திசம்பர் 6 அரசியல் மாமேதை புரட்சியாளர் டாக்டர்
அம்பேத்கர் நினைவு
நாள்...அம்பேத்கர் அவர்களை எந்த வகையிலும் இந்திய பெரும்பான்மை மக்கள்
நினைத்து விட கூடாது
என்றுதான் அந்த நாளில் பாபர் மசூதியை இடித்தனர் காவி காலிகள். இதேப்போல்
மிக "நுணுக்கமாக" நிறைவேற்ற பட்ட காலிகளின் காரியங்கள் பற்பல மதசார்பற்ற
இந்தியா என்று பீத்திக்கொள்ளும் இந்திய வரலாற்றில் வடுக்களாக பதிந்துள்ளன.
திசம்பர் 6ஆம் தினத்தினை சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத காங்கிரசு அரசை கண்டிப்பதற்கும், இடிந்து தரைமட்டமாகிபோன இந்திய மதச்சார்பின்மை இறையாண்மையினை மீட்டெடுக்கவுமே இந்திய இசுலாமிய மக்கள் ஒன்றிணைந்து வருடந்தோரும் புரட்சி செய்கின்றனர். இருந்தும் காங்கிரசு அரசோ மறந்தும் நாங்கள் இந்திய மதசார்பின்மையினை மிட்கமாட்டோம் என்கிற அசைக்க முடியாத கொள்கையால் தாங்கள் கட்சியால்தான் வேறுபாடு "கொள்கையால் பி.ஜெ.பி தான்" என்பதை வருடம்தோரும் புதுபித்தும் வருகிறது.
இனமீட்சி நெருப்பு அம்பேத்கரின் வழியில் கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும், தங்களின் உயரிய மத நம்பிக்கையின் அடையாளமான பாபர் மசூதி நில மீட்பில் தீவிரமும் காட்டி அனைத்து சிறுபான்மை மக்களுடன் ஒருங்கிணைந்து இப்போராட்டத்தை இசுலாமியர்கள் நடத்தினால் இந்திய மதசார்பு அரசியல் அடாவடிகளுக்கு ஒரு மிரட்சியினை தர இயலும் என்பது உண்மை.
அத்தகையதொரு இனமீட்சி போராட்டத்தில் தலைவர்.தொல்.திருமாவளவனையும் அவர்தம் கட்சி தோழமைகளுடனும் "வாக்கு அரசியல்" தளத்தில் ஒருங்கிணைந்து களபோராடினால் வருங்காலங்களிலாவது இத்தகைய போராட்டங்களை இந்தியாவில் அமையும் நடுவன் அரசுகள் கண்டு நடுங்கும், அதில் சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்புகள் உயர்ந்து சாதி,இன விடுதலைகளும் மலரும் என்பதும் அவரோடு போராட்ட களத்தில் ஒருங்கிணைந்த இசுலாமிய சமூகத்தின் சொத்தான பாபர் மசூதி நிலமும் மீட்கப்படும் என்பது உறுதி.
இதற்கெல்லாம் வித்திட அரசியல், சமுதாயா தளங்களில் பல
குழுக்களாக பிரிந்துகிடக்கும் இசுலாமிய சகோதர அமைப்புகள் முதலில்
ஒற்றுமையெனும் கயிற்றை பற்றி பிடிக்க உடனே இணையவேண்டும் என்பது என் அவா.
No comments:
Post a Comment