Wednesday, December 30, 2009

என் புதிய நூல் வெளியீட்டுவிழா

புதுச்சேரி "நட்புக்குயில்கள்" அமைப்பினர் நிகழ்த்திய கவிமதியின் "நிறங்களற்ற தனிமை"கவிதை நூல் வெளியீட்டுவிழா மற்றும் சே.ரெ.பட்டணம் மணியின் "இனி நாம்" ,நண்பனின் "விரியக்காத்திருக்கும் உள்வெளி" ,முத்துக்குமரனின் உயிர்த்துளி ஆகிய பாநூல்களின் திறனாய்வரங்கம் 28.12.2009 திங்கள்அன்று மாலை 6மணியளவில் புதுச்சேரி சுசிலாபாய் அரசுப்பெண்கள் மேனிநிலைப்பள்ளியில் நடந்தேறியது.

நிகழ்விற்கு நட்புக்குயில் அமைப்பின் தலைவர் புதுவை சீனு.தமிழ்மணி அவர்கள் தலைமைத்தாங்கினார்.
நிகழ்வில் "நிறங்களற்ற தனிமை" கவிதை நூலை அக்கலிமா கவிமதி வெளியிட புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முனைவர்.மு.இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

நிறங்களற்ற தனிமை கவிதை நூலின் விரிவான திறனாய்வை புதுவை காமராசர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர்முனைவர்.தி.அன்புச்செல்வன் வழங்கையில் ஒரு கவிஞனுக்கு இருக்கவேண்டிய மொழி ஆளுமையும், சமூகப்பொருப்பும், சமகால நிகழ்வுகளின் பதிவாக்கமும் இந்நூலில் முறையாக கையாளப்பட்டிருப்பது நிறைவைத்தருகிறது என்றார்.

தொடர்ந்து கவிஞர்.சே.ரே.பட்டணம் மணியின் "இனிநாம்" நூலின் திறனாய்வை புதுவைப்பல்கலைக்கழகமுனைவர்பட்ட ஆய்வாளர் கரசூர்கந்தசாமி அவர்களும், கவிஞர் நண்பனின் "விரியக்காத்திருக்கும் உள்வெளி" தொகுப்பின் திறனாய்வை புதுவைப்பல்கலைக்கழ முனைவர்பட்ட ஆய்வாளர் மனோ மோகன் அவர்களும், கவிஞர்.முத்துக்குமரனின் "உயிர்த்துளியினை புதுவைப்பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் செயபாரதிஅவர்களும் வழங்கினார்கள். நிகழ்வில் திரு.மு.சி.இராதாகிருட்டிணன். எழுத்தாளர் பிரேம் ரமேஷ், திரு.அறிமாவளவன், கவிஞர்.புதுவைத்தமிழ் நெஞ்சன், கவிஞர்.இராஜேஸ்வரி, கவிஞர்.பரிதியன்பன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு சிறப்புச்செய்தனர்.

நிகழ்வின் இறுதியாக கவிமதி ஏற்புரைவழங்க, அரசுமேனிநிலைப்பள்ளி ஆசிரியை க.இரா.அறிவழகி நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியினை சிறப்பாக நிறைவு செய்தார்.

செய்தி மற்றும் படங்கள்: கவிஞர்.பரிதியன்பன்.

1 comment:

  1. பொய் மதி....

    நீங்கள் அல்ல ....தங்களின் புத்தகங்கள்.

    ஷய்தானின் வாழ்த்து வந்து குவிகின்றது.

    அதை கண்டு கண்கள் எரிகின்றன.

    ReplyDelete