞ்சமும் தயங்காமல் தனது எழுத்துகளில் அம்பலப் படுத்திய தைரியமும் படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விரும்பினார்கள் பலர். வெறுத்தவர் சிலர்.

இதோ கோடி தஸ்லிமாக்களின் ஒற்றைக்குரல்...
------------------------------------------
எல்லை பிரக்ஞைக்கு திரும்பியது உலகை பார்க்க, நுகர,
உணர, கேட்க வேண்டி வாசலைக் கடக்கையில்
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்
இந்தச் சுவர்களே உனது வெளி
இந்த மேற்கூரை உனது வானம்
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்
இந்த தலையணைகள் இந்த வாசமிகு சோப்
இந்த டால்கம் பவுடர் இந்த வெங்காயங்கள்
இந்த ஜாடி, இந்த ஊசி
மற்றும் பூ வேலைப்பாடு
தலையணை உறைகள்
இவைகள்தான் உனது வாழ்க்கை

அடுத்தப் பக்கத்தில்
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை
எங்ஙனம் பார்ப்பது?
பின்கேட்டை திறந்து கொண்டு
போகும் அவள்
போகாதே என தடுக்கப்படுகிறாள்.
தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்
இந்த கீரையை, இந்த கொடியை
அடிக்கடி கவனித்துக் கொள்
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை
இந்த தூய்மையான பசுமை பரப்பை
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை
இந்த மணம் வீசும் மண்ணை
இவையனைத்தும் தான்
உனது உலகம்.

மலிவாய் கிடைப்பன
சந்தையில் பெண்களை விட மலிவாய் ஏதுமில்லை
அவர்களுக்கு சாய புட்டிகள் கொடுத்துவிட்டால்
மகிழ்ச்சியில் தூக்கம் விலக்குவார்கள் இரவெல்லாம்
அவர்கள் தோலில் தேய்க்க சோப்புக் கட்டிகளும்
மயிர்களில் பூச வாசனை எண்ணெயும்
கொடுத்துவிட்டால் அடிமையாகி விடுவார்கள்
அவர்கள் மாமிசதிட்டுகளை அள்ளி
வாரமிருமுறை சந்தையில் விற்க தயாராகி விடுவார்கள்
அவர்கள் மூக்கிற்கு நகை கிடைத்து விட்டால்
எழுபது நாட்களுக்கும் மேலாக கால் நக்குவார்கள்
ஒரு சுற்றுச் சேலை என்றால்
மூன்றரை மாதங்களுக்கு தொடர்வார்கள்
கரும்புள்ளிகள் கொண்ட வீட்டு நாய் கூட
எப்பொழுதாவது குரைத்து விடும்
ஆனால் மலிவாய் வாங்கப் பட்ட பெண்களின்
வாயில் பூட்டு
தங்கப் பூட்டு
0
தஸ்லீமா நஸ்ரின்
0
தமிழில் : ஆனந்த செல்வி

தஸ்லீமாவின் தளம்: http://taslimanasrin.com/index2.html

Thursday, November 13, 2014

அறிவோம் ஆத்திசூடியை ஆங்கிலத்தில் உலகறியச் செய்வோம்

Let's Spread Aathisudi to the World!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அஃகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார் / Ovvaiyaar

Saturday, August 16, 2014

ஊடக சுதந்திரமும் – அவமானமும்

முஸ்லீம்கள் மீதான ஊடக பயங்கரவாதம்.


ஊடக நிலைப்பாடு

தாமதிக்கப்பட்ட நீதி எப்படி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதோ அதேப்போல் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் நடுநிலை வகிப்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போவதேயன்றி வேறில்லை. இங்கே பயங்கரவாதம் என்று தொடங்கியவுடன் நமது பொது புத்தியில் பட்டென தோன்றும் காட்சிகள் ஏதோ ஒரு இயக்கத்தின் ஆவேச நடவடிக்கையோ என்றுதான் தோன்றும் ஆனால் நாம் இங்கே பார்க்கபோவது உலகில் உள்ள ஒரு சில இயக்கங்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதங்களைவிட கொடியதான "ஊடக பயங்கரவாதம்" என்ன? ஊடக பயங்கரவாதமாவென... உங்கள் புருவங்கள் உயரலாம், ஆம் அதுவே உண்மை ஏனெனில் தத்துவாதிரமான இயக்கங்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதம் உயிர்களைதான் கொல்லும் தவறாக வெளியிடப்படும் பத்திரிக்கை பயங்கரவாதமோ நிகழ்வில் கொஞ்சமும் சம்மந்தபடாத பல்லாயிர கணக்கான அப்பாவிகளது உணர்வுகளையும் கொல்லும்.

இது ஒரு முட்டாள்தனமான வாதம் என்றுக்கூட பலருக்கு தோன்றலாம் ஆனால் நமக்கு தெரிந்தே ஒரு புறம் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட இனம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டும் குறிவைத்து நிகழ்த்தப்படும் பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதமானது உலக முஸ்லீம் சமூகத்தினர் மீதும், சிறுபான்மை நாடுகள், இனங்கள் மீதும் கட்டமைக்கப்பட்டு அவர்கள் குறித்து உலகத்திற்கு தவறான பல செய்திகளை கொடுத்து குறிப்பிட்ட இனமக்களை சமூக மைய நீரோட்டத்திலிருந்து விலக்க நினைத்து உள்நாடுகள் முதல் உலக நாடுகள் வரை ஒரு மறைமுக பயங்கரவாதத்தினை ஊடகங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இவ்வித பயங்கரவாதத்திற்கு பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளாகி கிடப்பது முஸ்லீம் சமூக மக்களே என்பதனை நாம் நன்கறிவோம்.

இப்பாதக செயலில் மிக முக்கிய பங்கு வகிப்பது இந்திய ஊடகங்கள் எனலாம் ஏனெனில் இன்று தகவல் துறை  மிக வேகமாகவும் காத்திரமாகவும் வளர்ந்துவிட்ட ஒரு துறையாக இருப்பதாலும் அதிலும் முக்கியமாக ஊடகத்துறை காணப்படுவதாலும் தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டதை நாம் அறிவோம். உலகின் எந்த ஒரு மூலையில் நடைபெறும் ஒரு சிறுநிகழ்வும் ஒரு சில நொடிகளில் மற்றொரு மூலைக்கு சென்றடைவதும் அந்த நிகழ்வின் வீச்சுக்கேற்ப உலகின் பல பகுதிகளில் உள்ளூர் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பலவிதமான திடீர் செயல்பாடுகள் மாறுபடுவதும் அறிந்த ஒன்றே.

இப்படியான துரித செயல் ஓட்டம் மிகுந்த ஊடக வளர்ச்சியால் உலக மக்களில் அனைவரும் தகவல்களை நொடிக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளவும் தங்களுக்கு தேவையான தேவையற்ற தகவல்களை உடனுக்குடன் பெற்று கொள்ளும் பெரும் வசதியினையும் பெற்றுள்ளனர் என்பதனை நாம் மறுக்க இயலாது. எந்த ஒரு நல்ல/ தீய செய்தியாக இருக்கட்டும் அது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நமது வரவேற்பறைக்கும், கைப்பேசிக்கும் வந்துவிடுகிறது. இந்த வகையில் தகவல்களை வழங்குவதில் ஊடகங்களின் பங்கு மிக கடமையுணர்வுள்ளது மட்டுமல்ல மிகமிக முக்கியமானதும், மிகப் பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒரு சமூக பணியுமாகும். இதைவைத்துதான் ஊடகம் என்பது ஒரு நாட்டின் முகெலும்பிற்கு சமமான ஒன்று என்பதான நிலைப்பாடு எழுகிறது. ஊடகங்கள் தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை அலசி அராய்ந்து பார்க்காமலும், தகவலின் உண்மைத் தன்மையினை அறிந்துக்கொள்ளாமலும், நாகரிகமான முறையில் அவற்றை செழுமைபடுத்தாமலும் ஏதோ தகவல் கிடைத்துவிட்டது அதை உடனே தங்கள் ஊடகமூலம் வழங்கி தாங்கள்தான் அதிவே செய்தியாளர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எந்த ஒரு செய்தியையும் ஒரு பக்க சார்பாகவோ, உண்மைக்கு புறம்பாகவோ வழங்கக் கூடாது என்பதனை ஊடகங்களும் அதன் பொருப்பாளர்களும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.


ஊடக தர்மம்
ஊடக தர்மம் என்பது நம்மூர் ஊடகங்களுக்கு ஏட்டுச்சுரைக்காய் மட்டுமல்ல ஏடுகள் வழியாக நிகழ்த்தும் அதர்மகங்கள் என்றுதான் சொல்லவேண்டும். தனக்கு பிடித்த, பிடிக்காத தனிமனித அல்லது இயக்க அரசியல் ஏற்ற தாழ்விற்கு இடம்கொடுத்து  தங்களை அறிந்தே ஊடகங்கள் தங்களை விற்றுவிடுவதும் பிறகு அதிலிருந்து மீள மனமில்லாமல் அதிலேயே கிடந்து புரண்டுக் கொண்டு இருப்பதற்கும் காரணம் அதிலிருந்து தங்களுக்கு கிடைக்கும் அதீத லாபமான பணம்.. பணம்... பணம்... மட்டுமே. ஏனெனில் ஒரு பத்திரகை செய்தியானது எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய்வதைவிட இச்செய்தி சமூகத்தில் எவ்வித பரபரப்பை ஏற்படுத்தும் அதன்மூலம் தங்கள் பத்திரிக்கைக்கு எவ்வளவு பணமும் பெயரையும் வாங்கிக்கொடுக்கும் என்பதை பொருத்தே அமைகிறது. இதை தவிர்த்து சமூக அக்கரை, மறுமலர்ச்சி என்கிற பம்மாத்துகளை அவ்வப்போது அவிழ்த்துவிடவும் தவறுவதில்லை. ஏனெனில் ஊடக தர்மம் எதை சொல்லுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அடிமை மனப்பாண்மைதான் மக்களிடமும் பரந்துக்கிடக்கிறது. இதை நன்கு புரிந்துக்கொண்ட ஊடகங்கள் "நன்றாக தங்கள் தொழிலை" வளர்த்துக்கொள்கின்றன.

இப்படி ஊடக தர்மம் என்கிற நாடகங்களை நிகழ்த்திக்கு கொண்டு  தான் சமூக அக்கரையுள்ள ஒரே ஊடகம் என்பதாக மக்களை ஏம்மாற்றி பணம் சம்பாதிக்கும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தும் படியாக உலகப் புகழ்பெற்ற, மிக முக்கிய ஊடகங்களில் ஒன்றான ‘பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் சர்வீஸ்’ (பி.பி.சி.)யின் இயக்குனர் ஜார்ஜ் என்ட்விஸ்டில் ஒரு தவறான செய்தியை தனது பொறுப்பில் இருக்கும் பி.பி.சி. வெளியிட்டுவிட்டது என்பதால்! விலகியிருப்பது ஒரு ஊடக நேர்மையினை காட்டுகிறது.

‘ஒரு நாய்க்கு தண்டனை கொடுப்பதாக இருந்தாலும் விசாரித்து அதன்மேல் குற்றம் இருப்பதாக தெரிந்தால்  மட்டுமே கொடுக்கப்படும்’ என்பது பிரிட்டன் சட்டத்தின் முக்கிய அம்சமாக பல தருணங்களில் பலராலும் மேற்கோள் காட்டப்படும் ஒரு சொற்றொடர். இங்கிலாந்து நாட்டின் சட்டம் மட்டுமல்ல, ஊடகங்களும் இந்த தர்மத்தை பின்பற்ற முடிந்தவரையில் முயற்சித்து வருவதைத்தான் பி.பி.சி.யின் இயக்குனர் தனது பதவியை விட்டு விலகியிருப்பதிலிருந்து தெரிகிறது.


எதெற்கெடுத்தாலும் வளர்ந்த நாடுகளை மேற்கோள்காட்டி எழுதும் நமதூர் ஊடகங்கள் இதை வகையாக மறந்துவிட்டது மட்டுமல்ல எப்போதும் அவதூறுகளையும், பொய் புரட்டுகளையும் மட்டுமே எழுதி பழகிவிட்டதால் இது தங்களுக்கானதல்ல என கண்டுக்கொள்லாமல் விட்டிருக்கலாம் அப்படியே வெளியிட்டிருந்தாலும் நமது ஊடகங்களின் தாரக மந்திரமான "பரபரபிற்காக" மட்டுமே என்று நாம்தான் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமது ஊடகம் மீதான மக்களின் நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் ஊடக தர்மம் என்பது தன்னால் தன்பொருப்பில் இருக்கும் ஒரு ஊடகத்தால் பங்கம் விளைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தனது உயரிய பதவியை தாமே முன்வந்து துறநத ஜார்ஜ் எண்ட்விஸ்டில் போன்ற ஊடகவியலாளர்கள் எங்கே... சொந்த இனத்துக்கே துரோகம் செய்து பணம் பார்க்கும் இந்திய ஊடகக்காரர்கள் எங்கே... பி.பி.சி. தன் செய்தி தவறாக அமைந்துவிட்டதற்காக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. மன்னிப்பு கேட்டது. இதேப்போல் எத்தனையோ தவறான செய்தியினை இந்திய ஊடகங்கள் அட்டை படத்தில் போட்டுவிட்டு பிறகு அது தவறு என்று பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பினால் எங்கே தமது பணம் சம்மாதிக்கும் வியாபாரத்திற்கு கேடுவந்துவிடுமோவென அஞ்சி தன் தவற்றை "ரொம்ப உணர்ந்தவர்களாக" காட்டிக்கொள்ள தனது மறுப்பு செய்தியினை ஒரு சிறு பெட்டி செய்தியாக வெளியிட்டு தங்களை சமூக அக்கரையுள்ளவர்களாக காட்டிக்கொள்ளுவார்கள்.

தன்பொருப்பில் இருக்கும் ஊடகம் செய்தது தவறு என்று அந்த நிறுவனத்தின் பொறுப்பாளரே பதவி விலகியிருக்கிறார். இதே அளவுகோலை இந்திய/தமிழக ஊடகத்துறையுடன் பொருத்திப் பார்த்தால், பெரும்பான்மையான பத்திரிகைகளின் ஆசிரியரும், நிர்வாக இயக்குனரும் பதவியில் இருக்க முடியாது, ஊடகம் என்கிற பெயரில் தன்மானத்தை விற்று பணம் சம்பாதித்து கொழுக்கும் முதலாளிகளும் இருக்க முடியாது எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு போகவேண்டுயதுதான்.
இதற்கு சான்றாக எத்தனையோ நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.

பத்திரிக்கை சுதந்திரம்.
இந்த ஒரு சொல் படுத்துகிற பாடு இருக்கே சொல்லி மாளாது. இந்த பத்திரிக்கை சுதந்திரம் என்கிற பெயரில் இவர்கள் இருப்பதை எழுதினால் பரவாயில்லை இல்லாததும், தங்கள் கற்பனைக்கு உதிக்கிரதையும் எழுதுவது. ஒரு சிறிய செய்தி கிடைத்தால் அதற்கு கை,கால்கள் வைத்து தங்கள் கற்பனைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக திரைக்கதை அமைத்து பிரச்னை பெரிதாக்கி தங்கள் ஊடக சுதந்திரத்தை நிலை நாட்ட தவறுவதில்லை. உண்மையான சமூக பிரச்னை கண்டு ஓடிவிடுகிற ஊடக சுதந்திரம் பொய் புகட்டுகளை எழுதும்போது மட்டும் கரைபுரண்டு வந்துவிடும் இப்படியான பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பிற்குள்ளானவர்கள் ஏதாவது தட்டிக்கேட்டால் ஓ பாருங்கள் எங்களது பத்திரிக்கை சுதந்திரத்தை பரிக்கிறார் என்பதாக கூச்சலிடும்.
சினிமா கிசுகிசுகளையும், சினிமா உலக  பரபரப்புகளையும் காசாக்கும் பத்திரிக்கை சுதந்திரத்தை யாரும் தடுக்கப்போவதில்லை மாறாக இவர்கள் வெளியிடும் ஆபாச படங்களுக்கும், செய்திகளுக்கும்  இவர்களுக்கு இல்லாத சுதந்திரமா! பெரும்பாலும் கிசுகிசு எழுதினால் யாரும் வந்துக்கேட்கபோவதில்லை என்கிற துணிவினை அப்படியே சமூக நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துவதால்தான் நாம் பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசவேண்டியிருக்கிறது.

எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கையாளர் சொன்னது "சென்னையில் ஒரு காவலர் புகார் கொடுக்கவரும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ளுவதை ஆய்வு செய்தவர் அது உண்மை என்கிற செய்தியினை சேகரித்து அதை உடனே வெளியிடாமல் சமமந்த பட்ட காவலரிடம் போய் இதுப்பற்றி பேசியபோது "நீ வெளியிட்டுக்கொள் எனக்கு என்ன கவலை" என்பதுப்போல் பேசியிருக்கிறார் இருந்தும் அந்த காவலருக்கு வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் இருப்பதால் இதை எழுதாமல் விட்டேன்" என்றார். ஏன் செய்திதான் கிடைத்துவிட்டதே என்பதற்காக தனது பத்திரிக்கை சுதந்திரத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா. அவர் பத்திரிக்கை தர்மம்/ பத்திரிக்கை சுதந்திரம் என்றால் என்ன என்பதை உண்மையாக புரிந்து செயல்பட்டதால் சமூகத்தில் அந்த பெண்பிள்ளைகள் தலைநிமிர்ந்து நடக்க இயலுமா என்பதை யோசித்து எழுதாமல் விட்டிருக்கிறார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்பது உண்மையினை எவருக்கும் அஞ்சாமல் எழுதுவதில்தான் இருக்கிறது. மாறாக பொய்,புரட்டுகளையோ, கற்பனை வடிவாக்கங்களையோ எழுதி சமூக அமைதியில் தேவையற்ற பிரழ்வுகளை ஏற்படுத்தி தங்கள் பத்திரிக்கையினை பரபரப்பாக்கி பணம் சம்பாதிப்பதில் இல்லை என்பதை ஊடகவியலாளர்கள் உணர்ந்தாலே ஊடக பயங்கரவாதங்கள் தடுக்கபடும். 

முஸ்லீம்கள் மீதான ஊடக பயங்கரவாதம்.
இதில் சிறுபான்மையினத்தவர் என்கிற முழுபட்டியலையும் இணைத்துக்கொள்ளலாம் ஏனெனில் உலகில் ஊடக பயங்கரவாதங்களால் பாதிக்கப்படுவதில் உலக சிறுபான்மையினத்தவரே அதிகம் இதை ஏன் ஆணித்தரமாக நம்மால் சொல்லமுடிகிறது எனில் உலகில் எங்கு ஒரு நோய் பரவினாலும் உடனே அது ஆப்ரிக்காவிலிருந்து பரவியிருக்கலாம் என்றும், எங்காவது ஒரு புரட்சியோ, மக்கள் விரோத போக்குகளோ நிகழ்த்தப்படும் எனில் உடனே அது முசுலீம் தீவிரவாதிகளால் இருக்கிமோ என்கிறதான அனுமானங்களை ஊடகங்கள் அழித்துவிட்டு தங்களின் விற்பனை மதிப்பை கூட்டிக்கொள்ளுவதுடன் சம்மந்தபட்ட நாட்டின் அரசியல் அதிகாரங்களுக்கு தாங்கள் அடிமைகள் என்பதனையும் வெளிகாட்டிக்கொண்டு பெருமிதம் கொள்ளும்.
ஆளும் வர்க்கத்திற்கோ, தான்சார்ந்த சாதி,மத தலைவர்களுக்கோ, மக்களின் பொதுபுத்திக்கோ எதை கொடுத்தால் தத்தமத்து விற்பனை கூடுவதுடன் தான் எப்போதும் ஒரு நடுநிலை நாளேடு என்பதை சொல்லக்கூட பத்திரிக்கைகளுக்கு அவ்வப்போது முஸீலிம்கள் குறித்து ஏதாவது செய்தி வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதில் தங்களுக்கு நிகர் தாங்களே என மார்தட்டிக்கொள்ளுவதில் உலக அளவில் இந்திய ஊடகங்களே முதலிடதில் இருக்கின்றன. இதற்கு சான்று பகிர்வதுப்போல் இந்திய அரசியலில் நடக்கும் நாடகங்களுக்கும், அரசியல்காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் கலவரங்களுக்கும் இந்திய ஊடகங்கள் இராஜபாட்டை போட்டுத்தருகின்றன என்றால் மிகையாகாது.
தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை அலசி அவற்றின் உண்மைத் தன்மையினை அறிந்து நாகரிகமான முறையிலும் தாங்கள் வெளியிடப்போகும் செய்தியால் மக்கள் மத்தியில் என்ன மனநிலை மாற்றங்கள் நிகழும் என்பதும் அதன் தொடர்ச்சியாக செய்தியில் சம்மந்தப்பட்ட சமூகம் எவ்விதத்தில் பாதிபுக்குள்ளாகும் என்கிறவற்றை ஆய்வு செய்யும் மனபக்குவமோ, சமூக அக்கரையோ இந்திய ஊடகங்களுக்கு சிறிதளவேனும் இருப்பதில்லை. எந்த ஒரு செய்தியினையும் பக்க சார்பாகவோ உண்மைக்கு புறம்பாகவோ வழங்கக் கூடாது என்கிற பொதுஅறிவுக்கூட நமது இந்திய ஊடகங்களுக்கு இருப்பதில்லை இந்த ஒருநிலை சார்ந்த ஊடக மனநிலை இந்திய சூழலில் ஒரு பாசிச வன்மங்களாகவோ, சாதிய அரசியல் சார்ந்தோ எல்லாவற்றிகும் மேலாக தாங்கள் வாங்கிய தொகைக்கு விசுவாசமாகவோ எடுக்கப்படுகிறது என்பதனை நமது இந்திய ஊடகங்கள் முசுலீம்கள் விசயத்தில் பல பொய் பரப்புரைகள் மூலம் நிரூபித்திருக்கின்றன என்றால் அது பொய்யில்லை.

தங்களுக்கு கிடைக்கும் செய்தியில் ஒரு பக்க சார்பின்மை, உண்மை தன்மை என்பது ஊடக தர்மமாக பார்க்கப் படுவதற்கு பதிலாக இந்துத்துவ அரசியல் சார்புதான் அதிக படியான இந்திய பத்திரிக்கைகளில் பரவிகிடக்கின்றது. ஊடகம் என்பது ஒரு செய்தியினை உடனுக்குடன் வழங்கும் அவசர உத்திகளை கையாளும் அதே நேரம் வழங்குகின்ற செய்திகள் மக்கள் மத்தியில் வேறு ஒரு கருத்தில் புரியப்பட்டு செய்தியில் சம்மந்தப்பட்ட இனம் ஒட்டு மொத்த இந்திய பொதுபுத்தியில் தவறாக புரிந்துக்கொள்ள நேரும் என்கிற பொருப்பின்மையும், செய்தியில் இருக்கும் நேர்மையும் கெடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் ஒரு ஊடகவியலாளனின் கடமையாகும் என்பதனை புரிந்துக்கொண்டே தவிர்த்து எழுதும் மன பிரழ்ந்த நிலையினைதான் இந்திய ஊடகங்கள் முசுலீம்கள் விசயத்தில் கையாள்கின்றன.
எனவே ஊடகம் என்பது ஒரு சமுக சீர்திருத்தத்திற்கான கருவி என்பதோ, சமூக நல்லிணக்க நகர்வுக்கான ஒரு பாதை என்பதையோ புரிந்து அதை சரியாக பயன்படுத்தும் நேர்மை உலக முசுலீம்கள் விசயத்தில் இந்திய ஊடகங்களுக்கு இல்லாமல் போனது கவலைக்கிடமான ஒன்று மட்டுமல்ல இந்திய இறையாண்மை என்பதின் கேள்விக்குறியாகவும் படுகிறது.
இந்திய ஊடகங்களின் பயங்கரவாத பார்வை உலக முசுலீம்கள் மீது மட்டும் ஒரு நிலை சார்பாக பதிந்துவிட்டதற்கான காரணங்களை நாம் ஆராய தேவையில்லை என எண்ணுகிறேன். ஏனெனில் உலக அளவில் நிகழ்த்தப்படும் அரசியல் நகர்வுகளில் இசுலாம், இசுலாம் அல்லாத என்கிற இரண்டே அளவுகோள்பிடித்துதான் நிகழ்த்தப்படும் இதை உள்வாங்கும் இந்திய ஊடகங்கள் இந்துவ பாசிச கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் இச்செய்தி எந்தவகையில் உறுதுணையாக இருக்கும் என்பதனை உணர்ந்தே வெளியிடப்பட்டு ஒட்டு மொத்த இந்திய முசுலீம்களின் இந்திய சார்புநிலைக்கு வேட்டுவைக்க நினைக்கின்றன. இது பல சந்தர்ப்பங்களில் தோல்வியை கண்டாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு வெற்றியைதான் தந்திருக்கின்றன என்பதற்கு ஆங்காங்கே நடைபெரும் கைதுகளும், தண்டனைகளும், போலி என்கவுண்டர்களும் உறுபடுத்திவிடுகின்றன.
இந்த ஊடக ஒருநிலை சார்புடைய தன்மை என்பது காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை ஒரே தன்மையுடையதாக இருப்பதன் நோக்கம் நமக்கு அதிர்வை தருகிறது. "இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேய எதிர்ப்பு ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு தங்களது மதகோட்பாடுகளில் எவ்வித சமரசமும் செய்துக்கொள்ளாமல் போராடிய இசுலாமிய களவீரர்களுக்கு சுதந்திர இந்தியாவில் எந்த நிலை தரப்படுகிறது என்பதுதான் இந்திய இறையாண்மையினை கேள்விக்குறியாக்குகிறது". இந்நிலை தொடர்ந்து நிகழ்த்தப்படுமெனில் ஊடகங்கள் மீதான மக்களின் நம்பிக்கையின்மை தளர்ந்து வெருப்புக்குள்ளாகும் அதே நேரத்தில் தங்கள் சொந்த நாட்டின் ஒரு இன மக்கள்மீதான வெறுப்பு எதிர் இனத்திரிடையே வளர்ந்து வளர்ந்து எதிர்கால இந்திய கூட்டு இறையாண்மைக்கே வேட்டுவைக்கும் நிலை ஏற்படலாம் என்பதும் கண்கூடு.
காஷ்மீரில் ஒரு இந்திய முசுலீம் கைதாகிறான் எனில் அது காஷ்மீரின் உள்ளூர் பிரச்னைக்காக கூட இருக்கலாம். காஷ்மீர மக்கள் தங்களின் தனிமனித சுதந்திரம் அல்லது வாழ்வுரிமையில் இந்திய அரசு தலையிடுவதை எதிர்த்து களமாடி இருக்கலாம் ஒரு காஷ்மீரி இந்திய அரசை எதிர்த்த விடயம் ஊடகங்களால் பயங்காரவாதமாக கட்டமைக்கப்பட்டு தங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதனை உணராத கன்னியாக்குமரி மக்களுக்கு முசுலீம் பயங்கரவாதம் என்கிறதாக மூளை சலவை செய்யப்படுவதாகவே படுகிறது.
உலக ஊடக பயங்கரவாத அளவுகோலினால் பார்த்தோமானால் இந்திய ஊடகங்களுக்கு இல்லாத பத்திரிக்கை சுதந்திரம் உலக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதாவென ஒரு அய்யம் ஏற்படுகிறது. ஏனெனில் இதுவரை உலக ஊடகங்கள் குறிப்பாக இசுரேலிய பின்னணியில் இயங்கும் ஊடகங்கள் வேண்டுமென்றே இசுலாமிய மத கோட்பாடுகளை சீண்டிப்பார்ப்பதிலேயே தங்களின் பத்திரிக்கை விளம்பரத்தினை வளர்த்துக் கொள்ளுகின்றன என்பதை பல நிகழ்வுகளிலும், செய்தி வெளியிடலிலும் நாம் அறிந்திருக்கிறோம்.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டுமெனில் அமெரிக்காவில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட "INNOCENCE" படத்தின் முன்னோட்டம் வெளியான போது உலக முஸ்லீம்களிடையே கிளர்ந்த எதிர்ப்புக்குரல் ஒருபுரமிருக்க மேலும் உலக இஸ்லாமியர்களின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக சார்லி ஹெப்டோ என்கிற பிரரெஞ்சு பத்திரிக்கை நபிகளின் படத்தை நிர்வாண கேலிச் சித்திரமாக வெளியிட்டு மேலும் கடுப்பை கிளப்பியது. இவற்றை கண்டித்து அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான அல்ஜீரிய ஜனநாயக ஒன்றியமும், அரேபிய ஒன்றிய அமைப்பும் இணைந்து சுமார் 780,000 யூரோ இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தன (வெரும் இழப்பீடு தொகை இதற்கு தீர்வாகது என்பது எமது கருத்து) இவற்றை எதிர்க்கும்விதமாக எதிரிகள் தரப்பில் வாதாடும் ரிச்சர்ட் மால்கா என்கிற வழக்கறிஞர் கூறுகையில் "மதங்களை நகைச்சுவை பண்புடன் விமர்ச்சிக்கும் பிரஞ்சு மரபை உடைப்பதாக" வாதாடினார்.

