Thursday, March 08, 2007

தனி-குடித்தனம்

எங்களுக்கென்று
வீடுகளுண்டு எம்மண்ணில்
மாடி ஓடு கூரையென
பல வடிவங்களில்

நினைத்த இடத்தில்
இருக்கலாம் உறங்கலாம்
ஓடி விளையாடலாம்

கட்டில் அலமாரி தொடங்கி
சாமான் சட்டுகள்
மூலை முடுக்கு
எங்கும் எதிலும்
எம் வாசமே
நிறைந்திருக்கும்

எல்லாம் விட்டு
புலம்பெயர்கையில்
நினைக்கவில்லை

எம் வாழ்வு எம் மகிழ்வு
எம் இயக்கம் எல்லாம்
சுருங்கிப்போகுமென்று

ஒரேயொரு கட்டிலில்

3 comments:

  1. எம் வாழ்வு எம் மகிழ்வு
    எம் இயக்கம் எல்லாம்
    சுருங்கிப்போகுமென்று

    ஒரேயொரு கட்டிலில்//

    கவிஞரே கடைசி வரி மனதை பதபதைக்க வைத்துவிட்டது. நல்ல கவிதை என்று பாராட்ட கூட முடியவில்லை. இதுவே
    கவிதைக்குக் கிடைத்த வெற்றி

    ReplyDelete
  2. கவிமதி அவர்களே, ஈழ பெண்களின் பாலீய வன்கொடுமைகயை இக்கவிதை சொல்வதாய் பொருள் கொண்டேன். ஆனால் தலைப்பை பார்த்ததும் அப்படி இல்லை என்றி நினைக்கிறேன்.
    pls, remove word vertification here

    ReplyDelete
  3. அருமையான கவிதை.

    ReplyDelete