Friday, March 10, 2006

என் புதிய அய்க்கூ நூல்

பதிப்புரை

ஜப்பான் வடிவத்தின் இறக்குமதி எனப் பேசப்பட்டாலும், எவரும் எதிர்பாராத வேகத்தில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன அய்க்கூ நூல்கள்.

அற்புதமான கிராமிய சூழலை அப்படியே படம்பிடித்து தமிழுலகுக்கு காட்டிட பொருத்தமானதாக இவ்வடிவமிருப்பதால்... இயற்கையின் இனிய அரவணைப்பில் வளர்ந்த தமிழ்க்கவிஞர்களால் அய்க்கூ வடிவம் கூடுதலாய் பயன்படுத்தப்படுவது ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்த அடிப்படையில் இலக்கியவுலகுக்கு வருபவர்தான் கவிமதி. அசன்பசர் என்று ஏற்கனவே இரு தொகுப்புகளின் மூலம் அறிமுகமான இவர், கவிமதியாகி கவிதைப்பயணத்தை தொடர்கிறார். தமிழின் முதல் அய்க்கூ நூலுக்கு சொந்தக்காரரான இலட்சியக்கவி அறிவுமதியின் அன்பை குடித்து இலக்கிய தாகத்தை தீர்த்துக்கொள்கிற இவர், சிறப்பான பல நல்ல நூல்களை தமிழுலகுக்கு கொடுத்து இலக்கிய உலகில் தனி இடத்தைப் பிடிப்பார் என்கிற நம்பிக்கையை தும்பிக்காரன் தருகிறது.

தமிழ்அலையின் முதல் வெளியீடாக கவிஞர் கவிமதியின் தும்பிக்காரன் வெளிவருவது மகிழ்வுக்குறியது. வாசகத் தோழர்கள் புதிய படைப்பாளிகளை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலமே தமிழர் வாழ்க்கைமுறை வரலாறாக மாற்றம் பெற வைக்கமுடியும்.

தமிழ்அலை
உளுந்தூர் பேட்டை.

தொடர்பு முகவரி:
சி.சுந்தரபாண்டியன்
கோனான்குப்பம்-606 104
திருமுதுகுன்றம் வட்டம்
கடலூர் மாவட்டம்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete