Monday, September 20, 2010

கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் முன்னெடுக்கும் தியாகி திலீபனின் 23 ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு

தியாகி திலீபன் உயிர்த்தியாகமடைந்த 23 வது வருட நினைவுநாளான எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி கனடா ரொறொன்ரோ மாநரத்தில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் மாலை 6 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினவு தினத்தை கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் ரொறொன்ரோ கலைபண்பாட்டுக் கழகம் இணைந்து நடாத்தவுள்ளனர்.
அன்று இந்திய வல்லரசு கொடிய இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழரை அடக்கியாழ தீட்டிய வஞ்சகத் திட்டத்திற்கு எதிராக. தியாகி திலீபன் அண்ணா அவர்கள் நீராகாரம் இன்றி உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் போராடி வீரச்சாவை தழுவிக்கொண்டார். அவர் தனது சாவின்மூலம் இந்தியத்தின் காந்தீய முகமூடியைக் கிழிதெறிந்தது மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிலைத்த ஆகுதியாகியாகினார். அவர் அன்று நல்லூர் வீதியில் வைத்த விடுதலை நெருப்பானது இன்று உலகெங்கும் உள்ள வீதிகளிலும் தமிழர் வீடுகளிலும் காட்டுத்தீ போன்று பரவி எரிகின்றது.

திலீபன் அண்ணாவின் 23ம் ஆண்டு நாளை நினைவுகூரும் இவ்வாண்டில் புலம் பெயர் தமிழர்களாகிய நாம். அவரின் இலட்சிய விடுதலைதீயை கலங்கரை விளக்காகக் கொண்டு எமது தமிழீழத்தாயின் அண்மித்த விடுதலையை நோக்கி விழிப்பாக ஒற்றுமையாக ஒன்றிணைந்து உழைப்போம் என உறுதிகொள்வோம்!
காலம்: செப்டம்பர் 26
ஞாற்றுக்கிழமை மாலை 6.00 மணி
இடம்: கனடா கந்தசுவாமி கோவில்
733 Birchmount Road
Scarborough, ONTARIO

No comments:

Post a Comment