
களப்பணியில்
சாகவேண்டுமென்
சகலமும்
தூசுகளுக்கல்ல
துவக்கிற்கஞ்சாதவை
எமது கவிகள்
பூஞ்சையடைந்ததல்ல
எம்
புனர்சென்மம்
வன்மம்
வாங்கி வாங்கி
இருத்தலில்
கிடையாதெங்கள்
வலி
மறுத்தபொழுதினும்
மாசற்ற வீரம்
எமதுவீரம்
எமக்கு
மறுபிறவியென்பதே
மண்ணறையில்
தொடங்கும்
பெருத்த விலையில்
பொருமி
விடியுமெங்கள்
காலம்.
(வார்ப்பு மின்னிதழில் வெளியிடப்பட்ட முதல் கவிதை)
No comments:
Post a Comment