Friday, August 13, 2010

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா

நிகழ்ச்சி நாள்: 18.09.2010 , சனிக்கிழமை
நேரம் :மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை
இடம் : அண்ணாமலை முத்தையா செட்டியார் அரங்கம் சென்னை

அழிந்து வரும் பறையர்களின் வரலாறு ,கலை,கலாச்சாரம்,பண்பாடு மற்றும் நாகரீகத்தினை மீட்டெடுக்கும் பணியில் தமிழ்நாடு பறையர் பேரவை கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெருகி வரும் ஊடகங்களினால் பறையர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் பாட்டுச் சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

பறையர் வரலாறு மற்றும் அறிவு சார்ந்த செய்திகளை மாநாடு மற்றும் பொதுகூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிப்பதை காட்டிலும் கலை வடிவில் தெரிவித்தால் வெகுஜன மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு பறையர் பேரவை "கலைகளையும் போர் கருவிகளாக்குவோம்" என்ற கருத்தியலோடு தமிழகமெங்கும் கலைப் பிரச்சாரம் செய்து வருகின்றது .

இதன் தொடர்ச்சியாக.......

உலகப் பறையர்களின் விடிவெள்ளி மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் பறையர் அவர்களின் 150 வது பிறந்தநாளை 07 /07 /2010 ) கொண்டாடும் வகையில் சென்னையில் மாபெரும்பறையர் கலைத் திருவிழா நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்
பறையர்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தல் மற்றும் அதுத் தொடர்பாக விவாதங்கள்
பறையாட்டம்......
ஒயிலாட்டம்....
மற்றும இதர கலைகளும்…….

குறிப்பு: ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் மற்றும் கலைக்குழுக்கள் தங்களது படைப்புகளை ஒருங்கினைப்பளர்களுக்கு முன்கூட்டியே கீழ்க்கண்ட முகவரியில் தெரிவிக்கவும்

தொடர்புக்கு
அய்யா சி.சாமுவேல்பறையர்
தலைவர் மற்றும் நிறுவனர்
தமிழ்நாடு பறையர் பேரவை
பேச :9283182969/9488380143/9944589548
samparayar@gmail.com/ Samyparai007@gmail.com
www.paraiyar.webs.com

7 comments:

  1. ellaa vagaigalilum nigalvu sirakka vaazhthukkal.
    - ungal:
    chola.nagarajan

    ReplyDelete
  2. If you write more on this function it will be nice and informative. - vimalavidya@gmail.com

    ReplyDelete
  3. Anonymous9:24 AM

    முதல்லே பறையர்னாக்கா யாருங்க? அவங்க எங்கெல்லாம் இருக்காங்க ?

    ReplyDelete
  4. new message to me.
    nigazvu sirakka vaazthukkal

    anbudan,

    puthiyamaadhavi

    ReplyDelete
  5. I expect a great revolutions for my our Community.

    ReplyDelete
  6. We are Plan to Developing our Next Generation.... Please Contact With All PARAIYAR Society People.... We are Role Model model of The World...

    ReplyDelete