Saturday, July 27, 2013

தீவிரவாதத்திற்கு சாவுமணி அடிப்போம்.

அன்பிற்கினிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று நம் சமூகம் சந்தித்துக்கொண்டு இருக்கும் சவால்கள் ஏராளம் அதிலும் குறிப்பாக எதிரிகளின் கைகள் ஓங்கிய நிலையில் இருக்கும் இந்த நேரம் மிகவும் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்ப்படுத்தி உள்ளது.

அன்று நம் முன்னோர்கள் சந்தித்த பல பிரச்சனைகளை விட இன்று நாம் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனை மிக அபாயகரமானது, ஆதம் (அலை) காலம் முதல் 19ம் நூற்றாண்டு வரை நாம் சந்தித்ததெல்லாம் நேருக்கு நேர் போர், பல வெற்றியும் சில தோல்விகளை சந்தித்து உள்ளோம். வெற்றி தோல்வி வீரத்தின் வெளிப்பாடாக அமைந்ததது. ஆனால் இன்றோ யுத்தம் மறைமுகமாக அரேங்கேரிக்கொண்டுள்ளது. இப்பொழுதுள்ள யுத்தம் தயிறை போன்று உருவாக்கப்படுகிறது. உரைமோரை கலந்து பாலை அதன் தன்மையை இழக்க செய்வது போன்று தீவிரவாதத்தை இஸ்லாத்துடன் இணைத்து அதன் தன்மையை இழக்க முயற்ச்சி நடக்கிறது உலகெங்கும்.

முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்க கோட்சேவின் கைகளில் இஸ்மாயில் என்ற பச்சை குத்திலிருந்து ஆரம்பித்து இந்திய முஜாஹிதீன் வரை இன்று நாம் அனுபவிக்கும் மறைமுக யுத்தம் நம்மால் எதிர்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

நியுயார்க் சிட்டி முதல் பிள்ளையார்பட்டி வரை எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் அதில் முதல் குற்றவாளியாக இணைக்கப்படுவது இழிச்சவாய முஸ்லிம்கள் தான். மும்பையில் குண்டுவெடித்தாலும் முஸ்லிம், அம்பையில் குண்டுவெடித்தாலும் முஸ்லிம், கோயிலில் வெடித்தாலும் முஸ்லிம், முஸ்லில்கள் தொழும் பள்ளியில் வெடித்தாலும் முஸ்லிம். இவர்கள் நம்மை குற்றம் கூறாத ஒரே குண்டுவெடிப்பு தீபாவளி பண்டிகையின் பொழுது வெடிக்கப்படும் குண்டுகள் தான் கூடிய விரைவில் அதையும் எதிர்ப்பார்க்கலாம்.

புத்தகயாவில் உள்ள புத்தகோயிலில் ஆளே இல்லாத சமயத்தில் குண்டுகள் வெடித்து எந்த வித பொருளோ உயிரோ சேதமில்லாத உப்புசப்பற்ற செய்தியை நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்ப்படும் பிரச்சனையாக கருதும் மீடியாவும் அரசும் மாலேகான் குண்டுவெடிப்பை நீர்த்துப்போனதாக்கியது எவ்வளவு கேவலம். மாதம் கடந்தும் புத்தகயா குண்டுவெடிப்பு தலைப்புசெய்தி ஆனால் இரண்டே நாளில் கடைசி துணுக்காக கூட இல்லாமல் போனது ராமநாதபுரம் பள்ளி எரிப்பு சம்பவம்.பெரியார் ஏற்ப்படுத்திய திராவிட கொள்கையால் இவ்வளவு நாள் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் இன்று குஜாராத்தில் நடந்த சம்பவம் போல் எழிதாக நடக்கும் சூழல் உருவாகிஉள்ளது அது திராவிட கட்சிகளின் கொள்கை உறங்கிக்கொண்டுள்ளது என்பதை தெள்ளதெளிவாக காட்டுகிறது.

காங்கிரஸ் பல சவால்களை எதிர்கொண்டு இரு(ற)க்கும் சூழ்நிலையில் அடுத்து ஆட்சிக்கு வருவது சந்தகமே, மூன்றாம் அணி வழுப்பெற தவறினால் அயோக்கியன் மோடியின் கையில் ஆட்சியை கொடுக்கும் சூழல் வரும். அப்படி வரும்பட்சத்தில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாகிவிடும்.

ஆகையால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் நம் சமூகம் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. உங்களின் ஒற்றுமை தான் அதற்க்கு தேவைப்படும் ரத்தம். முஸ்லிம் என்ற ஒரே பேனரில் போராடுவோம் வேற்றுமையை ஒழித்து மறைமுக தீவிரவாதத்திற்கு சாவுமணி அடிப்போம்.

அன்புடன்
அன்வர் சதாத்
துபாய்.

No comments:

Post a Comment