Saturday, March 27, 2010

தஸ்லீமா நஸ்ரின்

அன்பர்களே...

பரந்த இவ்வுலகிலிருந்து கற்றுக்கொள்ளவே இவ்வலைப்பூவினை நடத்துகிறேன்.
மற்றபடி பதிவுகள் வைத்து யார் மனதினையும் புண்படுத்தவோ, விவாதங்கள் என்ற பெயரில் நமக்குள் மோதிக்கொள்ளவோ பதிவுகளைவைப்பதில்லை.
நமக்குள் மோதிக்கொண்டால் நம் பொது எதிரி பாப்பானும்,இந்துத்துவாவும் தான் மகிழ்வான்.எனவே நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க "தஸ்லிமா நஸ்ரின்" என்கிற இப்பதிவை
எவ்வித நிபந்தனையுமின்றி எடுத்துவிடுகிறேன்.

இனி அன்பர்கள் யாரும் இதில் பதிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்ளுகிறேன்.
நன்றி.....

64 comments:

  1. Anonymous10:00 AM

    ஆகா கலக்கிட்டீங்க கவிமதி
    இது என்ன சர்சையை கிளப்பபோகுதோ

    ReplyDelete
  2. தஸ்லீமா நஸ்ரின் என்ற பெண்ணிற்காகவும் கவிதையின் தமிழாக்கத்திற்கும் இந்த பின்னூட்டம்.

    ReplyDelete
  3. Anonymous11:18 PM

    //எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய
    மக்களை அவமதிக்கிறதோ,
    எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,
    எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
    அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்"//.அருமை.தொடர்க.

    ReplyDelete
  4. கலக்கலான கவிதை!!!
    பகிர்விற்கு நன்றி!!!

    ReplyDelete
  5. கவிஞரே
    அடுத்து தேவதாசிகள்,பொட்டுக் கட்டியவர்கள்,ரெட்டைகுவளைக்காரர்கள்
    இவர்களைப் பற்றியும் எழுதுங்களேன்

    ReplyDelete
  6. Anonymous4:50 AM

    கவிமதி அவர்கள் என்னதான் புனைப்பெயர் வைத்துக் கொண்டு நாத்திகம் பேசினாலும் அவர் சார்ந்துள்ள சமூகத்தில்தான் (முஸ்லிம்) இன்னும் தன்னுடைய தொடர்புகளையும், உறவுகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு தான் சார்ந்துள்ள சமூகத்தை இழிவுபடுத்தி இஸ்லாமிய பெயரிலேயே எழுதும் ஒரு பெண்ணுக்கு ஆதரவு கரம் நீட்டி, அவளுடைய கருத்தை தானும் ஏற்றுக் கொண்டு, அவை தனக்கும் ஒத்தக் கருத்து என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அவளை மங்கையர் திலகம் என்ற அளவிற்கு உயர்த்துவது கவிமதிக்கு அழகல்ல என்பதை மட்டும் தற்போது சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

    அவள் கூறுவதை இவர் ஏற்று கொண்டுக் கொண்டதை பார்க்கும் போது தனது குடும்பதினருக்கும் அவளுடைய வரலாற்றை பின்பற்றி நடக்க ஏற்பாடு செய்வார் என்பதை எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  7. ஒரு சமயத்தையும், சமூகத்தையும் தொடர்ந்து விமர்ச்சிக்கும் தஸ்லீமா என்ற பெண்ணின் கருத்துக்களை கவிமதி வைத்திருப்பது அவ்வளவு நல்லதாக இல்லை. பெண் சுதந்திரம் பேசும் இவர்கள் உண்மையான பெண் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்யவில்லையே என்றுதான் இவர்கள் அனைவரின் மீதும் பரிதாபம் ஏற்பட வைக்கிறது. எதையும் நுணிப்புல் மேயாமல் ஆழமாக சென்று பார்ப்பது அனைவருக்கும் நலமாக இருக்கும்.

    ReplyDelete
  8. நல்லது பெயரிலி (Anonymous)அவர்களே நான் புனைபெயரில் இருப்பது உண்மைதான். நீங்களாவது நேர்மையாக உங்கள் பெயரை தந்தால் பதில் தர ஏதுவாக இருக்குமல்லவா!

    ReplyDelete
  9. நல்லது காதர் தொடர்ந்து எல்லாவற்றையும் எழுதுவோம்.
    தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் பதிக்கவும்.

    ReplyDelete
  10. மன்னிக்க வேண்டும் கவுஸ் அவர்களே
    சிறு திருத்தம் தஸ்லீமா; அவர் சார்ந்த மதத்தை இழிவு செய்யவில்லை, விமர்சனம்தான் செய்கிறார். நம்மால் பதிலலிக்க இயலவில்லையெனின் அவர்மீது தாக்குதலை நடத்திவிட்டு அவர் எழுப்பிய வினாவிலிருந்து தப்பித்துக்கொள்வது அயோக்கியத்தனம்.

    ஏனெனில் இஸ்லாம் எதையும் ஆய்வுக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளாதே என தெளிவாக சொல்லுகிறது.எனவே வினா எழுப்பும் தஸ்லீமாக்களை தாக்குவதைவிட்டு நாம் தான் சுய விமர்சனம் செய்துக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  11. Anonymous10:39 PM

    பெயரில்லாமல் பாராட்டு வந்தால் ஏற்றுக்கொள்வீர்கள்! விமர்சனம் வந்தால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதோ! என்னே தங்களின் கையாலகத்தனம்?

    தேவையேற்படின் என் பெயரை சொல்ல தயங்க மாட்டேன்! ஆனால், தாங்கள் தங்களின் பெயரை மறைத்து வாழ்வது ஏன்?

    ReplyDelete
  12. கவிமதி அவர்களே
    தங்களின் எழுத்து கூறுகள்,தொகுப்புகள் சக்தி வாய்ந்தவயாகவும் பிறரை நாத்திக வழியில் கவரும் தன்மையிலும் உள்ளது....அதே சமயம்..

    இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த நீங்கள்..பெண்களின் பாழ் இஸ்லாம் ஏற்படுத்தி உள்ள உரிமை கட்டுப்பாடு அல்லது பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் இழைக்கும் தீங்குகள்,பறிக்கப்பட்ட சுந்தந்திரம் போன்றவற்றை தான் சுட்டி காட்டவேண்டுமே தவிர பொதுவாக கருத்து சொல்வது அர்த்தமற்றது..
    தஸ்லீமா நஸ்ரின் இஸ்லாமிய மாரகதுக்கு புறம்பான கருத்துக்களை பலதும் சொல்லி உள்ளதாலும்,அதில் அர்த்தம் இல்லை என்பதினாலும் ,அவரை ஒரு சிறந்த பெண்கள் புரட்சி எழுத்தாளர் என்று எப்படி ஏற்றுகொள்ள முடியும்..எந்த ஒரு சமூகமும்ஏற்காது..

    குறிப்பாக தங்களின் குடும்ப உறுப்பினர்களை எங்ஙனம்,எத்தன அடிப்படையில் வைத்துள்ளீர்கள் என்பதையும் கொஞ்சம் வெளிப்படையாக உலகத்திற்கு காட்டினால் நன்மையாக இருக்கும்..தங்களின் நாத்திக வழியில் ஒரு முன்னேற்றம் தெரியும்.

    இந்த இஸ்லாமிய மார்க்கம் முழுமை அடைந்த மார்க்கம்..இது இறைவனால் உருவாக்கப்பட்ட மார்க்கம்..இதை யாரும் எதுவும் குறை கூற முடியாது தங்களாலும் ஒரு அளவுக்கு மேல் இதை ஆராய்ச்சி பண்ண இயலாது..
    ஏன் என்றால் இறைவனை பற்றி நாம் குரான் ,நபிவழி மூலம தெளிவாக ஓரளவு நமது அறிவிற்கேற்ப தான் விளங்க முடியும்..சிலது நமது அறிவுக்கு அப்பாற்பட்டவை..
    பலதரப்பட்ட அமைப்புக்கள் பெண் உரிமையை பேணி நடக்க வில்லை என்றால்..சொல்லுங்கள் நானும் தங்களுடன் சேர்ந்து கை கோர்க்க தயார்..சாதாரண மனித அமைப்புகளை வைத்து இஸ்லாமிய மார்க்கத்தை எடை போடாதீர்கள்
    .நானும் இஸ்லாமிய மார்க்கம் என்ற போர்வையில் இந்த பொருள் ஈட்டும் அமைப்பை கடுமையாக எதிர்கிறேன்...மனிதன் தவறு இளைப்பவனாக இருக்கிறான்..

    இறுதியாக வருகின்றேன்..
    பெண் உரிமை பற்றி தாங்கள் குரான்,நபிவழி இவை இரண்டிலும் தவறாக அறிந்தது அல்லது தங்களுக்கு கிடைத்த ஆதரங்களை ,விளக்கத்துடன் தாருங்களேன்..தங்களின் கருத்தை ,ஆதாரத்தை அலசி ஆராய்ந்து பார்க்கலாம்..இதை தொடர்ந்து பலரும் உண்மை என்ன அறிந்து கொள்ளட்டும்..

    தங்களின் ஆசானாகிய,நாத்திக சிங்கம் ஐயா பெரியார் தாசன் ( அப்துல்லா) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுள்ளார் என்றால்.... எந்த அளவுக்கு அவர் நன்கு ஆராய்ந்து தன்னை இனைதுகொண்டார் என்பதை..தாங்களும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்..

    நௌஷாத் அலி
    சவூதி அரேபியா

    ReplyDelete
  13. //தேவையேற்படின் என் பெயரை சொல்ல தயங்க மாட்டேன்! ஆனால், தாங்கள் தங்களின் பெயரை மறைத்து வாழ்வது ஏன்?//Anonymous..

    கவிமதி எதையும் மறைத்து வாழவில்லையே அப்படி நீங்கள் சொல்ல்லுவதுப்போல் இருந்தால் அவரது புரோபையில் இத்தனை தெளிவாக தரவேண்டியதில்லையே..

    சும்மா பேசுவதற்காக பேசுவதா?

    நானும் கவிமதியை நீண்ட நாட்களாக வாசிப்பவள். தஸ்லீமா போன்றே எனக்கும் நிறைய கேள்விகள் இருக்கின்றன என்ன எங்களுக்கு பதில் அவர் பேசுகிறார். இதில் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களுக்கு மட்டுமே பொத்துக்கிட்டு வருவது ஏனோ..

    ReplyDelete
  14. ஒரு புதிய தஸ்லீமா நஸ்ரின் (அஜிமா)கவிமதி அவர்களே பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. Nazir Ubaidullah1:11 PM

    சகோ.அஜிமா அவர்களே ! உங்களுக்கு என்ன சந்தேகம் ! என்பதை சொன்னாள் ! மற்றவர்கள் பதிலிக்க வசதியாக இருக்கும் அதை விட்டு விட்டு எங்களுகாக கவிமதி பேசுகிறார் என்று தள்ளி நிற்க காரணம் என்ன ? நீங்கள் கேட்க விரும்புதை நேரடியாக கேட்கலாமே ?

    பெண்ணுரிமைக்காக வாதாடுகிறேன் என்று சொல்லி தன்னு(உ)டயை கலைந்தவர்கள் கூட இறுதியில் இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள் என்பது தான் உண்மை ! 40 ஆண்டுகள் நாத்திகம் பேசி 1000 கணக்கானவர்களை நாத்திக சிந்தினைக்கு மாற்றியவர் (கவிமதியின் ஆசான்)பெரியார் தாசன் கூட எல்லா மதங்களையும் ஆராய்ந்து விட்டு கடைசியாக இஸ்லாத்தை தழுவியதை தாங்கள் அறிந்து இருக்க கூடும்.பெண் குழந்தை பிறந்தாளே ! உயிருடன் புதைக்கும் அரபிகள் சமுகத்தில் நபிகள் நாயகம் பிறந்து பெண்மையை போற்றி பெண் பிள்ளையை ஆணுக்கு சமமாக உயர்த்தி பிடித்து ஆண் பெண்ணுக்கு கைகூலி{மஹர்)கொடுத்து திருமணம் செய்வதை கடமையாக்கினார்கள்

    "எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய
    மக்களை அவமதிக்கிறதோ,
    எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,
    எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
    அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்" மேற்க்ண்ட வாசகம் இஸ்லாத்திற்க்கு சற்றும் பொருந்தாத கோஷம் ! காரணம் இஸ்லாம் மாற்று கருத்துடையவர்கள் ஏற்றுக் கொள்கிறது மார்கத்தில் கட்டாயம் இல்லை என்று வலியுறுத்துகிறது ! அவருடைய மார்கம் அவர்களுக்கு என்று சொல்லுகிறது,மேலும் மாற்று மத கடவுள்களை திட்டாதீர்கள் என்று பரைசாற்றுகிறது.

    இஸ்லாம் ஒரு காலமும் பெண்களை அடிமைகளாக வைத்தது இல்லை மாறாக அவர்களை கண்ணியப்படுத்தி உள்ளது என்பதை வெளியில் இருந்துக் கொண்டு பார்தால் உங்களுக்கு புரிய வாய்பில்லை அது சம்மந்தமாக இஸ்லாம் கூறும் அறிவுரைகளை "இஸ்லாத்தில் பெண்ணுரிமை" என்கிற நூலை வாங்கி படியுங்கள் சிந்தியுங்கள் ! இன்று பெண்ணுரிமை பேசும் மேலைநாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் மதம் எது என்றால் அது இஸ்லாம் தான் என்று BBC Report சொல்லுகிறது.
    அறியாமையில் இருந்த மக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததே இஸ்லாம் தான் ! முதன் முதலாக வந்த வசனமே ! ஓதுவீராக ! என்பது தான்.
    இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுவதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்களுடைய விருப்பம் அதனால் இஸ்லாத்துக்கு ஒன்றும் நஷ்டம் கிடையாது.

    இஸ்லாத்தில் ஆணாதிக்க சிந்தனையே கிடையாது நடுநிலை சமுதாயத்தை தான் இஸ்லாம் வலியுறுததுகிறது வாழவியலில் பொருப்புகளை பகிர்ந்தளித்துள்ளது.

    அஜிமா ! எல்லா மதங்களையும் அலசி சிநத்திதது பார்கவும் ! கவிமதியை மட்டும் படித்துக் கொண்டு இருக்க வேண்டாம் ! சகோ.பெரியார் தாசன்(அப்துல்லாஹ்) ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று islamkalvi.com பதிவு செய்துள்ளார் அதையும் படியுங்கள் ! ஜாக்கிர் நாயக் உடைய பதிவுகளையும் படிக்கவும். தெளிவு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் !

    சகோதரி.அஜிமா! தங்களின் மனதை நோகடிக்கனும் என்கிற ரீதியில் இதை எழுதவில்லை.தாங்கள் நேர்வழி பெறனும் என்கிற ஆதங்கத்தில் தான்.

    இதில் ஏதாவது தவறுகள் இருந்தால் திருத்தி வாசிக்கவும்

    அன்புடன்
    நஜீர் உபைதுல்லாஹ்
    சவுதி அரேபியா

    ReplyDelete
  16. கவிமதி அவர்கள் என்னதான் புனைப்பெயர் வைத்துக் கொண்டு நாத்திகம் பேசினாலும் அவர் சார்ந்துள்ள சமூகத்தில்தான் (முஸ்லிம்) இன்னும் தன்னுடைய தொடர்புகளையும், உறவுகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு தான் சார்ந்துள்ள சமூகத்தை இழிவுபடுத்தி இஸ்லாமிய பெயரிலேயே எழுதும் ஒரு பெண்ணுக்கு ஆதரவு கரம் நீட்டி, அவளுடைய கருத்தை தானும் ஏற்றுக் கொண்டு, அவை தனக்கும் ஒத்தக் கருத்து என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அவளை மங்கையர் திலகம் என்ற அளவிற்கு உயர்த்துவது கவிமதிக்கு அழகல்ல என்பதை மட்டும் தற்போது சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

    அவள் கூறுவதை இவர் ஏற்று கொண்டுக் கொண்டதை பார்க்கும் போது தனது குடும்பதினருக்கும் அவளுடைய வரலாற்றை பின்பற்றி நடக்க ஏற்பாடு செய்வார் என்பதை எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  17. எம்.கே.கவுஸ்9:37 PM

    என்னுடைய பெயர் உடன் அதோ மெயில் வைத்து உள்ளேன் பதில் சொல்லுங்கள் கவி அவர்களே

    ReplyDelete
  18. சகோதரர்...இல்லை இல்லை..சகோதரி.அஜீமா....ஏன் என்றால் இவர் ஆண்தான் பெண் என்ற போர்வையில் இப்படி கேள்விகள் மறைந்திருந்து கோழைத்தனமாக கேட்கிறார்..சகோ.நஜீர் அவர்களின் விளக்கங்கள் சில தெளிவாக இவரது சந்தேகதுக்குண்டான் கேளிவிகளுக்கு முன்பே பதில் அளித்துள்ளார்கள்..
    ஆக ..புரிந்துகொள்ளுங்கள்..அஜீமா அவர்களே..

    மேலும் தங்களின் விபரங்களை கொஞ்சம் தாருங்களேன்..
    விவாதிப்போம் கலந்துரையாடல் செய்வோம்..

    மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன..கேள்வி ஞானம் அறிவை வளர்க்கும்..
    நௌஷாத் அலி .
    சவூதி அரேபியா

    ReplyDelete
  19. இதோ ஒரு அஜிமாவை தஸ்லிமா நஸ்ரினாக மாற்றவிட்டார். இன்னும் எத்தனை பேரை உருவாக்க நினைகிறாறோ..

    ஏன் உங்களுக்கு இந்த இரட்டை வேடம்?

    நீங்கள் முஸ்லிமா அல்லது நாத்திகவாதியா என்று தெளிவுப்படுத்துங்கள்.

    ReplyDelete
  20. Anonymous1:59 AM

    அன்புள்ள தோழர்களே, வணக்கம். இஸ்லாம் மதம் ஆண் பெண் சமத்துவம் பேசும் மதம் என்றால் எதற்க்காக ஒரு 'பெண் நபி' இல்லை என்று கேட்ட கவிஞர் ரசூலை 'ஊர் விலக்கம்' செய்தீர்களாம்? யாராவது பதில் சொல்வார்களா?
    - முண்டந்துறை பீட்டர்.

    ReplyDelete
  21. Anonymous2:04 AM

    இன்றைக்கு முஸ்லிமாக மாறியுள்ள பெரியார் தாசன் நேற்று புத்த மதத்தில் இருந்தவர். மறந்துவிடாதீர்கள். நாளையே அவர் சங்கராச்சாரி முன்னாள் போய் இந்து மதத்தில் இணைய மாட்டார் என்று யாராவது உத்தரவாதம் தரமுடியுமா? பெரியார் பிராண்ட் நாத்திகம் அப்படிப்பட்டது தான் தெரியுமல்லவா?

