Wednesday, April 07, 2010

முதல் தமிழ்நூல் 1554 இல் லிசுபனில் அச்சாகியது.

http://www.viruba.com/tamilwritings/00011.aspx
விருபா பக்கத்தைப் பார்க்கவும்

முதல் தமிழ்நூல் 1554 இல் லிசுபனில் அச்சாகியது. இந்தியாவில் முதல் அச்சுக்கூடம் 1556இல். 1577-9 ஆண்டுகளில் பலநிகழ்வுகள். மேலுள்ள பக்கத்தில் இருந்து ஒரு பத்தி மேற்கோள் [விருபா வலையில் சுட்டியுள்ள சான்றுகோள் செய்தி: Tamil Culture தொகுதி vii ( 1958 ஜூலை ) இதழில் வெளிவந்த கட்டுரை. மொழி பெயர்ப்பு ; தே.சிவகணேஷ் - ஆய்வாளர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்]:

தமிழ்நாட்டில் அச்சு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது. 1584இல் தான் சீனாவில் முதல் அச்சாக்கம் ஐரோப்பியர்களால் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் 1590இலும் பிலிப்பைன்ஸில் 1593லும் முதல் அச்சாக்கம் நடைபெற்றது. 1584இல் பெரு நாட்டில் லிமா என்ற இடத்தில் ஸ்பானிஷ் (Spanish) குய்ச்வா (Quichua) மற்றும் அய்மாரா (Aymara) மொழியில் அச்சிடப்பட்ட ‘Doctrina’ என்ற நூல்தான் உலகின் வெளிச்சத்திற்கு வந்த முதல் அச்சு நூலாகும். இருப்பினும் ஆடெக் (Aztec) மற்றும் ஸ்பானிஷ் (Spanish) மொழியில் வெளியான ‘Doctrina’வின் எந்தப் பிரதியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்படவில்லை. இப்பிரதி மெக்சிகோ (Mexico) நகரத்தில் 1539இல் அச்சடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆப்பிரிக்க மொழிகளில் கங்கோலியர்களுக்காக (Congolese) அவர்களின் மொழியில் 1624இல் தான் முதல் அச்சாக்கம் செய்யப்பட்டது. இதில் 1554ஆம் ஆண்டு லிஸ்பனில் அச்சிடப்பட்ட தமிழ் சிறுவெளியீடான ‘Cartilha’வில் உள்ள வரிகளே இடம்பெற்றிருக்கிறது. ரஷ்யா தனது முதல் நூலை 1563இல் அச்சிட்டது. கான்ஸ்டாண்டினோபிள் (Constantinople) தன் முதல் அச்சுக்கூடத்தை 1727இலும் கிரீஸ் (Greece) 1821இலும் நிறுவியது. இவ்வாறாக 16ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் மேற்கத்திய நாடுகளில் அச்சிடப்பட்ட மாதிரிகளினும் முதன்மையாகக் கருதப்படுகிறது. இச்செயல்பாடு ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்டிருப்பதன் விளைவே அவர்களை உடனடியாக நம் அருகாமைக்கு கொண்டுவந்துள்ளது.(7)
(7). See references to early printing in the works quoted above of Americo Cortez Pinto, Da famosa Arte, and Georg Schurhammer and G.W. Cottrell, The first printing in Indic Characters, O.C., cf. S.H. Steinberg, Five hundred years of printing, Penguins ltd., Harmondsworth, Middlesex (England), 1955. The Welsh Bible was printed in 1588 and the first book in Irish was published in 1571.
---------
21 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் விழிப்புணர்வு எய்தி
முன்னணி மொழியாளர்களில் ஓரினமாக
ஆவோமா?
நாம் நினைத்து முனைந்தால் கட்டாயம் முடியும்.

nantri
அன்புடன்
செல்வா (thamilualagam groups)

No comments:

Post a Comment