Saturday, October 30, 2010

கேட்டுத்தான் கொடுப்பாயெனில்...

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று கிருத்துவமதமும்,கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா-என கீதையும்,உங்களை படைக்குமுன்னே உங்களுக்கானதை படைத்துவிட்டோம் எனினும் கேட்டல் என்பது உங்களின் கடமை-என இசுலாமும் தத்தம் கோட்பாடுகளுக்கு ஏற்ப தான் அதிகாரம் செலுத்தும் மக்களின் மீது கேட்டலை கடமையாக வைக்கின்றன.

அது என்ன எதற்கெடுத்தாலும் இந்த மூன்று மதங்களைதான் உதாரணம் காட்ட வேண்டுமா? வேறுமதங்களே இல்லையா என எனக்கு நானே கேட்டுக்கொண்டாலும்.பதிலும் என்னிடமே இருக்கிறது. ஆம் எல்லா மதங்களின் பட்டியலையும் தரத்தொடங்கினால் எனக்கு ஒரு வலைத்தளம் போதாது. இங்கும் பெரும்பான்மை என்ற ததுவார்த்த பொருள்முதல் வாதமே மேலோங்குகிறது.

இருப்பினும் "கேட்டுத்தான் கொடுப்பாயெனில் கேவலமடா முருகா" என்று ஒரு அம்புச்சொல் வந்துவிழுகிறது. இது முருகனுக்குத்தான் நமக்கில்லை என எந்தக் கடவுளும் தலைத்திருப்பிக்கொள்ள இயலாது. இதில் முருகன் என்று சொல்லப்பட்டாலும் கடவுளே இல்லாதவனை பதமாக வைத்து சொல்லப்பட்டதென்பதே அது. இருப்பினும் இந்த வாக்கியமானது எல்லா கடவுள்களையும் மூட்டைக்கட்டி மூலையில் போட்டுவிடுகிறது.

சரி இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? இதோ வந்துவிட்டேன் எழுத்தாளன் என்றால் சும்மா நேரடியாக சொல்லாமா? கொஞ்சம் எதுகை மோனை எல்லாம் வேண்டாமா? அப்பதானே தமிழுக்கு நோபல் பரிசெல்லாம் வாங்கித்தர முடியும்.

ஒன்னுமில்லைங்க இன்றிலிருந்து இந்தப்பகுதியினை நமக்குள் ஒரு நீண்ட உரையாலுக்காக வைக்கிறேன். வழக்கபோல நாம் கற்றதையும் பெற்றதையும் (சத்தியமா சுஜாத்தா போல இல்லை) பகிர்ந்துக்கொள்வோம். அதுதான் கேட்டது கிடைக்கும்.

தொடர்வோம்.

9 comments:

  1. Anonymous12:30 PM

    kavimathi
    இது யாரை வம்புக்கு இழுப்பதற்கு?

    ReplyDelete
  2. யாரையும் வம்புக்கு இழுப்பதற்கல்ல
    எல்லோரிடம் கற்றுக்கொள்ளவே இது

    ReplyDelete
  3. கேட்டால் தான் கொடுப்பாயெனில்
    வைத்துக்கொள் நீயே

    ReplyDelete
  4. பாத்திமா பர்வின் துபாய்1:42 AM

    கவிமதி நீங்கள் மதவாதியா? மிதவாதியா?

    பர்வீன் பாத்திமா துபாய்

    ReplyDelete
  5. Anonymous2:36 AM

    கவிமதி மதவாதியுமல்ல, மிதவாதியும் போல் தெரியவில்லை. வேலை வெட்டி இல்லை போலிருக்கிறது. பெரிய அறிவாளி போல் தன்னை தானே நினைக்கிறார் போலிருக்கிறது!

    ReplyDelete
  6. நான் மதவாதியும் அல்ல, மிதவாதியும் அல்ல இரண்டும் ஆபத்தானது.ஏனெனில் கொஞ்ச நாட்கள்வரை இரண்டு பேராசிரியர்களை (பேரா.சுப.வீ. பேரா.பெரியார்தாசன்) தமிழ்ச்சமூகம் நம்பியது. ஒருவர் மதவாதியாகிவிட்டார். இன்னொருவர் மிதவாதியாகிவிட்டார். இருவரும் நம்பிய தமிழ் சமூகத்திற்கு பயன்படாமல் போய்விட்டார்கள்.

    என்னை நம்பலாம் நான் பெரிய அறிவாளியும் அல்ல Anonymous-போல் முட்டாளும் அல்ல. என்னளவில் தெரிந்ததை மற்றவரிடம் பகிர்கிறேன். தெரியாததை மற்றவரிடமிருந்து பெருகிறேன்.

    தேடல் ஒன்றே என் இலக்கும் முடிவும்.

    ReplyDelete
  7. பாத்திமா அப்துற் றஹீம்6:16 AM

    பேரா.பெரியார்தாசனை விமர்சிக்க அவரை விட அதிக தகுதி வேண்டும் அல்லது அவர் அளவுக்காவது முதிர்ச்சி வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு ஆபத்தானது நகைப்பிற்குரியது. பேரா.பெரியார்தாசன் அவருக்காக அவர் தேடிக் கொண்ட நல்வழி. அதே நல் வழியில்இருப்பதாக சொல்லிக் கொள்ளும் சிலர் தோற்றுப் போக இவர் வெற்றியே பெற்றிருக்கிறார். அவர் பின்னால் ஓடி அவரை தொடர முடியாமல் தோற்றுப் போய் உங்களைப் போன்றவர்கள் நின்றது அவர் குற்றமல்லவே! யாரையாவது பின் தொடர்ந்து ஓட வேண்டும் என்ற கொள்கையை மாற்றிக் கொள்ளுங்கள். ஓடித்தான் ஆக வேண்டுமென்றால் தனியாக ஓடுங்கள். யாருக்கும் நட்டம் வராது!

    ReplyDelete
  8. Anonymous10:45 AM

    தஸ்லீமா நஸ்ரின் என்ற தலைப்பில் இவர் எழுதி ஏற்கனவே நன்றாக குட்டுப் பட்டு இருக்கிறார். அங்கிருந்து இங்கு ஓடி வந்து விட்டார்.நீங்களும் படித்துப் பாருங்கள். ஒரு எழுத்தாளன் என்பது மரியாதைக்குரிய விஷயம். இவரெல்லாம் ஒரு எழுத்தாளனே கிடையாது! டுபாக்கூர். எதவது சர்ச்சையை உண்டாக்கிவிட்டு பிரபலமாக நிணைக்கும் குறுக்கு வழிக்காரர். எழுத்தை பிழைப்பாக நடத்த திட்டமிடுபவர். தேவையென்றால் நாளை தமிழையும் விற்று விடுவார். இவரையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதக் கூடாது.

    ReplyDelete
  9. Anonymous7:45 AM

    கருணாநிதியைப்போல் தமிழையும் தமிழனையும் விற்றுவிடுவார் என்கிறீர்களா?

    அதுசரி நீங்கள் ஏன் டுபாக்கூராட்டும் பெயரில்லாமல் எழுதுகிறீர்கள்?

    ReplyDelete