Tuesday, July 20, 2010

புதுச்சேரியில் குடி அரசு நூல் அறிமுக விழா



தோழர்களே, வணக்கம்.

தமிழர்களின் போதுச்சொத்தாகிய தந்தைப் பெரியாரின் குடியரசு நூல்களை வெளியிடத் தடைகோரிய கி.வீரமணியின் செலவிலேயே பெரியாரின் பேச்சும் எழுத்தும் மக்களின் சொத்து என உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிய பெரியார் திராவிடர் கழகம், தான் சிரமப்பட்டு தொகுத்த பெரியாரின் "குடி அரசு" நூல் தொகுப்புகள் இருபத்தேழு தொகுதிகளும், வ.கீதா மற்றும் எஸ்.வி. ராஜதுரை தொகுத்த பெரியாரின் "ரிவோல்ட்" எனும் ஆங்கில நூல் தொகுப்பு ஒன்றும் தமிழகமெங்கும் வெளியிடப்பட்டும் அறிமுகப்படுத்தப்பட்டும் வரப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் பெரியார் திராவிடர் கழகம் வருகின்ற முப்பத்தொன்றாம் தேதி புதுச்சேரி பெரியார் திடலில் (சிங்காரவேலர் சிலை அருகில்) மாலை ஆறு மணியளவில் குடி அரசு நூல் தொகுப்பு அறிமுக விழாவை ஏற்பாடு செய்துள்ளது. (இணைப்பிலுள்ள அழைப்பிதழைக் காணவும்)

இன உணர்வுள்ள, பகுத்தறிவுவாதிகள் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட விரும்புபவர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

சிறப்புரை வழங்குவோர்:
தோழர் கோவை ராமகிருட்டிணன்.
(பொதுச் செயலாளர், பெரியார் திக)
தோழர் நாஞ்சில் சம்பத்.
(கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக)

அனைவரும் வாரீர்.

தோழமையுடன்,
சே.ராமகிருஷ்ணன்
புதுவை.

No comments:

Post a Comment