ஒரு மதத்தின் கோட்பாடுகளையோ, வழிபடும் தன்மைகளையோ விமர்ச்சிக்கும்போது அது ஒருநிலை சார்பாகவோ சம்மந்தப்பட்ட மதத்தினை ஏற்றுக்கொண்ட மக்களின் மனதினை வேதனைபடுத்தும் விதமாகவோ அமைய கூடாது என்பதனை கிருத்தவ மத அடிப்படையிலான பிரிவினைகளை இருவேறு "கிருத்துவ அமைப்புகள் ஒருவருக்கொருவர் விமர்சிக்கும்போது அது கருத்து கலந்தாய்வுகளாகவே இருத்தல்வேண்டும் மாறாக ஒரு கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட இன்னொரு கிருத்துவ மக்களின் கருத்தினை கேளி செய்வதாக இருத்தல் கூடாது" என்பதனை ரோமானிய கத்தோலிக்க மற்றும் பெந்தகொஸ்தே அமைப்புகளுக்கிடையேயான மோதலின்போது இதே பிரஞ்சு நீதிமன்றம் கண்டித்ததாக எங்கோ படித்த நினைவு. இதே கண்டிப்பு இசுலாமிய மத கோட்பாடுகளை கேளி செய்யும் யூத,கிருத்தவ பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும் என்பதை அந்த வழக்கறிஞரின் மண்டைக்குள் ஏற்றுவதோடு இசுலாமிய எதிர்ப்பு என்றவுடன் கோவணத்தை வரிந்துக்கட்டுக்கொண்டு இறங்க நினைக்கும் ஊடக பயங்கரவாதத்தினையும் கண்டித்தே தீரவேண்டும்.
இப்படியான கண்டிப்புகளை எதோ சம்மந்தப்பட்ட இசுலாமிய அமைப்புகள் மட்டுமே முன்னெடுக்க வேண்டும் என்று கைகழுவி விட்டுவிடாமல் இத்தகைய ஊடக பயங்கரவாதங்களுக்கு எதிராக பிர ஊடகங்களும், பிரமதங்களும் கூட முன்னெடுக்க வேண்டும். ஏனனெனில் கேளிச்சித்திரங்கள்தானே என கிருத்தவ மத நம்பிக்கைகளை இதுவரை எந்த இசுலாமிய பத்திரிகையும் வெளியிட்டு அவமான படுத்தியாதவோ, வழக்கு தொடர்ந்ததாகவோ உலகளவில் செய்திகள் இல்லை.
உலக பத்திரிக்கை பயங்கரவாதம் என்பது இசுலாமிய கருத்தியல் கேளிக்கையாக மட்டுமே நின்றுவிட இந்திய பத்திரிக்கை பயங்கரவாதம் என்பது கருத்தியலுடன் சேர்ந்த இந்திய எளியமக்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாகவே நிகழ்த்தப்படுகிறது. இந்தியாவில் ஏதாவது மூளையில் ஒரு சில முஸ்லீம்கள் இந்திய சட்டமீறல் அடிப்படையிலான வேறு வழக்குகளில் (ஒரு சாதாரன சந்தேக வழக்காகக்கூட இருக்கலாம்) சிக்கிக்கொண்டாலும்கூட உடனடியாக அது ஒரு பயங்கரவாத செயலாக உருமாற்றப்பட்டு அவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை இருக்கும் இசுலாமியர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்கிற ஊடக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அவரை ஒரு தீவிரவாதியாக உறுதிபடுத்தும்வரை ஓயமாட்டோம் என்கிறரீதியில் குதிக்க தவறுவதில்லை.
இதேப்போல் இந்தியாவில் பலமுறை இந்துத்துவ தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கும் உடனடியான இசுலாமிய தீவிரவாதம் என்கிற வண்ணம் பூசப்படுவதும். இந்தியாவிலேயே அதிசிறந்த!!! அத்வானி போன்ற இந்துத்துவ அரசியல்வாதிகள் இது பாகிஸ்தானின் உளவுப்பிரிவின் வேலையாகவோ, இந்திய முசுலீம் அமைப்புகளின் வேலையாகவோ இருக்கக்கூடும் என்பதாக எதாவதொரு பத்திரிக்கையில் கருத்து வெளியிடுவதால் சம்மந்தப்பட்ட நிகழ்விற்கான வழக்கின் போக்கை மாற்றும் வகையிலேயே அமைந்துவிடுகிறது. இதுபோன்ற கருத்து அத்வானியால் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கருத்துகூறப்பட்டு விசாரணையின் போக்கை மாற்றியது நினைவிருக்கலாம். இதேபோன்றே மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இசுலாமிய தீவிரவாதம்தான் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய பத்திரிக்கை பயங்கரவாதம் பின் தொடர்ந்த விசாரணையில் அது "இந்து தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது" என்பதையும்  முக்கிய குற்றவாளியாக பெண் சாமியார் சாத்விபிரக்னயா கைது செய்யப்பட்டார் என்று உறுதிசெய்துக் கொண்ட பின்னரும் இச்செயலுக்காக இசுலாமியர்களிடம் மன்னிப்போ, தங்களது ஊடகங்களில் மறுப்போ வெளியிடவில்லை என்பதே இசுலாமியர்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் எது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
இந்நிலை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் சம்மந்தமே இல்லாத அப்பாவிகளை சந்தேகத்தின் பேரில் நள்ளிரவில் கைது செய்வதும், அவர்களை விசாரணை என்கிற பெயரில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் நடந்தேரியது. இப்படியான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் ஊடகங்கள் தங்கள் இறையாண்மையினை இந்துவத்திற்கு சாதகமாக எழுதிவிடுவதால் சம்மந்தபட்ட வழக்குகளின் விசாரணையின் போக்கு மாறி கைதானவர் மற்றுமின்றி அவர்சார்ந்த குடும்பத்தாரும், அவர்தம் சமூகமும், அவர் நம்பிக்கை கொண்ட மத கோட்பாடுகளும் வெரும் வாய்களின் அவலாக மெல்லப்படும் அபாயகரமான பயங்கரவாதத்தினை வளர்ப்பதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கே சார்ரும் என்பதில் மாற்று கருத்தில்லை.
இதேப்போல் அண்மையில் ஏதாவதொரு வழக்கில் தேடப்படும் முஸ்லீம் குற்றவாளி எங்காவது கைது செய்யப்பட்டால் அத்துடன் பழைய நிகழ்வுகளையும் தூது தட்டி இணைத்து மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் சம்மந்தமில்லாமல் இதற்குமுன் இன்ன இன்ன தீவிரவாதிகள் இங்கேதான் கைது செய்யப்பட்டார்கள், இவர்களுக்கும் அவனுக்கும் தொடர்பா? இந்த ஊர் தீவிரவாதிகளின் கோட்டையா? என்றெல்லாம் புனைந்து ஒரு அப்பட்டமான திரைக்கதையாக எழுதி வெளியிட்டு தங்களின் வியாபாரத்தையும், இந்துத்துவ சிந்தனையினையும் பரப்பிக்கொள்ளுவதில் முனைந்து நிற்கின்றன. அதுவும் ஒரு பத்திரிக்கை வெளியிடும் பொய் செய்தியினை மீண்டும் திரித்து இன்னும் சில பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இவை அனைத்தும் ஒரே சமூகத்தின் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றனவே தவிர வேறொன்றும் இல்லை. இதே நிலையில் இந்தியாவில் பல இடங்களில் இந்துதீவிரவாதிகளால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், வன்முறை பேச்சுகள், வன்முறை தூண்டல்கள் அதை தொடர்ந்த கலவரங்கள் என எதுவும் பரவலாக வெளிக்கொண்டுவருவதில்லை இந்த ஊடகங்கள். இவற்றை வெளிக்கொண்டுவராமல் இருக்க இந்துத்துவ அரசியல்வாதிகளால் இவர்கள் "நன்றாக கவனிக்கபடுவது" மற்றுமின்றி, எதை எழுதவேண்டும் எப்போது எழுத வேண்டும் என்பது உள்பட பாடம் எடுப்பதும் உண்டாம்.

இதை எப்படி நம்மால் இவ்வளவு ஆணித்தரமாக உணர முடிகிறது என்பதை /நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நேர ஊடக தர்மங்கள் விலக்குகின்றன. தேர்தலின் போது எல்லா ஊடகங்களும் மோடி புராணம் பாடியதை நாம் அறிவோம். இதனால் பாமர மக்களின் மனபிரழ்வு நிகழ்திருப்பதையும் அதை தொடர்ந்த அரசியல் மாற்றத்தையும் நம்மால் உணர முடிகிறது. ஒரு ஊடகம் என்பது எந்நிலையிலும் தனது தர்மம் தவறாது நடத்தல் வேண்டும் அது தவறப்படுகிறது என்றால் அத்தகைய ஊடகம் சமூகத்திலிருந்து விளக்கப்பட வேண்டும் ஏனெனில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஊடகமும் சமூகத்திற்கான செய்தி  வழங்குதலுக்கு தகுதியற்றவை என்றே நாம் கூற இயலும்.

மேலும் பொருள் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்க குறிப்பிட்ட இசுலாமிய மக்களின் மீது மட்டும் வெருப்பை உமிழும்படி ஊடக தர்மம் செயல்படுவது அழகும் அல்ல தர்மமும் அல்ல என்பதனை ஊடவியலாளர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். மேலும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக ஒருபோதும் உலகளவில் இஸ்லாம் மதமோ அதை பின்பற்றும் முசுலீம்களோ இருக்கப்போவதில்லை என்பதையும் தெள்ளத்தளிவாக ஊடகவியலாளர்கள் உணர்ந்து அப்படிபட்ட முசுலீம் சமூகத்தின் உணர்வுகளோ அல்லது இந்திய இறையாண்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்கிற சமூக நல்லிணகத்திற்கு தங்கள் ஊடகம் வெளியிடும் தவறான செய்திகள் வழிவகுக்கக்கூடாது என்பதையும் உணர்ந்து, முசுலீம்கள் குறித்த ஒரு செய்தி கிடைக்கிறதெனில் அதன் உண்மை தன்மையினை அறியும்விதம் பல நிலைகளில் ஆய்வு செய்து செய்தியில் துளியேனும் கற்பனை கலக்காமல் வெளியிட வேண்டும் எனவும். தொடர்ந்து முசுலீம் சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையே இருக்கும் நல்லுறவினையும் பேணவேண்டும் எனவும் வளியுறுத்து கூறிக்கொள்ளுவதில் கடமை பட்டிருக்கிறோம்.

http://www.pnotimes.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/ 
துபை.12.08.2014
(கட்டுரைக்கு தேவையான குறிப்புகள் வலைதளங்களில் எடுக்கப்பட்டவையே நம் கற்பனையல்ல)
கெடுப்பவன் கதிகலங்க
தடுப்பவன் தலைமீதேறி
சேலம் மிரள....
சிறுத்தைகளே
சீறி வாருங்கள்.

Sunday, March 23, 2014

நிரந்தர அடிமைகள்

அடேய் பேரினவாத கட்சிகளா
ஏதாவதொரு பொய்யை பிரித்துவிட்டு
எங்கள் ஓட்டுகளை வாங்கியபின்
திரும்பி பார்ப்பதில்லை என
"சத்தியபிரமாணம்" எடுத்துவிட்டு
பிறகு
கோடிகளில்
உங்கள் குடலை நிரப்புங்கள்

ஒரு சிறு வேண்டுகோள்
குறைந்த அளவு எங்களை
பட்டினியில் சாக விடாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஓட்டு போடவாவது
நாங்கள் உயிரோடிருக்க
வேண்டுமல்லவா.

Friday, March 07, 2014

துரோகிகளை துரத்த வாருங்கள் விடுதலைச் சிறுத்தைகளே

நடந்துவிட்ட துரோகம் என்பது கட்சிக்கோ, எங்களுக்கோ அல்லது திருமா அண்ணனுக்கோ ஒரு திடீர் திருப்பமல்ல.

எங்கள் தலைவருக்கு வெளியில் இருக்கும் துரோகங்களைவிட உள்ளே ஆட்கொண்டிருக்கும் துரோகங்களே அதிகமதிகம். இவை அத்தனை துரோகங்களையும் நெஞ்சில் வாங்கி கட்சியையும், எங்களையும் ஒன்றி பிணைந்திருப்பவர் அவர்.