    ReplyDelete
  22. swaaminaathan2:17 AM

    முஸ்லிம் மதம் சகிப்புத்தன்மை இல்லாத மதம். இந்து மதம் ஒரு கேவலமான பிற்போக்கு மதமே ஆனாலும் அங்கே எவ்வளவு ஜனநாயகம் இருக்கிறது பாருங்கள். மனிதன் படைத்துக்கொண்ட கடவுளுக்கு இங்கே எத்தனை பாதுகாவலர்கள்? கடவுளை, மதத்தை விமரிசித்தால் கடவுள் தானே கோவப்பட வேண்டும்? ஆனால் இங்கே மனிதர்கள் கொதித்து போகிறார்களே ஏன்? கடவுள் என்று ஒன்று இல்லாததால் தானே? கடவுளுக்கு, அது அல்லாவோ, ஏசுவோ, சிவனோ என்ன கருமாந்திரமோ, அதுவே நேரில் வந்து இந்த நாத்திகர்களை தண்டிக்கட்டுமே. நீங்கள் யார் நடுவில் என்று கேட்கிறேன். அறிவியல் வளர்த்த மனிதா, நீ ஆண்டவர் அடிமையாய் இன்னும் எத்தனை காலம் வீணாக்கப் போகிறாயோ தெரியலியே?
    --சுவாமிநாதன், மும்பை-77.

    ReplyDelete
  23. Anonymous2:19 AM

    முஸ்லிம் மதம் சகிப்புத்தன்மை இல்லாத மதம். இந்து மதம் ஒரு கேவலமான பிற்போக்கு மதமே ஆனாலும் அங்கே எவ்வளவு ஜனநாயகம் இருக்கிறது பாருங்கள். மனிதன் படைத்துக்கொண்ட கடவுளுக்கு இங்கே எத்தனை பாதுகாவலர்கள்? கடவுளை, மதத்தை விமரிசித்தால் கடவுள் தானே கோவப்பட வேண்டும்? ஆனால் இங்கே மனிதர்கள் கொதித்து போகிறார்களே ஏன்? கடவுள் என்று ஒன்று இல்லாததால் தானே? கடவுளுக்கு, அது அல்லாவோ, ஏசுவோ, சிவனோ என்ன கருமாந்திரமோ, அதுவே நேரில் வந்து இந்த நாத்திகர்களை தண்டிக்கட்டுமே. நீங்கள் யார் நடுவில் என்று கேட்கிறேன். அறிவியல் வளர்த்த மனிதா, நீ ஆண்டவர் அடிமையாய் இன்னும் எத்தனை காலம் வீணாக்கப் போகிறாயோ தெரியலியே?
    --சுவாமிநாதன், மும்பை-77.

    ReplyDelete
  24. சகோ. நீங்கள் என்றாவது குர்ஆனை மற்ற வேத நூல்கள் எனப்படும் கற்பனை கதைகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளீர்களா?

    அல்லாஹ் நாடினான்.. சகோ அப்துல்லாஹ் ஆராய்ந்தார்! உன்மையை அறிந்துக்கொன்டார். நாளை அவர் சங்கராச்சாரி முன் போய் நின்றாலும் அதற்க்காக நாம் கவலை படுவதற்க்கில்லை. அவரவர் நண்மை தீமைக்கு அவரவரே பொருப்பாளி.

    சகோ. முண்டந்துறை பீட்டர் அவர்களுக்கு.

    ஆண் பெண் சமத்துவதிற்க்கும். இறைவன் பெண் நபியை அனுப்பாமலிற்ந்ததிற்க்கும் என்ன தொடர்பபிறுக்கிறது? இஸ்லாத்தில் பெண்களுக்கும் என்ன உரிமையில்லை என நினைக்கிறீர்கள்?

    இறைவனிடத்தில் நீ ஏன் இவ்வாரு செய்தாய்? நீ ஏன் இவ்வாரு செய்யவில்லை என கேள்வி எழுப்ப முடியுமா? செய்த்தான் இறைவனின் கட்டளையை மறுத்ததாலயே இறைவன் சபித்துவிட்டான். ரசூல் போன்ற விஷமிகள் நமது சமுதாயத்தை தவறான பாதைக்கு கொன்டு சென்றுவிடுவார்கள் என்பதாலோ என்னவோ ஊர விலக்கம் செய்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  25. aravindan dubai8:09 AM

    அன்பர்களின் கருத்து செரிவான வாதம் அருமை.

    அஜிமாஆணா,பெண்ணா என்பது தெரியவில்லை.அஜிமா என்ற பெயரில் எழுதியதற்காக இத்தனை கடுமையாக விமர்சிக்கும் இவர்களா பெண்ணுரிமை பேசுவது.

    ReplyDelete
  26. நஜீர் உபைதுல்லாஹ்1:57 PM

    "நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி" என்கிற நூலில் திரு குஷ்வந்த் சிங் எழுதியதை சற்று பார்கவும் இது கூட கவிமதியின் வலைதளத்தில் மீள்பதிவு செய்யப்பட்டதிலிருந்து எடுக்கப்பட்டது தான்.

    "இஸ்லாம் அன்றைய காலகட்டத்தில் மனித இனமே கேள்வியுற்றிராத புதிய கோட்பாடுகளையும் (உலகிலேயே முதன் முறையாக) பெண்களுக்கான உரிமைகளையும் வழங்கியது என்பதால் கோடிக்கணக்கான மக்களால் உடனுக்குடனே முழுமனதுடன் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

    முஹம்மது நபி (ஸல்) ஒரு போதும் தன்னுடைய நம்பிக்கையை மக்களின் மீது கட்டாயப்படுத்தவில்லை. மாறாக நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கட்டாயம் கூடாது – லா இக்ரா ஃபில் தீன்” என்று (குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும்) இறைச் செய்தியை வலியுறுத்தினார்.

    திரு.குஷ்வந்த் சிங்

    மாற்றுமத சகோதரர்களே ! எதையும் காழ்புணர்ச்சியுடன் அனுக வேண்டாம் திறந்த மனதுடன் எல்லாவற்றையும் அலசி பார்கவும். இஸ்லாம் அழகான முறையில் விவாதம் செய்ய சொல்கிறது ! மற்றவர்களின் மனதை நோகடிப்பதில் இஸ்லாத்துக்கு உடன்பாடு இல்லை !
    நீங்கள் உள்ளே வந்து பாருங்கள் ! பெண்களை இஸ்லாம் எவ்வளவு கண்ணியப்படுத்தியுள்ளது என்பது தெரியும்.குறிப்பாக ஒன்றை
    சொல்லனும் என்றால்

    "அவர்கள் (பெண்கள்)உங்களுக்கு ஆடையாகவும்,நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்"
    (திருக்குர்ஆன் 2:187)

    "ஆண்களுக்கு பெண்கள் மீது சில உரிமைகள் உள்ளன.பெண்களுக்கு ஆண்கள் மீது சில உரிமைகள் உள்ளன"
    (திருக்குர்ஆன் 2:228)

    நடுநிலையை தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது ! அதனால் பெண்ணுக்கு எதிரானது அல்ல இஸ்லாம் !

    அன்புடன்
    நஜீர் உபைதுல்லாஹ்
    சவுதி அரேபியா

    ReplyDelete
  27. Anonymous11:49 PM

    لعنة الله على شركم‏

    ReplyDelete
  28. விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. தொடரட்டும் .
    மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  29. அன்பு கவிமதி! அருமையான சிறப்பான இடுகை. தஸ்லீமா நஸ்ரின் கருத்துக்களை ஆமோதிக்கும் நீங்கள் அவர் சொன்ன கருத்துக்களை உங்கள் குடும்பப் பெண்களுக்கும் அமல்படுத்தத் தயாரா? அதாவது தஸ்லீமா நஸ்ரினின் முக்கிய வேண்டுகோள் கர்ப்பப்பை சுதந்திரம். எந்தப் பெண்ணும் யாருடைய/ எத்தனை பேருடைய‌ கருவை வேண்டுமானாலும் சுமக்க உரிமை வேண்டும் என கேட்டார். அதை உங்களின் தாய்,மனைவி, மகளுக்கு, சகோதரிகளுக்கு நீங்கள் அமுல்படுத்த தயாரா? அவ்வளவு வேண்டாம் பெரியார் சொன்ன கர்ப்பப்பை சுதந்தரம். அதாவது கர்ப்பப்பை தான் ஒரு பெண்ணை அடிமையாக்குகிறது எனவே அதை எல்லா பெண்களும் நீக்கிவிட வேண்டுமென சொன்னாரே அதையாவது உங்கள் குடும்பப் பெண்களுக்கு நீங்கள் அமல்படுத்தியுள்ளீர்களா? அல்லது அமல்படுத்த தயாரா? இதை முதலில் செயல்படுத்துங்கள். பிறகு விவாதிக்கலாம் இஸ்லாம் கூறும் பெண்ணடிமைத் தனம் குறித்து. இதை நிச்சயம் வெளியிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும்

    நரக நெருப்பிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பற்ற கூடிய, மேலும் ஜன்னத்தில் (சொர்க்கத்தில்)நாம் நம் குடும்பத்துடனும் நமது நபி கூடவும் இருந்து அல்லாஹ்வை பார்க்க கூடிய, மிக பெரிய வெற்றியை தரும் செயல்கள் அல்லது கலந்துரையாடல்கள் ஏதேனும் இருந்தால், அதில் அனைத்து முஸ்லிம்களும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இங்கு நடப்பது அவற்றில் ஒன்றா?

    நிய்யத்துகளை (intentions)அடிகடி சரிசெய்பவர்கள் முஸ்லிம்கள்.

    Avoodhubillaahi Minashaytaan Nir-rajeem.

    மனதில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தும் மனிதர்களிடம் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.




    --

    Allah Subhaanahu Wa ta a'la said: "And whoever contradicts and opposes the Messenger (Muhammad (Sallallaahu 'alayhi wa sallam)) after the right path has been shown clearly to him, and follows other than the believers' way. We shall keep him in the path he has chosen, and burn him in Hell - what an evil destination" (An-Nisa 4:115)

    ReplyDelete
  31. //உங்களின் தாய்,மனைவி, மகளுக்கு, சகோதரிகளுக்கு நீங்கள் அமுல்படுத்த தயாரா? //நிஜாம்.

    நான் பெண்ணுரிமையை முழுமையாக கடைபிடிப்பவன் என்பதால் என் தாய்,மனைவி,மகள், சகோதரிகள் என யாருக்கும் என் கொள்கைகளை திணிப்பதில்லை.

    நீங்கள் மேலே குறிப்பிட்ட அனனவரும் உங்கள் வீட்டிலும் இருப்பார்கள் இல்லையா? அவர்களுக்கு அவர்களின் துணைவர்கள், பாதுகாவலர்கள் மற்றும் நீங்கள் உட்பட இஸ்லாம் சொன்ன உரிமையை வழங்கிவிட்டீர்களா? என சரிபார்த்துக்கொள்ளவும்.

    கருப்பை சுதந்திரம் என்று தஸ்லீமா சொன்னதை நான் தெளிவாக புரிந்துக்கொண்டவன் அதனால் தான் எத்தனை குழந்தை பெறுவது என்பதை என் துணணவியாரிடமே விட்டுவிட்டேன்.விளைவு திருமணமாகி 11ஆண்டுகளில் எங்களுக்கு ஒரே மகன் என்பது உங்களுக்கும் தெரியும்.

    (தஸ்லீமா மட்டுமல்ல யாருடைய கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்பவன் நான் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்)

    மிக கடுமையாக கட்டுப்படுத்தியதால் (அல்லது வேறு என்ன காரணமோ) கருப்பை சுதந்திரம் வேண்டி வழி தவறிய பெண்கள் பற்றியும் உங்களுக்கு தெரியும். இதில் நமக்கு தெரிந்த பெண்களும் அடக்கம்.

    கவிக்கோ அப்துல் ரகுமான் சொன்னதுப்போல் "இஸ்லாம் வழங்கிய சுதந்திரத்தை நீங்கள் வழங்க மறுத்தால் இன்னும் நிறைய தஸ்லிமாக்கள் தோன்றதான் செய்வார்கள்".

    //பெரியார் சொன்ன கர்ப்பப்பை சுதந்தரம். அதாவது கர்ப்பப்பை தான் ஒரு பெண்ணை அடிமையாக்குகிறது எனவே அதை எல்லா பெண்களும் நீக்கிவிட வேண்டுமென சொன்னாரே அதையாவது உங்கள் குடும்பப் பெண்களுக்கு நீங்கள் அமல்படுத்தியுள்ளீர்களா?// நிஜாம்.

    கண்டிப்பாக அமல்படுத்தியாயிற்று. பெரியார் இதை சொன்னது உங்களைப்போல் பெண்ணடிமை பேணுவோருக்குதான், என்னைப்போல் பெண்ணுரிமை கொடுத்துவிட்டவருக்கு அல்ல... தேவைப்படின் கருப்பையை (துணணவியார் விரும்பினால்) எடுத்துவிடும் துணிவும் எனக்கு உண்டு.

    //பிறகு விவாதிக்கலாம் இஸ்லாம் கூறும் பெண்ணடிமைத் தனம் குறித்து. இதை நிச்சயம் வெளியிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//நிஜாம்.

    இஸ்லாம் பெண்ணடிமையை போதிக்கிறது என்று நான் என் பதிவுகளில் எங்கேயும் சொல்லவில்லை. நான் பேசுவது இஸ்லாமிய சிந்தனை தீவிரமாக(தவறாக)கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் உங்களைப்போன்ற முஸ்லீம்களின் அறியாமையால் ஒட்டு மொத்த இஸ்லாமே தவறாக மாற்று மதத்தவர்களிடம் தோன்றுவதைதான்.

