Showing posts with label வாழ்த்துகள். Show all posts
Showing posts with label வாழ்த்துகள். Show all posts

Friday, December 06, 2013

"புரட்சி நெருப்பு" தொல்.திருமாவளவன் வரலாற்று குறும்படம்

தலித்களின் வரலாறுகளும், அவர்தம் விடுதலை குறித்த பதிவுகளும் 'கவனமாக' புறந்தள்ளபடுவதும், புறக்கணிக்கப்படுவதும் இயற்கையாக நிகழும் ஒன்றே. இத்தகைய சூழலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரான நமது வரலாற்று பதிவுகளை நாமே இயற்கையேடுகளில் பதிவு செய்துவைப்பது காலத்தின் கட்டாயாமோ இல்லையோ, அது நம் அனைவரின் கடமையாகவும் உணர்ந்துள்ளோம்.

இக்கடமையாக்களின் தொடர்ச்சியாக எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் வாழ்க்கை குறிப்பு வரலாறுகளை தொகுத்து அழகிய கிராமிய நடனத்தின் பின்னணியில் வடிவமைத்து "புரட்சி நெருப்பு" என்கிற குறும்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் செ.பி.முகிலன்.

தலைவர்.திருமாவளவனின் பிறப்புமுதல் இன்றைய அரசியல் நகர்வுகள் வரை அத்தனை நிகழ்வுகளையும் அடுக்கி அடுக்கி தொகுத்திருப்பது அருமை. நம்மில் அறிந்தவரும் அறியாதவரும் திருமா குறித்து சுருக்கமாகவும் ஆழமாகவும் அறிந்துக்கொள்ளும் வகையில் இக்குறும்படம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இச்சீறிய பணியை திறம்பட செய்த இயக்குனர் செ.பி.முகிலன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும் அவர்தம் பணிகளை ஊக்குவிப்பதற்காகவும் இன்று (06.12.2013) அஜ்மான் அமீரகத்தில் நிகழ்த்தப்பட்ட அண்ணல்.அம்பேத்கர் நினைவு தினத்தில் அமீரகம் வாழ் அன்பர்கள் அறிந்துக்கொள்ளும்வகையில் திரையிட்டு மகிழ்ந்தோம் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

இக்குறும்படத்தினை இயக்கியவருக்கும், தயாரித்தவர்களுக்கும் மற்றும் இக்குறும்படம் வெளிவர உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் அமீரக தாய்மண் வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்துகளையும் வரவேற்புகளையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

அன்பர்கள் இக்குறும்படத்தினை காண இங்கே சொடுக்கவும்:
https://www.youtube.com/watch?v=hcXHR_ENQec&feature=share

https://www.youtube.com/watch?v=hcXHR_ENQec&feature=share

Friday, June 20, 2008

விடுதலை பிறந்தது

கோடியில் புரலும் அரசியல், ஆன்மீக நயவஞ்சகர்களுக்கு
மத்தியில் கோடிக்கணக்கான எம் மக்களின் ஒற்றைக்குரல்
அண்ணன் தொல்.திருமாவளவன்.

தொன்மத் தமிழின் தூய்மை அரசியல் வாழ்வில் இருபத்தைந்தாவது ஆண்டுகளை கடந்து எம் தமிழுக்காக, எம் தமிழினத்திற்க்காக, எம் மண்ணுக்காக, எம் உரிமைக்காக போராடிவரும் சூழலில் நாமும் அவருடன் கைக்கோர்த்து பார்ப்பனிய இந்துத்துவாவிற்கு எதிராகவும், இந்திய அரசியல், மதசார்பின்மை என்கிற அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் களமிறங்கி போராட கடமைப்பட்டிருக்கிறோம் என்பதனை நினைவுக்கூர்ந்து.அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்தி எம் இனத்தின் ஒட்டு மொத்த வாழ்த்தாக இப்பாடலையும் சமர்ப்பிக்கிறேன்.
--------------------------------------------------------
விடுதலை பிறந்ததடா

செம்மொழியாய் இனித்திடவும்
சிதைப்போரை அழித்திடவும்
எம் மொழியும் கானாத
எழுச்சிதனை
அடைந்திடவும்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

சிந்தைனையின் ஒளியாகி
சிறுத்தைகளின் தாயாகி
வஞ்சனைகள் செய்வோரை
வகுத்தெடுக்கும்
வாளாக

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

அடிமையல்ல நாங்கள் யார்க்கும்
என்றும் ஆளுகின்ற வர்க்கமென
களம் அமைத்து போராடி
நிறம் அழித்து நிமிர்ந்து நிற்க

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

காவிரிகள் காய்ந்து கிடக்க
கர்நாடகம் தர மறுக்க
வற்றாத வான்மழையாய்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

புனித புத்தன் தொடரினிலே
புரட்சி சிறுத்தை அம்பேத்கர்
பெரியாரின் பெரும் நிழலாய்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

வருமா வருமா விடுதலையென்று
வாய் பிளந்து நிற்கையிலே
‘’திருமா’’ உருவில் திரும்பவந்து

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா