Friday, March 10, 2006

நிகழாதிருப்பின்

எப்போதும் நிகழ்ந்து
விடலாம் என்கிறதான
சம்பவங்கள் குறித்த
சர்ச்சைகள்

நிகழ்ந்து விட்ட சம்பவத்திற்கு
முன்போ பின்போ
எதிர்கொள்வதற்குண்டான
சாத்திய கூறுகள்
தசைகளிழ்ந்த
உயிர்களாய்

எப்போதும்
நிகழ்ந்துவிடக்கூடுமென்று
எதிர்நோக்கப்பட்ட
சம்பவத்தின்
மிச்சங்கள்

எப்போதும் நிகழ்வதேயில்லை
நிகழக்கூடுமென்று
நினைத்ததுப்போல்

1 comment:

  1. உங்களுடைய படைப்புகள் மிகவும் நன்று. பாராட்டுகள். தொடர்ந்து படிக்கிறேன். வாழ்த்துகள்.

    மலாக்கா முத்துக்கிருஷ்ணன்,
    ஈப்போ, பேராக், மலேசியா

    ReplyDelete