ஒரு உண்மை தொண்டன் தீக்குளிக்கவும், தோழர்கள் துரோகிகளின் கொடும்பாவிகளை எரிக்கவும் செய்கிறார்கள் என்றால் எங்கள் முதுகில் குத்தப்பட்டதை உணர்ந்தவர்களின் ஆவேசம் அது.

தலைவர் மீதுகொண்ட எல்லையற்ற அன்பாலும், தோழர்களின் சீறிய உழைப்பாளும் தலைவர் அவர்களை தனித்து பெருவாரி வாக்கு வேறுபாட்டில் வெற்றிபெறவைத்து துரோகிகளின் முகத்தில் கரிபூச வைப்பதில்தான் நமது எதிர்கால வரலாறு எழுதப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

தனித்து திரண்டு தமிழகம் மிரள நாங்கள் வளர எங்களை தூண்டிய கருணாநிதி கும்பலே உங்கள் கட்சிக்கு ஆயுள் இருந்தால் பார்...எங்களின் மூச்சுகளில் வாழும் எம்மின எழுச்சியினை..

உன் பாணியிலேயே சொல்லுகிறேன்..
இன்றைய திரழ்ச்சி... நாளைய எழுச்சி...

பெண்கள் தினமாம்...

புகைமூட்டத்தில் கண்கள் எரிய மூக்கை சிந்தி சிந்தி அழுகையை அடுப்படிக்கு மேல் வெளிவாராமல் அடக்கிக்கொள்ளும் அல்லது அடக்க வைக்கப்படும் பெண்களுக்கிடையில்....

பழைமைச்சொல்லி,வேதம் சொல்லி, கட்டுப்பாடுகள் சொல்லி பெண்ணை படுக்கையறை தாண்டவிடாத கயவர்களையும், சன்னல் கம்பிகள் உடைத்து சனங்களின் கவிதைப்பாடும் பெண்களையும் நினைவேந்தி...

"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய
பெண்களை அவமதிக்கிறதோ,

எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,

எந்தவொரு மதம் பெண்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்"

என்பது என் கூக்குரல் அல்ல... பெண் குலம் சொல்லி கட்டைவிரலுக்குமேல் கண்களை தூக்காதே என்பதற்கெதிரான கலகக்குரல். அத்தகைய கலகக்குரல்தான் என் காதுமடல் பிடித்து தூக்கி நிறுத்துகிறது.

கடந்த நூற்றாண்டுகளில் ஆணாதிக்கமே பேசிப்பேசி, புளித்துவிட்டதால் இனி ஆணாதிக்க பேச்சுகளை ஒரு சாக்கடையை கடப்பதுப்போல் கடந்துவிட்டு, பேசட்டும் பெண்கள் பேசட்டும் தவறுயிருப்பின் தட்டிக்கேளுங்கள் இப்போதல்ல இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து என்கிற என் வேள்வியை தொடருகிறேன்.

பூஞ்சை பிடித்த உங்கள் சட்டங்களால் மவுனமாக்கி விட முடியாது பெண்களை, அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒலித்து ஒலித்து ஒலித்து நீங்கள் செவிப்பறைகள் கிழிய அலறிகொண்டே ஓடவேண்டும். இதோ இங்கேயும் தேவைபடுகிறது வன்முறைக்கெதிரான வன்முறை. என்ன செய்ய திணித்தவர்கள் நீங்கள்தானே...

Friday, December 06, 2013

ஒற்றுமையெனும் கயிற்றை பற்றி பிடியுங்கள் இசுலாமிய தோழர்களே

திசம்பர் 6 அரசியல் மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்...அம்பேத்கர் அவர்களை எந்த வகையிலும் இந்திய பெரும்பான்மை மக்கள் நினைத்து விட கூடாது என்றுதான் அந்த நாளில் பாபர் மசூதியை இடித்தனர் காவி காலிகள். இதேப்போல் மிக "நுணுக்கமாக" நிறைவேற்ற பட்ட காலிகளின் காரியங்கள் பற்பல மதசார்பற்ற இந்தியா என்று பீத்திக்கொள்ளும் இந்திய வரலாற்றில் வடுக்களாக பதிந்துள்ளன.

திசம்பர் 6ஆம் தினத்தினை சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத காங்கிரசு அரசை கண்டிப்பதற்கும், இடிந்து தரைமட்டமாகிபோன இந்திய மதச்சார்பின்மை இறையாண்மையினை மீட்டெடுக்கவுமே இந்திய இசுலாமிய மக்கள் ஒன்றிணைந்து வருடந்தோரும் புரட்சி செய்கின்றனர். இருந்தும் காங்கிரசு அரசோ மறந்தும் நாங்கள் இந்திய மதசார்பின்மையினை மிட்கமாட்டோம் என்கிற அசைக்க முடியாத கொள்கையால் தாங்கள் கட்சியால்தான் வேறுபாடு "கொள்கையால் பி.ஜெ.பி தான்" என்பதை வருடம்தோரும் புதுபித்தும் வருகிறது.

இனமீட்சி நெருப்பு அம்பேத்கரின் வழியில் கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும், தங்களின் உயரிய மத நம்பிக்கையின் அடையாளமான பாபர் மசூதி நில மீட்பில் தீவிரமும் காட்டி அனைத்து சிறுபான்மை மக்களுடன் ஒருங்கிணைந்து இப்போராட்டத்தை இசுலாமியர்கள் நடத்தினால் இந்திய மதசார்பு அரசியல் அடாவடிகளுக்கு ஒரு மிரட்சியினை தர இயலும் என்பது உண்மை.

அத்தகையதொரு இனமீட்சி போராட்டத்தில் தலைவர்.தொல்.திருமாவளவனையும் அவர்தம் கட்சி தோழமைகளுடனும் "வாக்கு அரசியல்" தளத்தில் ஒருங்கிணைந்து களபோராடினால் வருங்காலங்களிலாவது இத்தகைய போராட்டங்களை இந்தியாவில் அமையும் நடுவன் அரசுகள் கண்டு நடுங்கும், அதில் சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்புகள் உயர்ந்து சாதி,இன விடுதலைகளும் மலரும் என்பதும் அவரோடு போராட்ட களத்தில் ஒருங்கிணைந்த இசுலாமிய சமூகத்தின் சொத்தான பாபர் மசூதி நிலமும் மீட்கப்படும் என்பது உறுதி.
இதற்கெல்லாம் வித்திட அரசியல், சமுதாயா தளங்களில் பல குழுக்களாக பிரிந்துகிடக்கும் இசுலாமிய சகோதர அமைப்புகள் முதலில் ஒற்றுமையெனும் கயிற்றை பற்றி பிடிக்க உடனே இணையவேண்டும் என்பது என் அவா.

"புரட்சி நெருப்பு" தொல்.திருமாவளவன் வரலாற்று குறும்படம்

தலித்களின் வரலாறுகளும், அவர்தம் விடுதலை குறித்த பதிவுகளும் 'கவனமாக' புறந்தள்ளபடுவதும், புறக்கணிக்கப்படுவதும் இயற்கையாக நிகழும் ஒன்றே. இத்தகைய சூழலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரான நமது வரலாற்று பதிவுகளை நாமே இயற்கையேடுகளில் பதிவு செய்துவைப்பது காலத்தின் கட்டாயாமோ இல்லையோ, அது நம் அனைவரின் கடமையாகவும் உணர்ந்துள்ளோம்.

இக்கடமையாக்களின் தொடர்ச்சியாக எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் வாழ்க்கை குறிப்பு வரலாறுகளை தொகுத்து அழகிய கிராமிய நடனத்தின் பின்னணியில் வடிவமைத்து "புரட்சி நெருப்பு" என்கிற குறும்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் செ.பி.முகிலன்.

தலைவர்.திருமாவளவனின் பிறப்புமுதல் இன்றைய அரசியல் நகர்வுகள் வரை அத்தனை நிகழ்வுகளையும் அடுக்கி அடுக்கி தொகுத்திருப்பது அருமை. நம்மில் அறிந்தவரும் அறியாதவரும் திருமா குறித்து சுருக்கமாகவும் ஆழமாகவும் அறிந்துக்கொள்ளும் வகையில் இக்குறும்படம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இச்சீறிய பணியை திறம்பட செய்த இயக்குனர் செ.பி.முகிலன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும் அவர்தம் பணிகளை ஊக்குவிப்பதற்காகவும் இன்று (06.12.2013) அஜ்மான் அமீரகத்தில் நிகழ்த்தப்பட்ட அண்ணல்.அம்பேத்கர் நினைவு தினத்தில் அமீரகம் வாழ் அன்பர்கள் அறிந்துக்கொள்ளும்வகையில் திரையிட்டு மகிழ்ந்தோம் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

இக்குறும்படத்தினை இயக்கியவருக்கும், தயாரித்தவர்களுக்கும் மற்றும் இக்குறும்படம் வெளிவர உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் அமீரக தாய்மண் வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்துகளையும் வரவேற்புகளையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

அன்பர்கள் இக்குறும்படத்தினை காண இங்கே சொடுக்கவும்:
https://www.youtube.com/watch?v=hcXHR_ENQec&feature=share

https://www.youtube.com/watch?v=hcXHR_ENQec&feature=share

Thursday, September 05, 2013

எழுத்து அறிவித்தவருக்கு வீர மரியாதைகள்

ஆசிரியர் தினமான இன்று... "அழகாக எழுதுவது எழுத்தல்ல... அநியாயத்தை எழுதுவதே எழுத்து" என்று எம் பிஞ்சு கைகள் பிடித்து கற்றுத்தந்த ஆசான்கள்....

முதல் வகுப்பு  தமிழ்த்திரு. அமுதா (திருவாரூர் பாத்திமா பள்ளி)
2,3 ஆம் வகுப்புகள் தமிழ்த்திரு. தையல்நாயகி (திருவாரூர் பாத்திமா பள்ளி)
4,5 ஆம் வகுப்புகள் தமிழ்த்திரு. ஸ்டெல்லா மேரி(திருவாரூர் பாத்திமா பள்ளி)
6,7,8,9,10 ஆம் வகுப்புகள் (அரசு மேல்நிலைப் பள்ளி-பரங்கிப்பேட்டை)
தமிழ்த்திரு. இராஜசேகரன்
தமிழ்த்திரு. மரியம் இராஜசேகரன்
தமிழ்த்திரு. அப்பாவு அவர்கள்
தமிழ்த்திரு. கனி
தமிழ்த்திரு. முத்து சிதம்பரம்
தமிழ்த்திரு. இ.இசுமாயில்
தமிழ்த்திரு. இசுமாயில் (புவனை தாசன்)
தமிழ்த்திரு. நெடுமாறன்
தமிழ்த்திரு. ஞான சம்மந்தன்
தமிழ்த்திரு. முகம்மது சபி
தமிழ்த்திரு. கல்யாண் சுந்தரம்
தமிழ்த்திரு. ஜெயச்சந்திரன்
தமிழ்த்திரு. கண்ணன்
தமிழ்த்திரு. சி.டி.உத்தண்டன்

தமிழ்த்திரு. கே.சி.வி

தமிழ்த்திரு. வேலாயுதம்

என இவை பட்டென நினைவுக்கு வந்த பெயர்களே..

மற்றும் தறி, தச்சு, ஓவியம், விளையாட்டு, இயற்பியல், வேதியல், உயிரியல், தாவரவியல், சமூக சேவை, NCC, Scout ஆசான்களுக்கும்...

அதே எழுத்துகளைக் கொண்டு மரியாதை செய்வதே எம் எழுத்திற்கு பெருமையென நினைவுள்ளவரை "வீர மரியாதை" செலுத்தி மகிழ்கிறேன்.


கவிமதி (எ) அசன் பசர்.

Tuesday, August 20, 2013

பேரா.பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ்...

சமூகம், அரசியல், மதம், சாதி, கடவுள் குறித்த எனது மறு வாசிப்புகளும், தீவிர தேடல்களும், மனிதயினத்திற்கு இக்குறியீடுகள் ஏற்படுத்திவைத்திருக்கும் மாற்றங்களும், சக மனிதனிடமே நிகழ்த்தப்படும்  பகடை விளையாட்டுகளும் என்னுள் அலை அலையாய் மாற்றங்களை கொண்டுவந்த எனது பகுத்தறிவு அகவை வளர் கால கட்டத்தில் மக்கள் அரசியல், பொதுவுடமை, பகுத்தறிவு என என் கவனம் திரும்பி பயணிக்க தொடங்கியபோது  தான் ஒரு ஒலி நாடாவின் பெரியாரிய கருத்துகள் மூலம் அய்யா பெரியார்தாசன் எனக்கு அறிமுகமாகிறார். (இதுவரை நேரில் சந்தித்ததில்லை, வாய்ப்புகிடைத்தும் தவிர்த்துவிட்டதும் நிகழ்ந்திருக்கிறது)

அய்யா பெரியார் தாசன் தனது பகுத்தறிவு கருத்து மிக்க பேச்சாலும், எதிர் அரசியலில் ஆய்வுமிக்க பல வினாக்களாலும், மதவாத அரசியல்மீதும், மக்கள் விரோத போக்குமீதான எதிர் விணைகளாலும் என்னை கவர்ந்த பேச்சாளர்களில் ஒருவரானார். அதுவே காலப்போக்கில் அவர்தம் தனிபட்ட கருத்து மாற்றங்களால் இடம்விட்டு இடம் பெயர்ந்துக்கொண்டே இருந்தபோக்கு என்னை அவர்தம் கருத்துகளிலிருந்து சற்று தள்ளிவைத்தது என்பதும் உண்மை.

இறுதியாக அவர் இசுலாத்தை ஏற்றபோது "முஸ்லீம்கள் தங்களுக்காக வாதிடும் ஒரு அறிஞரை இழந்துவிட்டார்கள்" என்றும், இனி அப்துல்லாவாக அவர் இசுலாமிய மக்களுக்கு ஆதரவாக அரசியல் பேச இயலாது என்றும் எழுதினேன். இதனால் நான் ஏதோ அவர் இசுலாத்தை தழுவியதற்காக வெருப்பில் பேசுவதாக பல விமர்சனங்களுக்கும் ஆளாக்கப்பட்டேன். ஆனால் நான் வைத்த கருத்துபோலவே இசுலாத்தை தழுவியப்பிறகு அவரின் மக்கள் அரசியல் பேச்சுகள் தவிர்க்கப்பட்டு ஆன்மீக ஏற்பு/தொடர்வு பற்றின பேச்சுகளே நிறைந்திருந்தன.
 
