Saturday, July 27, 2013

அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய அமைப்புகளும்- அன்வர் சாதாத்

சில பதிவுகள் நம் மனதை சந்தோஷப்படுத்தும், சில பதிவுகள் நம்மை கோபப்படுத்தும் ஆனால் இன்று நான் வைக்கும் பதிவு என்னை எனக்கே வெட்கப்படைவைத்து எழுத வைத்துள்ளது, அவ்வளவு கேவலப்பட்ட அவல நிலையில் நான் பிறந்த வளர்ந்த சமுதாயம் இருக்கிறது.

இஸ்லாம் பெயரிலே சாந்தத்தை(சலாம்) தாங்கிய மார்க்கம், ஆனால் இப்பொழுது சாந்தம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை தேடி அழைந்துக்கொண்டு இருக்கின்றோம். அவ்வளவு மனக்கசப்பு, பிளவு நம் மார்க்கத்தில். நம் கடமையான சலாமை சொல்லக்கூட வெட்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம் ஏன் இந்த அளவுக்கு நாம் போனோம் என்று பார்க்கப்போனால் அதற்கெல்லாம் காரணியாக இருப்பது இஸ்லாமிய அமைப்புகள் தான்.

நம் சமுதாயத்தால் இஸ்லாம் கூறாத செயல்கள் செய்கிறார்கள் என்றும் ஷிர்க் செய்கிறார்கள் என்றும் அறியாமையை ஒழிக்கவேண்டும் என்றும் 80 களில் ஆரம்பிக்கப்பட்டது தான் இப்பொழுது உள்ள இஸ்லாமிய அமைப்புகளின் ஆணி வேர். அன்று மதனிகள், மார்க்க அறிங்ஞகர்கள் கொண்டு ஆராம்பித்தார்கள். ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் அறியாமையை ஒழிப்பது தான் ஆனால் காலப்போக்கில் அமைப்புகள் ஒழித்தது அறியாமையை மட்டும் அல்ல சகோதரத்துவத்தையும் தான்.

அன்று ஒரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது இன்று நூற்றுக்கணக்கில் சிதறிக்கிடக்கின்றது ஜாதிகட்சிகள் போல. இதில் அவர்கள் அனைவரும் அன்று ஒற்றுமையின் கயிற்றை பற்றிக்கொள்ளுங்கள் என்று உறக்கக்கூறியவர்கள். தாங்கள் கூறிய வாக்கை கூட காப்பாற்ற தெரியாதவர்கள் அமைப்பின் தலைவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு கீழ் ஆயிரம் கணக்கான சீடர்கள் வேறு.

இவர்களில் ஒரு சாரார் நாங்கள் இஸ்லாம் கூறாத இந்திய அரசியலில் ஈடுப்படப்போவதில்லை என்று கூறி வருகின்றனர் ஆனால் தங்களின் கருத்து எதிரியான இன்னொரு இஸ்லாமிய அமைப்பு இந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்தால் அந்த அரசியல் கட்சியின் எதிர் கட்சியுடன் இந்த அமைப்பு சமரசம் ஏற்ப்படுத்திக்கொல்கிறது அதற்க்கு முழுமையாக ஒதுங்கி இருப்பதே மேல் அல்லது முழுவதும் இஸ்லாத்தின் கொள்கைகளை புறம் தள்ளிவிட்டு அரசியல் கட்சி ஆவதே மேல்.

நம் அமைப்புகள் அரசியல் கட்சிகளைவிட மோசமானவை, அவர்களாவது இன்று எதிரணியாக உள்ளவர்களை நாளை கூட்டணி கட்சியாக சேர்த்துக்கொள்கிறார்கள் ஆனால் இங்கு எதற்கும் ஒன்று சேருவதில்லை சகோதரத்துவம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்க்கும் அளவிலே தான் இவர்கள் உள்ளார்கள், இதை எல்லாம் கேட்க்கப்போனால் அல்லாஹ்வே கூறிவிட்டான் நீங்கள் பல கூட்டங்களாக பிரிந்து கிடப்பிர்கள் என்று கூறுவார்கள். வெட்கமாக இல்லையா அப்படி ஒரு கேவலமான வார்த்தையை கூறுவதற்கு.

