எப்போதும் நிகழ்ந்து
விடலாம் என்கிறதான
சம்பவங்கள் குறித்த
சர்ச்சைகள்
நிகழ்ந்து விட்ட சம்பவத்திற்கு
முன்போ பின்போ
எதிர்கொள்வதற்குண்டான
சாத்திய கூறுகள்
தசைகளிழ்ந்த
உயிர்களாய்
எப்போதும்
நிகழ்ந்துவிடக்கூடுமென்று
எதிர்நோக்கப்பட்ட
சம்பவத்தின்
மிச்சங்கள்
எப்போதும் நிகழ்வதேயில்லை
நிகழக்கூடுமென்று
நினைத்ததுப்போல்
உங்களுடைய படைப்புகள் மிகவும் நன்று. பாராட்டுகள். தொடர்ந்து படிக்கிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteமலாக்கா முத்துக்கிருஷ்ணன்,
ஈப்போ, பேராக், மலேசியா