ஒருவர் மீதான கருத்து என்பது அவர்தம் தனிமனித சுதந்திரத்தின் பரிணாமங்களில் எவற்றிலாவது சார்புறும் போது அவர்மீது கொண்ட பொது பார்வையினால் வைக்கப்படுவதாகவே கருதுகிறேன். நானும் அதே எண்ணத்தில் தான் கருத்து பகிர்ந்தேன். இதற்காக என்னை கருகியவர்கள் ஏராளம் ஒரு கட்டத்தில் பெரியார்தாசனே மாறிவிட்டார் நீ என்ன சொல்லுகிறாய் என்கிற ரீதியிலான வினாக்களை வீசியவர்களும் உண்டு. 

அவர்களுக்கெல்லாம் என் விடை 'மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதாகவும், பெரியார்தாசன் பெரியார் அல்ல என்பதாகவும் இருந்தது. அவர் எத்தனை பகுத்தறிவு கருத்துகளை பேசிவந்தாலும் அவரை எந்த இயக்கமோ, திராவிட கட்சிகளோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்கான காரணமே அவருக்குள் நிகழும் ஒரு நிலையற்ற மாற்றங்களே என்பதும் என் கருத்து.

ஒரு மாசற்ற அறிஞர் நம்மிடமிருந்து பிரிந்துவிட்டார் என்று கவலையுறுகிற அதேவேலை தன்னை "பெரியாரிய தோழர்கள் தாக்கலாம்" என்கிற புரட்டும் அதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பாதுகாப்பு வேண்டியதும் என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன. துறவரத்தில் பகுத்தறிவை துறப்பதும் ஒரு நிலையோ?

அன்னாரை பிரிந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Saturday, August 17, 2013

மின்மினி துபாய் ஹைக்கூ சிறப்பிதழ்

வணக்கம் அன்பர்களே

ஹைக்கூ இதழின் முன்னோடியாக சென்னையிலிருந்து காலாண்டிதழாக 
வெளிவந்துக்கொண்டிருக்கும் *"மின்மினி ஹைகூ இதழின்"* துபை ஒருங்கிணைப்பாளராக நான் நியமிக்கப் பட்டிருக்கிறேன் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்
கொள்ளுவதுடன்.
தொடர்ந்து *"மின்மினி துபாய் ஹைக்கூ சிறப்பிதழ்"* வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறோம். இச்சிறப்பிதழில் துபை மட்டுமல்லாது வெளிநாடு வாழ்
அன்பர்களின் படைப்புகளும் வெளிவர இருப்பதால் அன்பர்கள் தங்களின் "ஹைக்கூ
கவிதைகளில் சுமார் 10 கவிதைகளை அனுபித்தர வேண்டுகிறேன்.
*உங்கள் குறிப்புக்காக:*

1. பெயர்
2. தாயக முகவரி
3. ஒளிப்படம் (விரும்பினால்)
4. நன்கொடை 20 திர்கம்கள்.
5. ஹைக்கூ வந்துசேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 25 2013.
மேலும் நன்கொடை வழங்கும் படைப்பாளருக்கு மட்டும் அவரின் தாயக முகவரிக்கு இச்சிறப்பிதழ் அனுப்பப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அன்பர்கள் இதை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும்
கலந்துக்கொள்ள அழைக்கவும்.

Friday, August 16, 2013

67ஆவது வருடமாக சுதந்திர தின வாழ்த்துகள்

"மினரல்" மைந்தருக்கு மட்டுமே சுதந்திரம்
மண்ணின் மைந்தருக்கு...
சாக்கடை நீர்,

வயிறு நிரைக்கும்
"தாகம்" தீர்க்காது...

எங்கள் தாகம் விடுதலை

மேட்டுகுடிகளுக்கு
சுதந்திர தின வாழ்த்துகள்

பின்குறிப்பு:
(நேற்று நான் சாக்கடை அள்ள போய்விட்டதால் வாழ்த்து சொல்ல தாமதமாகிவிட்டது)

Sunday, August 11, 2013

குயிலி!!! மறைக்கப்பட்ட வரலாறும் மறுக்கப்பட்ட விடுதலையும்- கவிமதி

"குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி"-ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களின் ஆய்வு நூல் உணர்த்தும் வரலாற்று பதிவுகள்.

மண் விடுதலையும் பெண் விடுதலையும் தான் உண்மையான விடுதலை அதை தவிர்த்து நாமும் நாடும் விடுதலையடைந்து விட்டதாக நாம் பிதற்றிக்கொள்வது அபத்தமாகவே இருக்கிறது. 

எப்போது தாய் வழி சமூகம் என்கிற நிலை மாற்றப்பட்டதோ அப்போதிருந்தே நம் தாய்மண் விடுதலையும் கேள்விக்குறியாகி போனது, தற்போது நாம் அடைந்திருப்பது வெரும் "கைமாற்று விடுதலை"தான் ஏனெனில் நாம் வெள்ளையர்களின் கைகளிலிருந்து கொள்ளையர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வதே நாம் விழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஆதாரம் அதை விடுத்து நாம் விடுதலை அடைந்துவிட்டோம் என்பது "பூனை கண்களை மூடிகொண்டு பொழுது விடியவில்லை" என்பதாகும்.

இருப்பினும் நாடு விடுதலையடைந்து விட்டதாக பொதுபுத்திக்கு நம்பவைத்துவிட்டதால் நாமும் அந்த புள்ளியிலிருந்தே தொடங்கவேண்டியுள்ளது. நாடு விடுதலையடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழலில் பெண்விடுதலையும், மண்விடுதலையும் இதுவரை நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் செய்திருக்கின்றன திராவிட கட்சிகள். பெண்விடுதலைக்கான பெரியாரின் போராட்டங்களும், மனித விடுதலைக்கான அம்பேத்கரின் போராட்டங்களும் இந்திய திராவிட கட்சிகளின் கொள்கை புழுதியிலும், இனாம் வழங்களிலும் காணாமல் போய்விட்டன.

இந்திய திருநாட்டில்!!! எப்போது ஆரிய நுழைவு நிகழ்ந்ததோ அப்போதிலிருந்தே மனித அடையாளங்கள் அழிக்கப்பட்டு மனிதரில் ஏற்ற தாழ்வு என்கிற "மனு" அடைப்படையிலான அடையாளங்கள் நுழைக்கப்பட்டன. இதை எதிர்த்த மண்ணின் மைந்தர்கள் சிதைக்கப்பட்டனர். அதுவரை கூட்டாகவும், குடும்பமாகவும் சகோதர பாசத்துடனும் வாழ்ந்த தமிழர் தம் அடிபடை அடையாளமான "சேரி" என்கிற அடையாளத்தை துறந்து "சாதி" அடையாள சாக்கடைக்குள் விழுந்தனர்.

அன்று திராவிடர்களின் நரம்புகளில் ஏற்றப்பட்ட "சாதி" போதனையானது இன்றுவரை தெளிந்துவிடாமல் ஆரியம் பார்த்துக்கொள்கிறதோ இல்லையோ ஆரிய "பஞ்சாமிருதங்களை" வாங்கி குடிக்கும் சாதி இந்துக்களும், மதவாதம், சாதிவாதம் என்று இவர்களை ஓட்டு எந்திரங்களாகவே பயன்படுத்தும் திராவிட கட்சிகளும் பாதுகாத்து வருகிறார்கள் என்பதற்கு நாகரீக காலத்தில்!!! நிகழும் "கெளரவ கொலைகளே" சான்று பகர்கின்றன. இவ்வகை கெளரவ கொலைகளை கொண்டே தமிழின அடையாள அழிப்பு சக தமிழரின் சிந்தனை நரம்புகளில் தீண்டாமை என்றும், மூடநம்பிக்கை என்றும் நுழைக்கப்பட்டு தமிழன் சக தமிழனையே தனக்கு கீழான அடக்குமுறைக்கு உட்படுத்தும் மனிதமையற்ற செயல் தொடரப்படுகிறது. இதன் தொடர்ச்சியே ஆரியம் தமிழரின் வரலாறுகளை விழுங்கியதுப்போல் சாதி சக தமிழரின் வரலாறுகளை "தாழ்த்தப்பட்ட வரலாறுகள்" என தனியே ஒதுக்கிவைத்தும், இயன்றவரை இருட்டடிப்புகள் செய்தும் வருகின்றன. இச்செயல்களை இலக்கியத்திலும், ஆய்வுகளிலும் படைப்பாற்றல் மிக்க அறிவுஜீவிகள் அரங்கேற்றிக் கொண்டிருப்பதுதான் நாம் நாகரீகத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறோம்??? என்பதை உரண முடிகிறது.

அத்தகையதொரு மறுக்கப்பட்ட வரலாற்றின் குறியீடுகளை "குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி" என்கிற இந்நூலின் மூலம் வெளிச்சப்படுத்துகிறார் ஆசிரியர். சோ.உலகநாதன். வேலு நாச்சியார் அவர்களின் வரலாறுகள் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் குயிலின் பங்கும் பேசப்படவேண்டும் என்கிற வரலாற்று நீதியினை தவிர்த்தே நம் படைப்பாளிகள் சமூகம் எழுதிவருகிறது என்பதனை தெளிவாக்குகிறார்.

வேலு நாச்சியாரை பொருத்தவரையில் சாதிய கட்டமைப்பிலிருந்து வேறுபட்டே சிந்தித்திருக்கிறார் என்பதற்கு சான்றாக தனது கணவருக்கு அவர் விரும்பிய தலித் பெண்ணையே மணமுடித்தும், மகுடம் சூட்டியும் ஒரே நேரத்தில் இரண்டு புரட்சிகளை செய்திருக்கிறார். வளர்ந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்துவரும் அரசியல்வாதிகளோ இவ்வித புரட்சிகளை அவமதித்தும், சீர்திருத்த காதல் திருமணம் என்பதையும், அரசியலில் தலித் தலைமை என்பதனையும் ஏற்க மறுத்தும், இயன்றவரை சாதி சண்டைகளை வளர்த்தும் குளிர் காய்ந்துக் கொண்டிருக்கின்றன.  

"காளையார் கோவில் போர்" காட்சிகளிலேயே தொடங்கிவிடுகிறது இவ்வீரம் செரிந்த மண்மீட்பு வரலாற்றின் வேகமும், அதை தொடர்ந்தே நூல் முழுக்க பரந்துகிடக்கும் வேலு நாச்சியார் படையின் விவேக நடவடிக்கைகளும், குயிலியின் மண்மீட்பிற்கான தியாக எதிரடிகளும்.

குயிலி ஒரு தலித் பெண். தலித்துகளுக்கு கல்வியறிவு இருக்க வாய்ப்பில்லை, மேலும் நம்பிக்கைக்கும், அடிபணிதலுக்கும் (விசுவாசம்) எதிர் கேள்வி கேட்க தெரியாத தாழ்வு மனப்பான்மையும் உடையவர்கள் என்கிற "சிலம்பு வாத்தியாரின்" தவறான எண்ணங்களில் மண்னை தூவி. அவர்தம் இனத்துரோக ஆட்காட்டி வேலைக்கு தான் பலியாவது மட்டுமின்றி வருங்காலங்களில் தன் இனம் பலிச்சொற்களுக்கு ஆளாகலாம்  என்பதனை முற்றும் உணர்ந்தவளாகவே குயிலி தன் கைகளாலேயே துரோகி சிலம்பு வாத்தியாருக்கு மரணத்தை தண்டயாக வழங்காமல் வரலாற்று பாடமாக வழங்குகிறாள்.

ஒருகால் குயிலி படிப்பறிவற்று சூழல் காரணமாக இக்கொடுஞ்செயலுக்கு தான் அறியாமலேயே துணைபோயிருந்தால் இன்று வேலுநாச்சியார் பற்றிய குறிப்புகளில் குயிலியின் தியாகத்தினை நீக்கி பதிவுகள் செய்யும் வரலாறுகள் அவளை நேரடியான "துரோகி" என்றே கூச்சமில்லாமல் கூறிக்கொண்டிருக்க வாய்ப்பளித்திருப்பாள். இன்று மறைக்கப்படும் அதே வரலாறுகள் தலித்துகளை பழிக்கூறுவதெற்கென்றே மறைக்காமலும், மறக்காமலும் பதியபட்டிருக்கும் என்பதில் அய்யமில்லை. நல்லவேலையாக குயிலி கற்ற கல்வி குலம் காத்த கல்வியாகவே அமைந்தது. இயற்கை தலித் வரலாற்றில் குயிலியை நன் குருதி நாயகியாகவே நிலைத்திருக்க செய்துவிட்டது நமகெல்லாம் பெருமையே.

குயிலியின் வீர தீர செயல்களாலும், நுட்பமான திட்டங்களாலும் வேலுநாச்சியாரின் மண்மீட்பு போர்கள் எல்லாம் வெற்றி கண்டிருக்கின்றன. இதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய் குயிலி தான் விரும்பியே வேலுநாச்சியாரின் மெய்காப்பாளராகி அவர்தம் உயிருக்கேற்பட்ட ஆபத்துகளை தான் முன்னின்று எதிர்த்து வெற்றிகண்டாள் என்பதற்கு நூல் முழுக்க சான்றுகளும், நிகழ்வுகளும் பதிவாகியிருக்கின்றன.