    ஏனெனில் இஸ்லாம் எந்த அளவிற்கு பெண்ணுரிமை கொடுத்திருக்கிறது என்பதை அரபுநாடுகளில் குறிப்பாக துபாயில் பணிபுரியும் நான் கண்கூடாக பார்க்கிறேன்.(இஸ்லாம் கூறும் பெண்ணுரிமையை சில பெண்கள் தவறாக பயன்படுத்துவதையும் இங்கே கண்டிக்க தவறவில்லை)

    சுருக்கமாக:இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் வழங்கபடவில்லை, தங்களுக்கு கிடைத்த தவறாக பயன்படுத்துவது அரபு பெண்கள் என்பதை நானும் நீங்களும் நன்கறிவோம்.

    மாற்றுக் கருத்துகளை வரவேற்கவேண்டும் என்று பெருமானார் நபிகள் மற்றும் பெரியார் சொன்னதையும் கடைப்பிடிப்பவன் எனவே நீங்கள் எழுதிய அடுத்த வினாடியே உங்கள் பின்னூட்டம் பதிவாகிவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள் அப்போதுதான் பார்வையாளர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்....

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. அஸ்ஸலாமு அலைக்கும் ,


    தொடர்ந்து குப்பை போடுங்கள். அப்பொழுதுதான், ஊரெங்கும் நாற்றம் பரவும் என்ற அழைப்பை, அறிவுடையோர் மறுத்து, எந்த நோக்கத்திற்காக(noble objective = Jannah) நாம் படைக்கப்பட்டோமோ, அதை மனதில் பதிய வைக்குமாறு கேட்டுக்கொண்டு, குப்பைதொட்டியை விட்டு தூர நகர்கிறேன்.

    வஸ்ஸலாம்

    5:41 PM

    ReplyDelete
  34. //நீங்கள் மேலே குறிப்பிட்ட அனனவரும் உங்கள் வீட்டிலும் இருப்பார்கள் இல்லையா? அவர்களுக்கு அவர்களின் துணைவர்கள், பாதுகாவலர்கள் மற்றும் நீங்கள் உட்பட இஸ்லாம் சொன்ன உரிமையை வழங்கிவிட்டீர்களா? //

    எங்கள் வீட்டு பெண்கள் சுதந்திரமாகத் தான் முடிவெடுக்கிறார்கள். அதிலே எந்த விதமான மாற்றமும் இல்லை. சுதந்திரமாகத் தான் இருக்கிறார்கள்.அதே நேரம் தஸ்லீமா சொன்ன எத்தனை பேருடைய கருவையும் சுமக்கும் உரிமையை என் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கேட்டால் நான் மட்டுமல்ல, எந்த ஆண் மகனும் வழங்கமாட்டான். பிராமண சமுதாயம் தினித்த வரதட்சனை இஸ்லாமியர்களிடத்திலே அதிகமாகிவிட்டதால் இங்கே பெண்களின் சுதந்திரம் பறிபோனது போன்ற மாயை தெரிகிறது. காரணம் நாம் வாழும் நாடு அப்படி.
    வரதட்சனையை எதிர்த்து கடும் பிரச்சாரம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இறைவன் நாடினால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு மஹர் கொடுக்கும் இறைவனின் உண்மைத் தூதர் காட்டிய மஹர் கொடுக்கும் சமுதாயமாக உருவெடுக்கப் பாடுபடுவோம்.

    ReplyDelete
  35. //இஸ்லாம் சொன்ன உரிமையை வழங்கிவிட்டீர்களா? என சரிபார்த்துக்கொள்ளவும்.

    கருப்பை சுதந்திரம் என்று தஸ்லீமா சொன்னதை நான் தெளிவாக புரிந்துக்கொண்டவன் அதனால் தான் எத்தனை குழந்தை பெறுவது என்பதை என் துணணவியாரிடமே விட்டுவிட்டேன்.விளைவு திருமணமாகி 11ஆண்டுகளில் எங்களுக்கு ஒரே மகன் என்பது உங்களுக்கும் தெரியும்.//

    பெரியார் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தான் அடிமைத் தனம் என்றார் கவிஞரே! அதனால் தான் கருப்பையை நீக்கச் சொன்னார். நுனிப்புல் மேயாது ஒரு கொள்கையிலாவது தெளிவாக இருங்கள். இதை நீங்கள் சரிபாருங்கள்.

    //கருப்பை சுதந்திரம் என்று தஸ்லீமா சொன்னதை நான் தெளிவாக புரிந்துக்கொண்டவன்//

    அதைத் தானும் நானும் கேட்கிறேன். தஸ்லீமா போதித்த யாருடைய/ எத்தனை பேருடைய கருவையும் சுமக்கும் கருப்பைச் சுதந்திரத்தை நீங்கள் அமுல்படுத்த தயாரா? அல்லது அமுல்படுத்தி விட்டீர்களா? மழுப்பல் இல்லாத நேரடி பதில் சொல்லுங்கள்.

    ReplyDelete
  36. //(தஸ்லீமா மட்டுமல்ல யாருடைய கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்பவன் நான் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்)//

    நல்லா மழுப்புறீங்க கவிஞரே! நுனிப்புல் மேய்கிறேன் என்று மீண்டும் மீண்டும் நிறுபிக்கிறீர்கள். இனஅழிவு நீங்க இஸ்லாமே இனிய மருந்து என பெரியார் சொன்னதும் இந்த வகை தானா?
    திராவிடர் கழகத்தில் இருப்பேன். ஆனால் பாஜக கொள்கையையும் கடைபிடிப்பேன். காங்கிரஸில் இருப்பேன், அதே நேரம் ஈழத் தமிழர்களின் ஆதரவாளராகவும் இருப்பேன் என்பது போல இருக்கிறது. உங்கள் பதில். நான் கூட பிரம்மாண்டமாக விவாதிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நீங்கள் சுத்த காமெடி பீசு என்பதை புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  37. //மிக கடுமையாக கட்டுப்படுத்தியதால் (அல்லது வேறு என்ன காரணமோ) கருப்பை சுதந்திரம் வேண்டி வழி தவறிய பெண்கள் பற்றியும் உங்களுக்கு தெரியும்.//

    சரியான கட்டுப்பாடில்லாமல் வழிதவறும் பெண்கள் அதை விட அதிகம் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டுமா? கட்டுப்படுத்தியதால் எப்படி வழிதவறும். அவுத்துவிட்டாதான் இஸ்டத்துக்கு மேயும்.. (இஸ்லாமிய பெண்களை மட்டுமே குறிக்கிறது)

    ReplyDelete
  38. //கவிக்கோ அப்துல் ரகுமான் சொன்னதுப்போல் "இஸ்லாம் வழங்கிய சுதந்திரத்தை நீங்கள் வழங்க மறுத்தால் இன்னும் நிறைய தஸ்லிமாக்கள் தோன்றதான் செய்வார்கள்".//

    காசுக்காக/புகழுக்காக கொள்கையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் கவிக்கோவும் ஒன்று தான், நீங்களும் ஒன்று தான். இப்படி பேசும் கவிக்கோ அவர்களின் மகள் (அவரும் கவிஞர் தான்) எத்தனை மேடைகளில் தோன்றியுள்ளார் எனச் சொல்லுங்கள் பார்ப்போம்? விரல்விட்டு எண்ணிவிடும் மேடைகளைத் தவிர.

