Wednesday, June 14, 2006

மானங்கெட்ட நாட்டுல...

மூனுபோகம்
வெளஞ்ச மண்ணு
மனசுவச்சா ஆக்குறா
மாறினா அழிக்கிறா
மழையம்மா

வெவசாயம் நீத்துபோக
வெளஞ்ச நெலத்த
வித்துபுட்டு
வெளிநாடு போனவக தவிர

மிஞ்சியிருக்குற
சனங்களுக்கு
கஞ்சிவூத்துரதா கேள்விபட்டு
போன எடத்துல

பொளப்பத்த
நாய்களான்னு
திட்டு வாங்கினதுதா
மிச்சம்

1 comment:

  1. உங்கள் செய்திகள் அனைத்தும் பிரமாதம் , படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கு
    நலம் , மிகவும் பயனுள்ளதாக இருக்கு
    நன்றி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete