Friday, March 07, 2014

பெண்கள் தினமாம்...

புகைமூட்டத்தில் கண்கள் எரிய மூக்கை சிந்தி சிந்தி அழுகையை அடுப்படிக்கு மேல் வெளிவாராமல் அடக்கிக்கொள்ளும் அல்லது அடக்க வைக்கப்படும் பெண்களுக்கிடையில்....

பழைமைச்சொல்லி,வேதம் சொல்லி, கட்டுப்பாடுகள் சொல்லி பெண்ணை படுக்கையறை தாண்டவிடாத கயவர்களையும், சன்னல் கம்பிகள் உடைத்து சனங்களின் கவிதைப்பாடும் பெண்களையும் நினைவேந்தி...

"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய
பெண்களை அவமதிக்கிறதோ,

எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,

எந்தவொரு மதம் பெண்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்"

என்பது என் கூக்குரல் அல்ல... பெண் குலம் சொல்லி கட்டைவிரலுக்குமேல் கண்களை தூக்காதே என்பதற்கெதிரான கலகக்குரல். அத்தகைய கலகக்குரல்தான் என் காதுமடல் பிடித்து தூக்கி நிறுத்துகிறது.

கடந்த நூற்றாண்டுகளில் ஆணாதிக்கமே பேசிப்பேசி, புளித்துவிட்டதால் இனி ஆணாதிக்க பேச்சுகளை ஒரு சாக்கடையை கடப்பதுப்போல் கடந்துவிட்டு, பேசட்டும் பெண்கள் பேசட்டும் தவறுயிருப்பின் தட்டிக்கேளுங்கள் இப்போதல்ல இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து என்கிற என் வேள்வியை தொடருகிறேன்.

பூஞ்சை பிடித்த உங்கள் சட்டங்களால் மவுனமாக்கி விட முடியாது பெண்களை, அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒலித்து ஒலித்து ஒலித்து நீங்கள் செவிப்பறைகள் கிழிய அலறிகொண்டே ஓடவேண்டும். இதோ இங்கேயும் தேவைபடுகிறது வன்முறைக்கெதிரான வன்முறை. என்ன செய்ய திணித்தவர்கள் நீங்கள்தானே...

No comments:

Post a Comment