இக்கட்டுரை எழுதும் நோக்கில் சில பதிவுகள் தேடி இணையத்தில் உலவும் வேலையில் வேலுநாச்சியாரின் வரலாற்று பதிவுகளில் எல்லாம் குயிலியின் தியாகம் "மிக கவனமாகவும், நுட்பமாகவும்" தவிர்க்கப் பட்டிருப்பதோடல்லாமல் குயிலியின் தியாகம் குறித்த ஆங்கிலேயே குறிப்பேடுகள் எதுவும் இல்லை என்றே சில பார்பனிய பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. எப்படியிருக்கும் ஆங்கிலேய கருவிக்கிடங்கிற்கு தன்னை களக்கருவியாக தந்து அவர்தம் ஏகாதிபத்தியத்தை ஒடுக்கிய உண்மையினை வெட்கப்பட்டுக்கூட ஆங்கிலேயே வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்யாமல் விட்டிருக்கலாம் என்கிற "தன்புத்தி" இல்லாமலேயே பார்பனியம் இருட்டடிப்பு செய்திருக்கிறது என்பதை நம்மால் "கவனமாக புரிந்துக்கொள்ள முடிகிறது".

வேலுநாச்சியாரின் வரலாறு எவ்விடத்தில் பாடப்படுகிறதோ அவ்விடங்களிலெல்லாம் குயிலின் வரலாற்று நுணுக்கங்கள் பதியப்படவேண்டும் ஏனெனில் உலகின் "முதல் தற்கொடை போராளி"யாக உருவெடுக்கும் குயிலி எவ்வித தன்நலமும் இல்லாமல் தான் ஏற்ற தளபதி பதவிக்கு மெருகேற்றும் வகையில் வேலுநாச்சியாரின் இறுதி வெற்றிக்கும் தன்னை "கொடையளித்து" வரலாறு முழுக்க நிறைந்து கிடக்கிறாள். இப்படியொரு மாட்சிமைதாங்கிய வரலாற்றை விழுங்க நினைக்கும் ஆரிய ஆய்வுகளை களைந்து இனிவரும் காலங்களிலாவது தமிழருக்கென எழுதும் எழுதாணிகள் "கங்காணிகளாக" மாறிவிட வேண்டாம் என்கிற கோரிக்கையினை நம்மால் வைகாமல் இருக்க இயலவில்லை.

நூல் விபரம்: 

நூல் பெயர்: குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி 
ஆசிரியர்: ஆலம்பட்டு சோ.உலகநாதன் 
வெளியீடு: கமலா உலகநாதன் நினைவு திருக்குலக் கல்வி அறக்கட்டளை 
ஆலம்பட்டு, குருந்தம்பட்டு அஞ்சல்,
கல்லல் வழி- 630 305 
பேச:0091 9442816270 
விலை: 80 ரூபாய்.

மின்மினி ஹைக்கூ இதழ்


Saturday, July 27, 2013

தீவிரவாதத்திற்கு சாவுமணி அடிப்போம்.

அன்பிற்கினிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று நம் சமூகம் சந்தித்துக்கொண்டு இருக்கும் சவால்கள் ஏராளம் அதிலும் குறிப்பாக எதிரிகளின் கைகள் ஓங்கிய நிலையில் இருக்கும் இந்த நேரம் மிகவும் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்ப்படுத்தி உள்ளது.

அன்று நம் முன்னோர்கள் சந்தித்த பல பிரச்சனைகளை விட இன்று நாம் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனை மிக அபாயகரமானது, ஆதம் (அலை) காலம் முதல் 19ம் நூற்றாண்டு வரை நாம் சந்தித்ததெல்லாம் நேருக்கு நேர் போர், பல வெற்றியும் சில தோல்விகளை சந்தித்து உள்ளோம். வெற்றி தோல்வி வீரத்தின் வெளிப்பாடாக அமைந்ததது. ஆனால் இன்றோ யுத்தம் மறைமுகமாக அரேங்கேரிக்கொண்டுள்ளது. இப்பொழுதுள்ள யுத்தம் தயிறை போன்று உருவாக்கப்படுகிறது. உரைமோரை கலந்து பாலை அதன் தன்மையை இழக்க செய்வது போன்று தீவிரவாதத்தை இஸ்லாத்துடன் இணைத்து அதன் தன்மையை இழக்க முயற்ச்சி நடக்கிறது உலகெங்கும்.

முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்க கோட்சேவின் கைகளில் இஸ்மாயில் என்ற பச்சை குத்திலிருந்து ஆரம்பித்து இந்திய முஜாஹிதீன் வரை இன்று நாம் அனுபவிக்கும் மறைமுக யுத்தம் நம்மால் எதிர்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

நியுயார்க் சிட்டி முதல் பிள்ளையார்பட்டி வரை எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் அதில் முதல் குற்றவாளியாக இணைக்கப்படுவது இழிச்சவாய முஸ்லிம்கள் தான். மும்பையில் குண்டுவெடித்தாலும் முஸ்லிம், அம்பையில் குண்டுவெடித்தாலும் முஸ்லிம், கோயிலில் வெடித்தாலும் முஸ்லிம், முஸ்லில்கள் தொழும் பள்ளியில் வெடித்தாலும் முஸ்லிம். இவர்கள் நம்மை குற்றம் கூறாத ஒரே குண்டுவெடிப்பு தீபாவளி பண்டிகையின் பொழுது வெடிக்கப்படும் குண்டுகள் தான் கூடிய விரைவில் அதையும் எதிர்ப்பார்க்கலாம்.

புத்தகயாவில் உள்ள புத்தகோயிலில் ஆளே இல்லாத சமயத்தில் குண்டுகள் வெடித்து எந்த வித பொருளோ உயிரோ சேதமில்லாத உப்புசப்பற்ற செய்தியை நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்ப்படும் பிரச்சனையாக கருதும் மீடியாவும் அரசும் மாலேகான் குண்டுவெடிப்பை நீர்த்துப்போனதாக்கியது எவ்வளவு கேவலம். மாதம் கடந்தும் புத்தகயா குண்டுவெடிப்பு தலைப்புசெய்தி ஆனால் இரண்டே நாளில் கடைசி துணுக்காக கூட இல்லாமல் போனது ராமநாதபுரம் பள்ளி எரிப்பு சம்பவம்.பெரியார் ஏற்ப்படுத்திய திராவிட கொள்கையால் இவ்வளவு நாள் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் இன்று குஜாராத்தில் நடந்த சம்பவம் போல் எழிதாக நடக்கும் சூழல் உருவாகிஉள்ளது அது திராவிட கட்சிகளின் கொள்கை உறங்கிக்கொண்டுள்ளது என்பதை தெள்ளதெளிவாக காட்டுகிறது.

காங்கிரஸ் பல சவால்களை எதிர்கொண்டு இரு(ற)க்கும் சூழ்நிலையில் அடுத்து ஆட்சிக்கு வருவது சந்தகமே, மூன்றாம் அணி வழுப்பெற தவறினால் அயோக்கியன் மோடியின் கையில் ஆட்சியை கொடுக்கும் சூழல் வரும். அப்படி வரும்பட்சத்தில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாகிவிடும்.

ஆகையால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் நம் சமூகம் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. உங்களின் ஒற்றுமை தான் அதற்க்கு தேவைப்படும் ரத்தம். முஸ்லிம் என்ற ஒரே பேனரில் போராடுவோம் வேற்றுமையை ஒழித்து மறைமுக தீவிரவாதத்திற்கு சாவுமணி அடிப்போம்.

அன்புடன்
அன்வர் சதாத்
துபாய்.

Tuesday, February 19, 2013

காவிரிவாயக்கட்டி வயித்த கட்டி
விதை நெல்லுக்கு வட்டிக்கட்டி
சோறு தந்தவனுக்கு இன்று
கஞ்சித்தொட்டி.

ஆளும் கட்சி போராட்டம்
எதிர்க்கட்சி போராட்டம்
அனைத்துக்கட்சி போராட்டம்
எதுவும் கொண்டுவருவதில்லை
காவிரியில் நீரோட்டம்.

வாங்கிவைத்த
பூச்சி மருந்து வீணாகுதாம்
வரப்பில் நின்று
வயிறு நிறைய குடித்துவிட்டான்
உழவன்.

கையும் காலுமாவது மிச்சமாச்சு
அந்த காலம்
கடன் தொல்லைதான் கூடிபோச்சு
இந்த காலம்.

நமக்கென்று ஆறுகள் உண்டு
நாலா பக்கமும்
தண்ணீர்தான் வருவதில்லை
தாகம் தீர்க்க.

தடையில்லா மின்சாரம்தான்
தருகிறோமே எடியூரப்பா
காவிரியில் தண்ணீருக்கு
இன்னும் ஏன் நீ... இடையூரப்பா.

ஏற்கனவே தண்ணீர் இல்லை
மணலையும் எடுத்தப்பிறகு
என்ன பெயர் வைப்பது
ஆற்றுக்கு?.

கங்கையில் வேண்டுமானால்
பிணங்கள் விழுவது
புனிதமாக இருக்கலாம்
காவிரிக்காக
பிணங்கள் விழுவது
மனிதமா?

(கடந்த மாதம் துபையில் "நாம் தமிழர் அமைப்பு" நிகழ்த்திய கவியரங்கில் வாசித்த என் கவிதை)
புகைப்படம்: நன்றி திரு.சுரேசு அவர்கள்.

Wednesday, February 13, 2013

ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்...

ஒருநாள் பேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருத்ந்தபோது TNTJTTj வகையராக்கள் ரிஸானா நபீக் என்ற சிறுமிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதைக்குறித்து “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்(நிச்சயமாக நாம் அல்லாவுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக அவனிடமே திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்) என்ற வாசகத்தை முன்னிருத்தி குற்றம் செய்திருந்தாலும் இந்த தண்டனை மிக அதிகமானதே; ஒரு வேளை குற்றம் செய்யாது இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அப் பெண்ணிற்குசொர்க்கம் கிடைக்கும். அதற்கு பிரார்திப்போம் என்ற செய்திகள் உலாவந்தன. ஆனால் அவர்களது அவுலியா இந்த தண்டனையை வரவேற்றும் மனுஷ்யபுத்திரனனை கேவலமாக விமர்சித்தும் தமது இணையதளத்தில் கட்டுரையை எழுதியதும் சொந்த புத்தி எல்லாம் அவுலியாவுக்கு அடகு போய் தண்டனையை ஆதரித்தும் மனுஷ்யபுத்திரனனை கடுமையாக திட்டவும் தொடங்கிவிட்டனர். இந்த செய்திக் குறித்து விபரம் ஏதும் தெரியாத நிலையில் இருந்தபோது நக்கீரனில் வந்துள்ள மனுஷ்யபுத்திரனின் கட்டுரையை சுட்டிக்காட்டி தொலைபேசியில் ஒரு தோழர் விபரம் கூறினார். 

அதனைப் படித்த பிறகு மேலும் செய்திகளை அறிந்துகொள்ள இணைய இணைப்பில் அமர்ந்தேன். அப்பொழுது இசுலாமியர்கள் நிறைய உள்ள ஒரு பிரபலமான ஊரில் இருந்தேன். அந்த புரோஸிங் சென்டரும் ஒரு இசுலாமியருடையது. யுடியூப்பில் ரிஸானா நபீக் தலை வெட்டப்படும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது என் இதயம் கனக்க, வயிற்றுக்குள் ஒருவர் கையைவிட்டு பிசைவதுபோன்று திணறல் ஏற்பட்டது. அநாகரீக காலத்திலிருந்து இந்த இசுலாமியர்கள் மாறவே மாட்டார்களா என்ற கேள்விக்குறியுடன் என்னை இயல்பு நிலைக்கு திருப்ப சற்று எழுந்து நகர்ந்து நின்றேன்.


அருகில் அதனை பார்த்துக்கொண்டிருந்த தாடியும் மீசையும் மழித்து சிவந்த நிறத்திலிருந்த இசுலாமிய இளைஞர் ஒருவர் “இவனுக காட்டுப் பு.... மவனுக என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இன்னொரு இளைஞர் எதற்கு இந்த தண்டனை என்ற விபரம் அறியாது “இப்படி எல்லாம் தண்டனை கொடுத்தாலும் தப்பு பண்றவன் தப்பு பண்ணிக்கொண்டுதானே இருக்கான் என்றார். தண்டனை பற்றி சிறு விபரம் கூறியதும் மௌனமாகிவிட்டார். மற்றொரு இளைஞர் “என்னங்க ரொம்ப கொடுமையாக இருக்கிறது என்றார்.
      ஒரு 55 வயது முதியவர் ஒருவர் “சௌதியைப் பொருத்தவரை வேலை செய்யப்போகிறவர்கள் அனைவரையும் அடிமைகள் போல்தான் நடத்துகிறார்கள். நாம் என்ன சொன்னாலும் அங்கே எடுபடாது. சௌதி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள்மலேசியாவிலும் அப்படித்தான்;  மலேசிய முதலாளி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள். ஆனால் பங்களாதேசத்தவர்கள் கூறினால் எடுபடும் என்று கூறினார். இவர்களில் முதலாம் நபர் தவிர பிறருக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும் என்பதால் மேற்கொண்டு கருத்துக்கூறாமல் பேச்சு திசை திரும்பிவிட்டது.

      ரிஸானா நபீக் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் சௌதியிலுள்ள Naif Jiziyan kalaf Al- otaibi  என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். பாத்திரம் பண்டங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தையைப் பராமரிப்பது அவளுக்கு இடப்பட்ட வேலைகள். 2005 மே மாதம் 25 ஆம் நாள் அதாவது ஒருமாத்தில் தனது முதலாளியின் 4 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டார் என்று சிறையிலடைக்கப்பட்டார்.

      குழந்தையின் தாய் வெளிச்சென்றிருக்கும்போது குழந்தைக்கு ரிஸானா நபீக் புட்டிலிருந்து பால் புகட்டியுள்ளார். அப்படி பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது மூக்கு வழியாக பால் வந்ததாகவும், அதனை துடைத்துவிட்டும் தொண்டையை தடவி விட்டுவிட்டும் குழந்தையை தொட்டியில் படுக்கவைத்ததாகவும் ரிஸானா நபீக் கூறுகிறார். ஆனால் முதலாளியம்மாள், குழந்தையை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டதாக கூறி ரிஸானாவை தனது செருப்பால் கன்னங்களில் மாற்றி மாற்றி அடித்துள்ளார். அதனால் ரிஸானாவின் கன்னத்தில் காயங்களும் மூக்கில் இரத்தமும் வடிந்துள்ளது. அதே நிலையில் சௌதி போலீசில் புகார் செய்ய ரிஸானா நபீக் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திலும் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். போலீஸ் ரிஸானாவை மிரட்டி ‘கழுத்தை நெறித்து கொன்றதாக வாக்கு மூலம் பெற்று வழக்குத் தொடர்ந்தது.

      ஜூன் 16, 2007 அன்று தவாமி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அப்துல்லா அல் ரோஸ்மி, சரியத் சட்டப்படி ரிஸானாவுக்கு மரண தண்டனை வழங்கி மேல் முறையீடு செய்துகொள்ளவும் அனுமதி அளித்தார். முறையான மொழிபெயர்பு வசதியும், வழக்காட வழக்கறிஞர் வசதியும் ரிஸானா நபீக்குக்கு வழங்கப்படவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

      சர்வதேச தொழிலாளர் சங்கம் (ILO) ரிஸானா நபீக்காக சௌதி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. எப்படியும் தண்டனை உறுதி என்னும் நிலையை உணர்ந்த அவர்கள், குற்றம் சாட்டப்பட்டபோதுரிஸானாவின் உண்மையான வயது பதினேழுதான் என்பதை ரிஸானா நபீக்கின் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் ஆகியவற்றைக் ஆதாரமாகக்கொண்டு சர்வதேச குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். வேலை கிடைக்கவேண்டும் என்பதால் வயதை கூடுதலாகச் சொல்லி ஏஜென்ட் மூலம் கடவுட் சீட்டு பெற்றுள்ளதாகவும் வாதாடினர். உச்சநீதிமன்றமோ கடவுட்சீட்டிலுள்ள வயதையே ஏற்றுக்கொள்ளமுடியும் என்று அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது.

      சரியத் சட்டத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல. அது குழந்தையாக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் நிலை ஒன்றுதான். அதுபோக ஒரு பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்துவிட்டாலே அவள் முழு முதிற்சியடைந்த பெண்தான் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதுபோல ஒரு பையனுக்கு விந்து என்று ஒன்று வெளிவந்துவிட்டாலே அவன் முதிற்சியடைந்த ஆண் என்பதும் அவர்களின் நிலைப்பாடு. 

ரிஸானா நபீக் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில கேள்விகள்:

1. பிறந்து 4 மாதமேயான பச்சிளங்குழந்தையை ஒரு சிறுமியிடம் பராமரிக்க கொடுத்துவிட்டு தாய் வெளியில் சென்றது என்னவகை நியாயம் என்று தெரியவில்லை. அது முதல் தவறு. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த அம்மாவே பொறுப்பேற்க வேண்டும்.

2. வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் குழந்தையை கொல்லும் அளவுக்கு ஒரு சிறுமியின் மனதில் குரோதம் ஏற்பட எவ்வித காரணமும் இல்லை. தனியாக நாடுகடந்து நாடு சென்று வாழும் ஒரு ஏழைச் சிறுமிக்கு ஒரு குறுகிய காலத்தில் மனக்குரோதம் ஏற்படும் என்று சொல்வோமானல் அவரைப்போல ஒரு அறிவிலி எவரும் இல்லை. இம் மரணம் ஒரு விபத்தாகவே கருதவேண்டும். ஆனால் நீதிமன்றம் அதனை பரிசீலிக்கவே இல்லை.

3. ஒருவேளை அச்சிறுமி கொலை செய்திருந்தால் இயல்பாக குழந்தையை தொட்டியிலிட்டுவிட்டு மூக்கில் பால் வடிந்ததாகவெல்லாம் முதலாளியம்மாளிடம் கூறியிருக்க மாட்டாள். பயந்துபோய் என்ன நடக்குமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்திருக்கவேண்டும். அப்படி ஏதும் அறியாததுபோல் கூற வேண்டுமானால் கொலைசெய்து அனுபவப்பட்டிருக்க வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காக பெற்றோர்களைப் பிரிந்து வெளிநாடு சென்றுள்ள ஒரு சிறுமியிடம் கொலை செய்த அனுபவங்கள் உள்ளதுபோல் போலிசும் அநீதிமன்றமும் நடந்துகொண்டது மனித இனத்திற்கே ஒரு அவமானம்.

4. கழுத்தை நெறித்து குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி கழுத்தை நெறித்து கொலை செய்திருந்தால் குரல்வலை உடைந்திருக்கும். பிரேத பரிசோதனையில் உண்மை தெளிவாக தெரிந்திருக்கும். ஆனால் சௌதி போலீசும் அநீதிமன்றமும் இந்த நவீனக்காலத்திலும் பிரேதப் பரிசோதனை செய்து உண்மையை அறிய அக்கரை காட்டவில்லை. இது ரிஸானா நபீக்கு அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையே காட்டுகிறது.

5. கொலைக்கு சாட்சிகள் எதுவும் இல்லை. குழந்தையின் பெற்றோர்கள் தவிர பிற சாட்சிகள் கிடையாது. அப்படி இருக்கும்போது பிரேத பரிசோதனை செய்யாமல், ரிஸானா நபீக்கிற்காக வாதாட வழக்கறிஞர்களுக்கு அநீதி மன்றம் ஏற்பாடும் செய்யாமல் பெற்றோர்களின் குற்றச்சாட்டை மட்டுமே கொண்டு மரண தண்டனை வழங்கியது கொடுமையிலும் கொடுமை.

6. கொலைக்கான காரணம் எதுவும் எவரும் கூறவில்லை. கொலைக்கான காரணம் என்று ஒன்று இருந்தே தீரவேண்டும். அதன் தன்மையைப் பொறுத்தே தண்டனைகள் அமைய வேண்டும்.  எடுத்துக்காட்டாக் ஒருவர் தொடர்ந்து ஒருவரால் துன்பப் படுத்தப் படுவதால் கெலை செய்தார் என்று எடுத்துக்கொண்டால் கொலை செய்தவருக்கு மரணதண்டனை வழங்குவது நியாயமாகாது.

சூழ்நிலையும் மறுக்கப்பட்ட அறிவியல் ஆய்வும் குற்றமற்றவள் என்பதை உணர்த்தும்பொழுதுகுறைந்தபட்ச சிறு தண்டனையை (அதுவே தவறு என்ற போதிலும்) வழங்கப்பட்டிருக்க வேண்டும்அதுவே மனசாட்சியும் அறிவும் உடையவர்களின் செயலாகும். ஆனால் கொடுமையான தலையை வெட்டி எரியும்தண்டனை ஏன்?

ஒரு சௌதியின் நலனுக்காக சரியத் சட்ட முகமூடி அவர்களுக்கு முக்கியம்இப்படி தண்டனைகள்வழங்குவதன் மூலம் பிற  தொழிலாளர்களையும் மிரட்டிவைக்கலாம் அல்லவாகடுமையான தண்டனைகள் வழங்கினால்தான் குற்றம் செய்பவர்கள் பயப்படுவார்கள் என்று ஊளையிடுபவர்கள் இங்கே சற்று யோசியுங்கள்.

அக்குழந்தை 4,5 வயது சிறு குழந்தை என்றும்  அவ்வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அக்குழந்தையுடன் வீட்டு வேலைக்கார சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் தவறி அல்லது வேலைக்காரப் பெண் கால் தடுக்கி குழந்தை கீழே விழுந்து மண்டை உடைந்து இறந்துவிடுவதாக வைத்துக் கொள்ளவோம்அப்பொழுதும் குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்காரப் பெண் கொலை செய்துவிட்டாள் என்று குற்றம் சுமத்த முடியும்இங்கேயும் சாட்சிகள் இல்லைஅப்படியானால் குற்றம் சுமத்தப்பட்ட வேலைக்காரப் பெண் தான் செய்யவில்லை என்று சொல்லுவதை ஏற்று கொலைக்கான காரணச் சூழ்நிலைகள்பிரேதபரிசோதனைகள் செய்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தீர்ப்பு செய்யவேண்டுமா அல்லது பெற்றோர்கள்களின் குற்றச்சாட்டைக்கொண்டே தீர்ப்புச் சொல்வதாஒரு வேளை கொலையை நிருபிக்கவோ மறுக்கவோ முடியாத நிலை ஏற்படுமானால் குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்வதே நியாயம்இங்கே குற்றம்சாட்டப்பட்ட வேலைக்காரப் பெண்ணின் வாக்கு மூலத்தை சௌதியின் அடியாள் பிஜே சொல்வதுபோல் ஏற்றகக் கூடாது என்றால் அது நீதியாமனசாட்சியற்ற மதவெறியா?
ரிசானாவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான சரியத் சட்டம் பின்வருமாறு:

குரான் 2: 178 இறைநம்பிக்கையாளர்களேகொலை செய்யப்பட்டவர்கள் விஷயத்தில் பழிவாங்குதல் உங்கள்மீது விதியாக்கப்பட்டுள்ளதுசுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவனும்அடிமைக்குப் பதிலாக அடிமையும்பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் (பழிவாங்கப்படும்எனினும்(கொலைசெய்யப்பட்டஅவனுடைய சகோதர ர் மூலம் (கொலை செய்தஇவனுக்கு ஏதேனும் மன்னிப்பளிக்கப்பட்டால் அப்போது (கொலையாளிநல்ல வழக்கமுறையைப் பின்பற்றி (அதற்கான ஈட்டுத்தொகை முதியவற்றைநன்றியறிதலுடன் (கொலை செய்யப்பட்ட)  அவ(னுடைய பாத்தியஸதரி)ன் பால் நிறைவேற்றுதல் வேண்டும்இது உங்களுடைய இறைவனிடமிருந்து (உங்களுக்கு கிடைத்து)ள்ள சலுகையும் கிருபையைமாகும்ஆகவே இதற்குப் பிறகு எவரேனும் வரம்புமீறினால் அப்பொழுது அவருக்கு நோவினை அளிக்கும் வேதனை உண்டு.

குரான் 2:179 நல்லறிவாளர்களேகொலைக்குப் பழிதீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டுநீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம்.

குரான் 5:45 மேலும் அ(வ்வேதத்)தில் நிச்சயமாக உயிருக்குப் பகரமாக உயிரையும்கண்ணுக்குப் பகரமாக கண்ணையும்மூக்குக்குப் பகரமாக மூக்கையும்காதுக்குப் பகரமாக காதையும்பல்லுக்குப்பகரமாக பல்லையும் (பழிக்கப் பழிவாங்க வேண்டுமென்றும்காயங்களுக்குப் பழிக்குப்பழி உண்டு என்றும் அவர்கள் மீது நாம் விதித்திருந்தோம்எனினும் எவரேனும் இதனை தர்ம மாக விட்டுவிட்டால் அது அவரு(டைய பாவத்துக்குபகரமாகிவிடுர்எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் அவர்கள்தாம் அநியாயக்கார ர்கள்.
(குர்ஆன் வசனங்களுக்கிடையில் வரும் அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களையும் தொடரந்தார்போல் சேர்த்தே படியுங்கள்.)

            இச்சட்டம் ஒரு ஆடவனை நோக்கி கூறுகிறதுசுதந்திரமான உன்னை ஒருவன் கொன்றுவிட்டால் கொலைகாரனை உன் உறவினர்கள் கொலை செய்யலாம்உன்னுடைய அடிமையை ஒருவன்(சுதந்திரமானவன்கொலை செய்துவிட்டால் அவனுடைய அடிமையை நீ கொலை செய்துக் கொள்ளலாம்.உன் (சுதந்திரமானவன்வீட்டுப் பெண்ணை ஒருவன் கொலை செய்துவிட்டால் கொலை செய்தவனுடைய வீட்டுப் பெண்ணை நீ கொலை செய்யலாம் என்று கூறுகிறதுபாதிக்கப்பட்டவன் (சுதந்திரமானவன்)விரும்பினால் இழப்பீடுகள் (இரத்தப பணம்பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னிக்கலாம்.மன்னிக்க விருப்பம் இல்லை என்றால் பழிக்குப்பழியே விதியாகிவிடும்.

            சுதந்திரமானவாக உள்ள ஒருவன் அதாவது அடிமையாக இல்லாத எஜமான் இன்னொரு சுதந்திரமானவனின் சொத்துக்களான அவன் வீட்டுப்பெண்களையோ அல்லது அடிமைகளையோ கொன்றுவிடுவதனால் ஏற்படும் இழப்பிற்குஇழப்பை ஏற்படுத்தியவனின் வீட்டுப் பெண்களையோ அடிமைகளையோ இழந்தவன் கொலை செய்து இழப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது மட்டுமே இச்சட்டத்தின் குறிக்கோள். கொலை செய்தவனை கொல் என்று இச்சட்டம் கூறவில்லை
மனித உயிர்களின் மதிப்பை வெளிப்படுத்துவதான மனிதாபிமானச் சட்டம் அல்ல இதுஅதனாலேயே இழப்பை இரத்தப்பணம் என்கிறதுபெண்கள்கூட ஒரு சொத்து என்பதையும் கூடுதலாக இச்சட்டம் நமக்கு புரியவைக்கிறது.

            இச்சட்டம் சரிதானா என்று சிந்தித்துப்பாருங்கள்கொலை செய்தவன் ஒரு சுதந்திரமானவனாக அதாவது இன்றையக் காலத்தில் முதலாளியாக இருந்தால் அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த ஒருவரை கொலை செய்தால் அவன் வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச் சொல்லுகிறதுஎஜமானர்களுக்கு சேவை செய்யும் சட்டம்இது ஒரு சீரிய சட்டம் என்றும்,காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்.

            கூடுதலாக குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்களில் அதி சிறந்தவர் என்று போற்றப்படும் இப்னு கஸிர் என்பவரின் விளக்கத்தையும் படித்துக்கொள்ளுங்கள்.