அரசியல் கட்சிகளில் நடக்கும் அனைத்து அனாச்சாரங்களும் அக்கிரமங்களும் இந்த அமைப்புகளில் அருமையாக அரங்க்கேரிக்கொண்டு தான் உள்ளது. ஒருவன் குறை கூறுகிறான் என்றால் அவன் முன் செய்த தவறையோ அல்லது அவன் குடும்பத்தில் நடந்த சம்பவத்தையோ வைத்து குறை கூற காரணம் கண்டுபிடிக்க அழைந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அமைப்பின் தலைவருக்கு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது, அவரே அதை பகிரங்கமாக அறிவித்தார் ஆனால் இந்நாள் வரை அவரை போய் சந்திக்கவில்லை எதிர் அமைப்பினர்கள் இது தான் இஸ்லாம் சொல்லி தந்த நடப்பா?. முஹம்மத்(ஸல்) மீது குப்பை கொட்டிய பெண் வீட்டிற்கு சென்று அவளின் உடல் நிலையை குறித்து விசாரித்த அவர்கள் எங்கே அவர்களை பின்பற்றுகிறோம் என்று கூப்பாடு போடும் நாம் எங்கே.

இதே போன்று ஒரு அமைப்பு நம் இஸ்லாமிய சகோதரர்கள் சிறையில் வாடுவதையும் இன்னும் சில நல்ல கோரிக்கையை நிறைவேற்ற கூறியும் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது, அரசு போராட்டத்திற்கு தடை செய்கிறது அதற்க்கு எதிர் அமைப்பான ஒரு இஸ்லாமிய அமைப்பு இனிப்பு வழங்கியும் சமூக வலைதளங்களில் கேலி செய்து பதிவுகள் வைத்தும் கொண்டாடுகிறார்கள், இது நம் சமுகத்திற்கு ஏற்ப்படும் பிரச்சனை இல்லையா வருத்தப்பட வேண்டிய விஷயத்திற்கு பதில் கொண்டாடுகிறார்கள் நம்மை நாமே தீவிரவாதிகள் என்று போஸ்டர் அடித்து கேவலப்படுத்துகிறார்கள் .

அன்று இஸ்லாத்தை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துக்கொண்டு பேசினார்கள் இன்றோ அந்த அமைப்பில் உள்ள மார்க்க அறிவே கால்வாசிகூட முழுமை பெறாத அரை வேக்காடுகள் தர்க்கம் செய்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பாப்பனர்களும் தலித்துகளும் ஒன்று சேர்ந்தாலும், இந்த துளுக்கர்கள்(ஜாதி பிரிவினை இல்லை ஆனால் கருத்து பிரிவினையால்) ஒன்று சேரப்போவதில்லை. இவர்கள் சேரும் இடம் ஒன்று தின்பதற்க்கான தாவத்தாக இருக்கும் அல்லது புரம் பேசுவதற்க்காக இருக்கும். செய்வது எல்லாம் ஷெய்தானின் வழியில் ஆனால் வார்த்தைக்கு வார்த்தை இஸ்லாம், ஒற்றுமை என்று பேசுவோம் இஸ்லாம் வழியில். இதற்க்கு மவ்லத் மற்றும் இன்னும் பிற இஸ்லாம் சொல்லாத செயல்களை செய்துக்கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்த அந்த காலமே மேல். யாரும் உன்மையான தவ்ஹீத் வாதி என்று சொல்லவே தகுதியற்றவர்கள். முதலில் நம் முதுகில் உள்ள கஹடை கழுவிவிட்டு மற்றவர்களுக்கு முதுகு தேய்கலாம். ஒற்றுமையை கூட பேனத்தெறியாத நாம் யாரும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய தகுதியற்றவர்கள்.

சகோதரர்களே நமக்குள் உள்ள பிளவை நாம் இன்று சரிசெய்ய தவறினால் நாளை நாம் காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டாலும் நம்மை கேட்க்க நாதி அற்றவர்களாக இருப்போம், குஜராத்தில் நமக்கு நடந்த கொடுமைக்கு காரணம் அங்கு நம்முள் ஒற்றுமை இல்லை அதை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். நாம் ஜாதி வேரிப்பிடித்தவர்கள் இல்லை சிறு சிறு கருத்து வேறுப்பாடு நம்மில் இருப்பின் அதை நம்முள் வைத்துக்கொள்வோம், சகோதரனை அரவணைப்போம், எந்த அமைப்பையும் சாடாமல் நாம் நம் வேலையை பார்த்தாலே முழுப்பிரச்சனையும் தீர்ந்தது.

இறுதியாக என் இந்தப்பதிவு என் சமுதாயத்தின் அவலநிலையை கண்டு மனம் வெம்பி எழுதினேன். இதை சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன் அதற்க்கு எனக்கான ஒரே பதிலாக நான் வைத்துக்கொள்வது நான் எந்த அமைப்பும் சாராதவன்.

“ஒற்றுமையை பேணி நடப்பது அமலிலே சிறந்த அமலாக இருக்கும்” ஆதலால் ஒற்றுமையை பேணுங்கள் வேற்றுமையை ஒழியுங்கள். இன்ஷா அல்லாஹ் அது கூடிய விரைவில் நடக்க வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்.

- அன்வர் சதாத்

துபாயிலிருந்து

No comments:

Post a Comment