Friday, July 16, 2010

தொல்.திருமாவளவன் தந்தைக்கு வீரவணக்கம்

எங்கள் அன்புக்குறிய அண்ணனும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை ச.இராமசாமி என்கிற தொல்காப்பியன் அவர்கள் நேற்று(15.07.2010) இரவு சுமார் 8.00 மணியளவில் சென்னை, மருத்துவமனையில் கடந்த 6மாத காலமாக நரம்புச் தளர்ச்சி நோயால் (பார்க்கின்சன்) பாதிக்க்கப்பாடு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 5 ஆம் தேதியிலிருந்து திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிரச்சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் திடீரென உருவான நிமோனியா தொற்றினால் நுரையீரல் செயலிழந்து செயற்கை சுவாச சிகிச்சையும் பலனின்றி நேற்று இரவு இயற்கை ஏய்தினார்.

அவரது திருவுடல் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக எண்.ஆர்.62, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, இரண்டாம் நிழற்சாலை, வேளச்சேரியில் உள்ள ”தாய்மண் அறக்கட்டளை” அலுவலகத்தில் இன்று (16.07.2010) நண்பகல் வரை வைக்கப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மாலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

உலகத்தமிழர்கள் சார்பில் தலைவரின் தந்தைக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.

இவண்:
அமீரக தமிழ்மண் வாசகர் வட்டம்
துபாய்.

1 comment:

  1. அன்னாரின் ஆன்மா அமைதியடையவும், தோழர் திருமா மனதைரியம் அடையவும் என் பிரார்தனைகள்:-((

    ReplyDelete