சொற்கள்
பூமியின் விசாலமாய்
பரந்து கிடக்கின்றன
வார்த்தை மின்னல்களில்
வழுக்கி தொலையும் சில
நாவுகளில் கிடந்து
பரிதாபப்படுகின்றன
அச்சுப்பிழைகலென
பிராவகமெடுத்து
அரசியல் நாற்றமாகிறது
சிலவேளை
இன்னும் புழக்கத்திற்கு
வரதேவையில்லையென
காற்றில் படிந்துகிடக்கக்கூடும்
நிறையச் சொற்கள்
உங்கள் செய்திகள் அனைத்தும் பிரமாதம் , படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கு
ReplyDeleteநலம் , மிகவும் பயனுள்ளதாக இருக்கு
நன்றி
வாழ்க வளமுடன்