Sunday, December 23, 2012

அடேய் மக்கா இது புது உலகமடோய்


ஏலே மக்கா... கேள்றா..கேள்றா...அப்பாடா ஒரு வழியா உலகம் அழிந்து வேறு உலகமா மாறி இந்த சாதி, மத, இன, பண இன்னபிற சாக்கடைகள் எல்லாம் ஒழிஞ்சி அல்லது அதெல்லாம் அழிஞ்சிப்போய் நாம இனி இந்த கருமாந்திரமெல்லாம் இல்லாத உலகத்தில இருக்கோம்ன்னோம், இனி எந்த மயிரானுக்கும் பயப்படாம பாவேந்தரின் காதல் கவிதைகளைப்பாடி பாடி காதல் பண்ணிக்கிட்டே இருக்கலாம் என்றும் நேற்று இரவு மகிழ்ச்சியா தூங்கி எழுந்ததேன்.

எழுந்துப்பார்த்தா இந்த வெட்டிபயக... அய்யய்யோ நான் வெட்டின்னு சொன்னது அவரு காதுல விழுந்தா அவ்ளோதான் என்னுடைய எல்லாத்தையும் வெட்டிடுவார் (நான் நகத்த சொன்னம்பா)...

அப்புறம் நம்ம!!! தலைநகரம்!!! பாலியல் கொடுமை நகரமா ஒளிர்கிறதாமே...

ஓ இதத்தான் இந்தியா ஒளிர்கிறதுன்னு சொன்னாங்களோ! என்ன கொடுமடா அவங்க மந்திரிங்களே பாராளுமன்றத்தில இருக்குறப்போ குஜால் படங்கள பாத்துட்டு இப்ப பாலியல் வன்முறைக்கு எதிரா பேசுறாங்களாம் எப்புடி இருக்குதுபாரு. நாமளும் இத நம்பிக்கிட்டு வோட்ட போட்டுடனும் பாத்துக்க... ஆமா தெரியாமதா கேக்குறேன் "கயர்லாஞ்சி தொடங்கி எத்தனையோ எடத்துல தலித்துகளுக்கு எதிரா பாலியல் கொடுமை நடந்தப்ப" இந்த ராம தேச அவதார புருஷர்கள் எங்கே போனாங்கன்னு நான் சொல்லவா ஹிஹி அவங்க தலைவர்களோட சேர்ந்து பலான படம் எதுனா பாத்திட்டு இருந்திருப்பாங்க. எலவு அந்த சமாச்சாரத்த தானே காம கோடிகளெல்லாம் செஞ்சிக்கிட்டுருக்கானுவோ.

அப்புறம் பாருங்க இந்த புது உலகத்தில நம்ம ராமர் தாசு அய்யா தன்னோட ஆளுகளுக்கு காதோட காதா ஒரு கட்டளையிட்டாராம் அது "ஏலே வீர! பசங்களா நம்ம ஆளுக தனியா நடத்துற தனியார் சாராயக்கடைகள விட்டுட்டு நம்ம இளிச்சவாய் அரசு சாராயக்கடைகளா பார்த்து பூட்டு போடுங்க, அதுதான் எவனும் கேட்க நாதியில்லாத கடைங்க, அப்பதான் இந்த தனியார் கடையில வாங்கி குடிக்கிற குடிமகன்க நம்மளுக்கு எதிர்க்காலத்தில ஓட்டு போடுவாங்க அதுமட்டுமில்லை நம்ம கடைய நாமலே பூட்டுப்போட்டா எவனும் மதிக்க மாட்டான்"

அப்புறம் கல்லியாணம் ஆவாத அரசியல் தலைவன்கள பார்த்து உசுப்பேத்தி கல்யாணம் பண்ணிக்கவெச்சுடுங்க இல்லேன்னா அவங்ஞ தொண்டர்களையெல்லாம் உசுப்பேத்தி நம்ம பொண்டுகல தள்ளிகிட்டு போக வச்சுடுவான்க...அப்படியே இந்த ஒலைச்சி ஒலைச்சி ஓடா போன பயக யாராவது ஒத்தையில வந்தாலோ, கூட்டா வந்தாலோ நம்ம பொம்பளையாள் எல்லாரையும் பொரடியில காலடிக்க ஓடிட சொல்லிடுங்க. அப்படியே "பாப்பான் ஒத்தையில வந்தா மட்டும் ஆபத்தில்லை பரையன் வந்தாலும் ஆபத்துன்னு" பெரியார் சொன்னதா புளுகிவிடுங்க.

இத சொல்லுறப்ப முக்கியமான ஒன்னு மறந்துடாதீங்க ஊட்டுல இருக்குற தொடப்பக்கட்டை எல்லாத்தையும் ஒழிச்சி வச்சுடுங்க இல்லேன்னா நம்ம பொம்பளையாள் நம்மளேய அடிப்பாளுங்க..

ஹும்.. எல்லாத்தையும் விட இது புது உலகம்தான்னு எனக்கு அடிச்சி சொல்லமுடியும் ஏன்னா என்னைக்கும் இல்லாம இன்னிக்கி எனக்கு ரெண்டுதடவ வெலிக்கி வந்துச்சே அப்ப இது புது உலகம்தானே. சரி வரட்டா எனக்கு மறுபடியும் வயித்த கலக்குது அதனால செவ்வாய் கிரகத்துக்கோ, வியாழன் கிரகத்துக்கோ போய் அதுங்க புது உலகமா மேலே சொன்ன எலவுகளெல்லாம் இல்லாம இருந்தா நல்லா முக்கி முக்கி இருக்கனும். சரி வரேன்பா.

3 comments:

 1. Anonymous9:58 PM

  போடா லூசுப் பயலே! எதுனாச்சும் எழுதனும்னு உளரிக் கொட்டுறியே? பாவேந்தராம் புண்ணாக்காம்?

  ReplyDelete
 2. Anonymous8:58 AM

  அப்பாடா இந்த பய புள்ளைக்கு ஏன் பொத்துகுது?

  ReplyDelete
 3. Anonymous10:49 AM

  "ஏன்னா என்னைக்கும் இல்லாம இன்னிக்கி எனக்கு ரெண்டுதடவ வெலிக்கி வந்துச்சே"

  பாத்துப்பா, 2 தடவயெல்லாம் வெலிக்கி வந்தா ரொம்ப தப்பு. கவனிக்கணும். வியாதி ஏதும் இருக்கும், இல்லே ஓட்டை பெரிசா போயிருக்கும். பாத்துடா தம்பி!

  ReplyDelete