Friday, October 07, 2005

தவிர்க்கவியலாத தவிர்ப்பு

வயிற்றுக்கான
சாலையோர யுவதிகளின்
தொழில்முடக்கம் பற்றியே
சட்ட புத்தகங்கள்
புரளும்

நாகரீகமென்று
நட்சத்திர விடுதிகளில்
சீமாட்டிகளின்
கழிவுகள்
சிலாகிக்கப்படும்

ஒப்பனையில்
உயிர்வாழும்
உச்ச நடிகையின்
திரை

கிசு கிசுப்பில்லாமல்
கிழியத்தான் செய்கிறது
கலாரசிகனின்
கனவில்

1 comment:

  1. வாங்க வாங்க. நன்றாக இருக்கிறது கவிதை. ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete