எப்படி உலகமே புதுவருடத்தை கொண்டாடும்படியான
கட்டாயத்தை ஏற்றுக்கொண்ட தருணத்தில் உனக்கு மட்டுமென்ன இப்படியொரு நினைப்பு என எனக்குள் இன்னொரு மனம் கேள்விகேட்க...
கடைசியில் முதல் மனம் வெல்கிறது.
பழைய வருடங்களின் குப்பைகள் நிறைய குவிந்துகிடக்க அதனை ஒரு ஓரமாக தள்ளிவைத்துவிட்டு தன்மேல் புதிய வாந்திகளை அள்ளி அள்ளி பூசிக்கொண்டு குதூகலிக்க அடிமை மனம்கொண்டவர்களால் மட்டுமே முடிகிறது.
கடந்த ஆண்டிகளில் நடந்த எத்தனையோ அடக்குமுறைகளை மறந்தாலும், மறக்க முடியாதது திரு.சதாம் உசேன் அவர்களின் படுகொலை. ஈராகில் புகுந்ததிலிருந்து நடத்திய கொலைகளுடன் இந்த படுகொலையையும் நிகழ்த்தியவர்கள், அங்கே தற்போது அமைதி நிலை திரும்பிக்கொண்டிருப்பதாக (செய்திகள்) வதந்திகளை வாரி வாரி இரைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை வெட்கங்கெட்ட அரபுநாடுகள் உள்பட அனைத்தும் தங்கள் நாடுகளில் வெளியாகும் (வெளியாக்கும்) பத்திரிகைகளில் வெளியிட்டு பூரித்துபோகின்றன.
அமைதி திரும்பிவிட்டதாக அவர்கள் வெளியுலகத்திற்கு காட்டுவது. அமெரிக்க இராணுவத்தினர் (புகைப்படங்களுக்காக) குழந்தைகளுக்கு இனிப்பு தருவதையும், உணவகங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதையும் தானே தவிர இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருபிடி மண்ணாவது திரும்ப கிடைத்ததாவென்று காட்ட முடியவில்லை.
உதாரணத்திற்கு இங்கு என்னால் குறிப்பிட முடிந்தது ஒரு ஈராக் மட்டுமே இந்த வரிசையில் பாலஸ்தீனம், காஷ்மீர், இலங்கை தொடங்கி பாதிக்கப்படும் அத்தனை சமூகங்களுங்களை பற்றியும் எழுத இங்கே பக்கங்கள் போதாது என்பதும் தங்களுக்கு தெரிந்ததே.
தன் இனமே ஆனாலும் பாதிக்கப்படுவது யாரோதானே என நினைத்துக்கொண்டிருக்கும் இந்த சுரனைகெட்ட மனித இனத்தினிடையில்தான் உணர்வாளிகளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றென்னுகையில் எனக்கு ஏதோ பிணங்களின் மத்தியில் இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதே உணர்வுகள் உங்களுக்கும் தோன்றினால் நாம் தோழர்களே என்ற மாமனிதன் சே குவேராவின் வரிகளுடன் நாம் உரக்க ஊருக்கு உரைக்க சொல்லுவோம்.
இந்த புத்தாண்டு மட்டுமல்ல, நாளை நாமும் தாக்கப்படுவோம் என்பதை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் மனித சமூகம் இருக்கும்வரை எந்த இனத்தின் எந்த புத்தாண்டுகளும் நமக்கு பொலிவாகாது. வழக்கம்போல் இதுவும் வெரும் நாட்களின் எண்ணிக்கைக்குதான் என்று அலட்சியப்படுத்தி அசிங்கத்தைபோல் துடைத்து எறிந்துவிடலாம்.
எல்லா புத்தாண்டுகளுக்கும் நான் தவறாமல் செய்கிற நல்ல பழக்கம் புத்தாண்டுகள் பிறப்பதற்கு முன் உறங்கிவிடுவது. முதலாளிய கட்டமைப்புகளின் நடுவில் வாழ்வதால் ஒரு நாள் விடுமுறையை வீணாக்குவானேன் என்கிற நல்லெண்ணம்தான்.
வாழ்க உருப்படாத சனநாயகம்.
No comments:
Post a Comment