The Command and the Wisdom behind the Law of Equality
Allah says;
O you who believe! Al-Qisas (the Law of equality) is prescribed for you in case of murder: the free for the
free, the slave for the slave, and the female for the female. Allah states: O believers! The Law of equality has been ordained on you (for cases of murder), the free for the free, the slave for the slave and the female for the female. Therefore, do not transgress the set limits, as others before you transgressed them, and thus changed what Allah has ordained for them.
The reason behind this statement is that (the Jewish tribe of) Banu An-Nadir invaded Qurayzah (another Jewish tribe) during the time of Jahiliyyah (before Islam) and defeated them. Hence, (they made it a law that) when a person from Nadir kills a person from Quraizah, he is not killed in retaliation, but only pays a hundred Wasq of dates. However, when a person from Quraizah kills a Nadir man, he would be killed for him. If Nadir wanted (to forfeit the execution of the murderer and instead require him) to pay a ransom, the Quraizah man pays two hundred Wasq of dates (double the amount Nadir pays in Diyah (blood money)). So Allah commanded that justice be observed regarding the penal code, and that the path of the misguided and mischievous persons be avoided, who in disbelief and transgression, defy and alter what Allah has commanded them. Allah said:
Al-Qisas (the Law of equality in punishment) is prescribed for you in case of murder: the free for the free, the slave for the slave, and the female for the female. Allah's statement:  (the free for the free, the slave for the slave, and the female for the female) was abrogated by the statement life for life (5:45).
However, the majority of scholars agree that the Muslim is not killed for a disbeliever whom he kills. Al-Bukhari reported that Ali narrated that Allah's
Messenger said:
The Muslim is not killed for the disbeliever (whom he kills). No opinion that opposes this ruling could stand correct, nor is there an authentic Hadith to contradict it. However, Abu Hanifah thought that the Muslim could be killed for a disbeliever, following the general meaning of the Ayah (5:45) in Surah Al-Ma'idah.
The Four Imams (Abu Hanifah, Malik, Shafii and Ahmad) and the majority of scholars stated that; the group is killed for one person whom they murder. Umar said, about a boy who was killed by seven men, "If all the residents of San`a' (capital of Yemen today) collaborated on killing him, I would kill them all.'' No opposing opinion was known by the Companions during that time which constitutes a near Ijma (consensus).
There is an opinion attributed to Imam Ahmad that;
a group of people is not killed for one person whom they kill, and that only one person is killed for one person. Ibn Al-Mundhir also attributed this opinion to Mu`adh, Ibn Az-Zubayr, Abdul-Malik bin Marwan, Az-Zuhri, Ibn Sirin and Habib bin Abu Thabit.
Allah's statement:
But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money), then it should be sought in a good manner, and paid to him respectfully. refers to accepting blood money (by the relatives of the victim in return for pardoning the killer) in cases of intentional murder. This opinion is attributed to Abu Al-Aliyah, Abu Sha`tha', Mujahid, Sa`id bin Jubayr, Ata Al- Hasan, Qatadah and Muqatil bin Hayyan. Ad-Dahhak said that Ibn Abbas said: (But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money), means, "the killer is pardoned by his brother (i.e., the relative of the victim) and accepting the Diyah after capital punishment becomes due (against the killer), this is the `Afw (pardon mentioned in the Ayah).''
Allah's statement:
...then it should be sought in a good manner, means, when the relative agrees to take the blood money, he should collect his rightful dues with kindness: and paid to him respectfully. means, the killer should accept the terms of settlement without causing further harm or resisting the payment.
Allah's statement:
This is an alleviation and a mercy from your Lord. means the legislation that allows you to accept the blood money for intentional murder is an alleviation and a mercy from your Lord. It lightens what was required from those who were before you, either applying capital punishment or forgiving. Sa`id bin Mansur reported that Ibn Abbas said, "The Children of Israel were required to apply the Law of equality in murder cases and were not allowed to offer pardons (in return for blood money).
Allah said to this Ummah (the Muslim nation):
The Law of equality in punishment is prescribed for you in case of murder: the free for the free, the servant for the servant, and the female for the female. But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money). Hence, `pardoning' or `forgiving' means accepting blood money in intentional murder cases.'' Ibn Hibban also recorded this in his Sahih.
Qatadah said:  (This is an alleviation from your Lord), Allah had mercy on this Ummah by giving them the Diyah which was not allowed for any nation before it. The People of the Torah (Jews) were allowed to either apply the penal code (for murder, i.e., execution) or to pardon the killer, but they were not allowed to take blood money.
The People of the Injil (the Gospel – the Christians) were required to pardon (the killer, but no Diyah was legislated).
This Ummah (Muslims) is allowed to apply the penal code (execution) or to pardon and accept the blood money.'' Similar was reported from Sa`id bin Jubayr, Muqatil bin Hayyan and Ar-Rabi bin Anas.
Allah's statement:
So after this whoever transgresses the limits, he shall have a painful torment. means, those who kill in retaliation after taking the Diyah or accepting it, they will suffer a painful and severe torment from Allah. The same was reported from Ibn Abbas, Mujahid, Ata Ikrimah, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas, As-Suddi and Muqatil bin Hayyan. The Benefits and Wisdom of the Law of Equality
Allah's statement:
And there is life for you in Al-Qisas, legislating the Law of equality, i.e., killing the murderer, carries great benefits for you. This way, the sanctity of life will be preserved because the killer will refrain from killing, as he will be certain that if he kills, he would be killed. Hence life will be preserved.
In previous Books, there is a statement that killing stops further killing! This meaning came in much clearer and eloquent terms in the Qur'an: (And there is (a saving of) life for you in Al-Qisas (the Law of equality in punishment).
Abu Al-Aliyah said,
"Allah made the Law of equality a `life'. Hence, how many a man who thought about killing, but
this Law prevented him from killing for fear that he will be killed in turn.'' Similar statements were reported from Mujahid, Sa`id bin Jubayr, Abu Malik, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas and Muqatil bin Hayyan.
Allah's statement:
O men of understanding, that you may acquire Taqwa. means, `O you who have sound minds, comprehension and understanding! Perhaps by this you will be compelled to refrain from transgressing the prohibitions of Allah and what He considers sinful.' Taqwa (mentioned in the Ayah) is a word that means doing all acts of obedience and refraining from all prohibitions.

      ஒரு முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்யப்பட்டால் அதற்காக ஒரு முஸ்லீமைக் கொல்லக்கூடாதுஎன்று இசுலாமிய பெருமக்கள் கருதுவதாகவும் இப்னு கஸிர் கூறுவதையும் கவனியுங்கள்.
இச்சட்டப்படி...

1. சாட்சிகள் தேவையில்லை.

2. கொலைக்கான காரணம் தேவையில்லை. சாட்சியும்காரணமும் தேவை என்று குர்ஆன் எங்கும் கூறவில்லைமுதலாளி முறையிட்டாலே போதும்.

3. இச்சட்டத்திற்கு வயது வேறுபாடு கிடையாது.
            முகம்மதின் காலத்திற்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹமுராபி காலத்துச் சட்டம் இந்த பழிக்குப்பழி என்றச் சட்டம்யூதர்களும் இதனையே தங்களின் சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.இந்தச் சட்டம் ஒரு எஜமானனின் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளதுஇச்சட்டப்படி ரிசானா நபீக் தண்டிக்கப்பட்டுள்ளார்கொலைக்கான காரணம்சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆராயப்படவில்லைசாட்சிகள் இல்லைசாட்சிகள் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வுகள்தடவியல் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவில்லைஎஜமானியம்மாளின் முறையீடை மட்டுமே எடுத்துக்கொண்டு சரியத் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கிறோம் என்று தலையை சீவித்தள்ள உத்திரவிட்ட இந்த நீதிபதிகள் நீதிபதிகளா?மதவெறியர்களா?


சமீபத்தில் நடந்த இன்னொரு நிகழ்வை எடுத்துக்கொள்வோம். முஸ்லீம் நாடான ரியாத்திலுள்ள ஃபையான் காம்தி என்ற மதகுரு தனது பெண் குழந்தை "லாமியா காம்தியைகற்பழித்து கொலை செய்துள்ளான். மருத்துவ அறிக்கை அந்த பெண்னின் எல்லா உறுப்புகளிலும்சித்திரவதை நிகழ்த்த பட்டுள்ளதும் அவளின்முதுகெலும்பு உடைக்கபட்டதாகவும், மலவாயும் சிதைக்கப்பட்டு தீயினால் சுடப்பட்டுள்ளதாகவும்சொல்கிறது.

கற்பழிப்புகளிலிருந்து உலகப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் புர்கா அணியவேண்டும் என்று கூப்பாடுபோடும் மதவெறியர்களே. பெற்ற தந்தையே தன் குழந்தையை கற்பழிக்கும்போது புர்கா எவ்வாறு தடுக்கும்? அந்த குழத்தைக்கும் புர்கா போடவேண்டுமோ? அல்லது தந்தைக்கு முன்பாகவும் ஒரு மகளும் வரக்கூடாது என்று சட்டம் போடனுமோ? இசுலாமிய அறிவிலிகளே யோசிங்கள். இந்த காமக்கொடூரனுக்கு சரியத் சட்டப்படி இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை அளித்துள்ளது அநீதிமன்றம். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லி நியாப்படுத்துகறார்கள். அதாவது இந்தக் கொலைக்கு காரணம் ஏதும் இல்லையாம். ரிசானாவுக்கு “காரணம்” ஆராயப்பட மறுத்தவர்கள் முல்லாவுக்கு “காரணம் இல்லை” என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

1. சரியத்சட்டப்படி குழந்தைகள் தந்தைக்கு உடமையானவர்கள். அப்படியானால் இரத்தப்பணம் கற்பழித்த அந்த காமுகனுக்குத்தான் அதாவது தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் குழந்தையின் அம்மாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சரியத்து எங்கே போனது?

2. இந்த காமக்கொடூரனுக்கு இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதேன்? குழந்தையின் அம்மா மன்னித்ததால் இரத்தப்பணம் கொடுக்கப்பட்டது என்று அறிவுகெட்டத்தனமாக உளரவேண்டாம். காரணம் குழந்தைக்கு பாத்தியப்பட்டவன் அந்த தகப்பனே. அது மட்டுமில்லாது தனது கணவன் என்ற நிலையில் அந்த அம்மா அவனுக்கு மன்னிப்பு வழங்குவது இயல்பானது. இதை அனுமதித்தால் இரத்தப்பணம் கொடுக்கக் கூடிய பணக்காரன் எவனும் தனது மகள்களை கற்பழிக்கலாம் என்பதை சரியத் சட்டம் கூறுகிறது என்று பொருளாகும். சௌதிகாரனுக்கென்றால் சரியத் பல்டி அடிக்குமோ?

      கடுமையாக தண்டித்தால்தான் குற்றங்கள் நடக்காது என்று ரிசானாவின் படுகொலைக்குகூக்குரலிட்ட பிஜே வகையரா மதவெறியர்களே, இதற்கு மௌனம் காப்பது ஏன்?

            ஆனால் பல நாடுகளும்நாட்டின் மக்களும்மனித உரிமை அமைப்புகளும்தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் போன்ற சில காட்டுமிராண்டி அமைப்புகள் தவிர பிற இசுலாமியர்களும் வருடங்களாக போராடியும்,வேண்டிக்கொண்டபோதும் மயிரளவுக்குக்கூட செவி சாய்க்காமல் ரிசானாவின்  தலை சீவப்பட்டுவிட்டது.சௌதி சிறைச்சாலைகளில் இன்னும் 'புத்தர் சிலையை வைத்திருந்தார்பைபிள் வைத்திருந்தார்மந்திரம்ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு கட்டியிருந்தார்என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரதண்டனை வழங்கப்பட்டு தலைசீவப்பட  காத்திருக்கிறார்களர்சௌதிதுபாய் போன்ற நாடுகளில் தொழிலாளர்களாகசென்றுள்ளவர்கள் தங்கள் தங்குமிடங்களில் தங்கள் தெய்வங்களை வணங்குவதைக்க தடுக்கும் அரசின் நடவடிக்கை குறித்து "அங்கேயும் போய் அநாச்சாரங்களை புகுத்த நினைத்தால் அரசாங்கம் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கையா பார்க்கும்என்று இசுலாமியர்கள் தங்கள் மதவெறியைக் கக்குகின்றனர்.ஆனால் பிற நாடுகளில் தங்களுக்கு மதவழிபாட்டு உரிமை வேண்டும் என்று கேட்கின்றனர்ஜனநாயகம் பேசுகின்றனர்.

            ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினத்தன்று சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.மக்கதூம் ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் சிலவரிகள் பின்வருமாறு:

            'இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும் உண்டா என்று கேட்டேன்அதற்கு அவர் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வதுஎன்று கேட்டார்என்றும், "என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் நானா"என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டதுஎன்றும் எழுதியுள்ளார்இந்த இரண்டு வரிகளை என்னால் தட்டச்சு செய்ய முடியாமல் பல மணிநேரம் கழிந்தது

                        போதுமான மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள் ஏற்படுத்தித் தராததால்கடைசி நிமிடங்கள் வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால் மன்னிப்பு கிடைத்துவிடும் என்று அல்லாவின் கருணைமீது நம்பிக்கையுடன் வருட காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச் சிறுமி.ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்களஇந்த 7 வருட சிறைதண்டனையே இதற்கு அதிகம்ஆனால் மரணதண்டனை…….

            எனது காதில் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வதுஎன்ற ரிசானா நபீக்கின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதாகேட்டால் இந்த காட்டுமிராண்டிகால சரியத் சட்டத்தையும், மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக வாழுங்கள்.
ஒன்றை மறந்துவிடாதீர்கள்ரிசானா நபீக்கின் சீவப்பட்ட தலை புதைக்கப்படவில்லைவிதைக்கப்பட்டுள்ளது.ஒருநாள் அரபு தேசங்களின் தொழிலாளர்கள் இதற்கு பழிவாங்குவார்கள்.