விற்பனை சந்தையில்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்
தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று
அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன
சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே
பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்
மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்
அன்பு கவிமதி அவர்களுக்கு மேற்க்கத்திய நாடுகளின்
ReplyDeleteஅனைத்தையும் காப்பியடிக்கும் அனைவரும் அவர்களுக்கு பிறந்தவர்கள்
என்ற உங்களின் வார்த்தை பிரயோகம் செருப்பால் அடித்தது போல் இருக்கிறது.
உலகில் மனித இனத்தை கீழாக அழித்தவர்கள் அமெரிக்கர்களும்,ஐரோப்பியர்களும் அவர்களோடு இப்போது நன்றி கெட்ட
யூதர்களும்,ராஜபக்சேவும் இதை உணர்த்தும் உங்கள் கவிதை அருமை.