    ReplyDelete
  39. //கண்டிப்பாக அமல்படுத்தியாயிற்று.//

    // தேவைப்படின் கருப்பையை (துணணவியார் விரும்பினால்) எடுத்துவிடும் துணிவும் எனக்கு உண்டு.//

    இரண்டு கருத்துக்களும் நேர் எதிரே மோதுகிறதே கவிஞரே!

    ReplyDelete
  40. //பெரியார் இதை சொன்னது உங்களைப்போல் பெண்ணடிமை பேணுவோருக்குதான், என்னைப்போல் பெண்ணுரிமை கொடுத்துவிட்டவருக்கு அல்ல...//
    நான் அல்லது நாங்கள் என்ன பெண்ணடிமை பேணுகிறோம் என்று இன்னமும் புரியவில்லை. எத்தனை இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு பட்டதாரிகளாக இருக்கிறார்கள். எத்தனை மகளிர் கல்லூரிகள் உருவாகிவிட்டன. ஆண்களை தூண்டும் உறுப்புகளை மறைத்துக் கொள்ளுங்கள் என இறைவன் இடும் கட்டளை தவறானதுஎன்கிறீர்களா? பர்தா குறித்து ஒரு பெரிய பதிவே எழுதியிருக்கிறேன்.

    http://etiroli.blogspot.com/2010/01/blog-post_21.html

    இந்த லிங்கை படித்துப் பாருங்கள். எங்கள் வீட்டுப்பெண்கள் அதாவது பெண்ணடிமை செய்யப்படுவதாக நீங்கள் சொல்லும் பெண்கள் இன்னமும் தாங்கள் விரும்பியே தான் பர்தா அணிகிறார்கள்.

    ReplyDelete
  41. //இஸ்லாம் பெண்ணடிமையை போதிக்கிறது என்று நான் என் பதிவுகளில் எங்கேயும் சொல்லவில்லை. நான் பேசுவது இஸ்லாமிய சிந்தனை தீவிரமாக(தவறாக)கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் உங்களைப்போன்ற முஸ்லீம்களின் அறியாமையால் ஒட்டு மொத்த இஸ்லாமே தவறாக மாற்று மதத்தவர்களிடம் தோன்றுவதைதான்.//

    அப்படியானால் நீங்கள் தஸ்லீமாவைத் தூக்கிப் பிடிக்க காரணம். நீங்கள் சொல்வது நல்லா மூக்கு முட்ட குடித்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்" என பிரச்சாரம் செய்பவனைப் போல இருக்கிறது. பெண்ணடிமைத் தனம் என நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? தயவுசெய்து விரிவாக விளக்கவும். யாரை ஒருவரின் செயல்பாடை வைத்து ஒட்டுமொத்த சமூகமும் அப்படித்தான் இருக்கிறது என திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத்தை உயிர் கொடுத்து எதிர்க்கும் கும்பலுக்கு நீங்கள் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறீர்கள். பன்றி சாக்கடையில் தன் மூக்கை நுழைத்துவிட்டு அது எதை முகர்ந்து பார்த்தாலும் அதே நாற்றம் தான் அடிக்கிறது என்று சொல்லுமாம்.. நான் மீண்டும் சொல்கிறேன் தயவுசெய்து நுனிப்புல் மேயாமல் தெளிவாக இருங்கள்

    ReplyDelete
  42. //இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் வழங்கபடவில்லை, //

    நீங்கள் இன்னமும் 1947ல் இருக்கிறீர்கள். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கும்பகோணத்தில் திரட்டிய பேரணிக்கு திரண்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிலே குறிப்பாக பெண்கள் இதுவரை இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை கிடையாது. மற்ற சமுதாயத்து பெண்களை விட இஸ்லாமிய பெண்களே அதிகமாக போராட்டம் செய்ய சாலையில் இறங்குகிறார்கள், போராட்டத்தில் கைது செய்யப்படும் போது வீரியமாக ஒத்துழைக்கிறார்கள். யாருமே பயப்படுவது இல்லை என உளவுத்துறையே தெரிவித்திருக்கிறது.
    (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உளவுத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளாதால் அந்த ரிப்போட்டுகளை இப்போது நாம் கோர இயலாது.)

    ReplyDelete
  43. என்னுடைய கடைசி அட்வைஸ் உங்களுக்கு..

    நல்லா முகத்தை கழுவுங்கள்..,

    ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் சென்று சந்தியுங்கள்..

    ReplyDelete
  44. என்னுடைய‌ வார்த்தைகள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும். காரணம் சில விசமிகள் செய்யும் தவறான பிரச்சாரத்தை வைத்து மாற்றுமத சகோதர நண்பர்கள் இது போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தால் அது அவர்கள் அறியாத விசயம் என தெளிவாக எடுத்துச்சொல்லலாம். ஆனால் உங்களைப் போன்ற இஸ்லாத்தை புரிந்தவர்கள் இதே போல சொல்வதால் தான் இது போல எழுத வேண்டியிருக்கிறது. முடிந்தால் டாக்டர் அப்துல்லா( பெரியார் தாசன்) அவர்களைத் தொடர்பு கொண்டு இதைப் பற்றி கேளுங்கள்.

    ReplyDelete
  45. Basha Abu Dhabi3:41 AM

    சகோதரர்கலுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டும்.

    மனிதனாக படைக்கப்பட்ட ஒவ்வெருவருக்கும் இன்றைக்கு இவ்வுலகில் தேவை படுவது இந்த ((சாந்தியும் சமாதானமும்தான்)) அதனால்தான் ஒவ்வெருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் வேலையில் அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டும் எனறு தொடங்க சொல்லும் ஒரே மார்க்கம் அது இஸ்லாம் மார்க்கம் தான்.

    சிறுநீர் கழித்தாலும் அதை உட்காந்துதான் கழிக்க வேன்டும் கழித்து விட்டு அதை தண்ணீரை கொன்டு சுத்தம் செய்துகொள்ளவேன்டும். தண்ணீர் அறுந்தினாலும் அதை உட்காந்துக்கொன்டுதான் அருந்தவேன்டும், ஆனாக பிறந்தால், ஆனுறுப்பை சுன்னத் (கத்னா) செய்துகொள்ளவேன்டும். பெண்ணாக பிறந்தால் அவர்கள் இப்படிதான் உடை அனிய வேன்டும் இப்படிதான் இருக்க வேன்டும், இப்படிதான் நடந்துக்கொள்ளவேன்டும் என்று கட்டளையிட்டு சொல்ல கூடிய ஒரே மார்க்கம் அது இஸ்லாம் மார்க்கம்தான். இதை படிக்கும் மாற்று மதத்தவர் யாரும் இருப்பினும் அவர் தயவுசெய்து இதை சிறிது சிந்தித்து பார்க்க வேன்டும். சிறுநீர் ஏன் உட்காந்து கழிக்கவேன்டும். தண்ணீர் ஏன் உட்காத்து அருந்தவேன்டும், சிருநீர் கழித்துவிட்டு ஏன் அதை இந்த இஸ்லாம் தண்ணீரை கொன்டு சுத்தம் செய்துகொள்ள சொல்லுது, ஏன் ஆனாக பிறத்தால் சுன்னத் செய்துகொள்ள சொல்கிறது என்று இப்படி எல்லாவற்றையும் நமது மூலையை கொன்டு சிந்திதுத்துபார்த்தாள், அதில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது.

    எந்த மதத்திலும் சொல்லாத, எந்த பெரியாராலும் சொல்லாத இப்படி பட்ட சின்ன சின்ன விஷயத்திலெல்லாம் இஸ்லாம் இப்பாடி மூக்கை நுழைக்குதே அப்படி என்னாதான்டா இதில் உள்ளது என்று சிந்தித்து பார்க்க எந்த ஒரு அறிவுடையவனும் தயங்க மாட்டான்..

    இப்போழுது சகோதரர் கவிமதி என்று அழைக்கப்படும் ஹசன் பசீர் சொன்னதை பார்ப்போம்.

    ஏனெனில் இஸ்லாம் எதையும் ஆய்வுக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளாதே என தெளிவாக சொல்லுகிறது.எனவே வினா எழுப்பும் தஸ்லீமாக்களை தாக்குவதைவிட்டு நாம் தான் சுய விமர்சனம் செய்துக்கொள்ளவேண்டும்

    சகோதரர் கவிமதி நம்மை எப்படி சுய விமர்சனம் செய்துகொள்ள வேன்டும் என்பதை அவரே அழகான முறையில் அவர் இங்கு விவரித்தால் அதர்க்குன்டான விளக்கத்தை சகோதரர்கள் இங்கு அளிக்க நல்ல வாய்ப்பாக இருக்கும். அதை விட்டுபுட்டு தஸ்லீமா; அவர் சார்ந்த மதத்தை இழிவு செய்யவில்லை, விமர்சனம்தான் செய்கிறார் என்று இங்கு மொட்டையாக வாதிட்டால், இங்கு அனேகமானவருக்கு தஸ்லீமா என்னதான் சொன்னார் என்பது தெரியாது. ஆகையால், எனது நன்பனான சகோதரர் கவிமதி என்று அழைக்க படும் ஹசன் பஸீர், நம்மை நாமே எப்படி சுய விமர்சனம் செய்துகொள்ளவேன்டும் என்று அழகான முறையில் விவரித்தால் அதர்க்குன்டான பதிலை கொடுக்க அனைவருக்கும் எழிதாக இருக்கும்.

    ISLAAM NEVER FAILS

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. நண்பர் கவிமதி அவர்களுக்கு, நான் கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதிலும் இல்லை, விளக்கமும் இல்லை. அப்படியே ஆறப்போட்டு சமாளித்துவிடலாம் என நினைக்க வேண்டாம். எத்தனை நாள் ஆனாலும் நீங்கள் இதற்கு பதில் கொடுத்து தான் ஆக வேண்டும். அல்லது இடுகை விபரம் புரியாமல் வெளியிட்டு விட்டேன் என பகிரங்க மன்னிப்பு இடுகை போடவும். என்னிடம் அல்ல, ஒட்டு மொத்த சமுதாயத்திடம். இதற்கு நீங்கள் பதில் கொடுத்தால் தான் என்னிடம் இருக்கும் அடுத்த கேள்விகளைப் பதிய முடியும். படத்தில் இருப்பது உங்கள் மனைவியா என்பதை உறுதிப்படுத்தவும். இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் நீங்கள் சரியான பதிலோ, மன்னிப்போ, மறுப்போ, பகிரங்கமாக வெளியிடவில்லை என்றால் என்னுடைய வலைத்தளத்தில் உங்களின் இந்த வெளங்காத போக்கை கண்டித்து பதிவிடுவேன். அதுமட்டுமின்றி இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி பெரிய அளவில் கண்டனப் பதிவிட்டு உங்கள் போலி முகமூடியை கிழிக்க என்றால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  48. // இந்த வெளங்காத போக்கை கண்டித்து //

    அரை வேக்காட்டுத் தனத்தை எனவும் படிக்கலாம்.

    ReplyDelete
  49. anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத்து என்னால் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதே.

    நமது விவாதங்களில் நான் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன் மாறாக வீண் விவாதம் செய்வது என் நோக்கம் அல்ல. அதனால்தான் நான் உங்கள் அனைவரின் கருத்துக்களை கவனித்துக்கொண்டிருந்தேன்.

    போகட்டும் என்னால் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தேவையிருப்பின் நான் உங்களிடம் தோற்றுவிட்டதாகவே ஒப்புக்கொள்கிறேன். இதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

    ஒரு கருத்தை நான் உறுதியாகவே சொல்லிக்கொள்ளுகிறேன்
    எப்போதும் நான் இஸ்லாம் குறித்து தவறாக எழுதுவதில்லை, என் நோக்கமெல்லாம் (முஸ்லீமாகிய) நம்மை நாமே சுய விமர்சனம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதே..

    எனவே மேலும் இப்பதிவுகளில் வாதங்கள் தொடராமல் நிறுத்திக்கொள்வோம்...

    ReplyDelete
  50. //அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதே.//

    நீங்க எந்த வழியில போனாலும் அதப்பத்தி யாருக்கும் கவலை இல்லை. பரங்கிப்பேட்டைய பரங்கிப்பேட்டைன்னு சொன்னா என்ன போர்டனோவான்னு சொன்னா என்ன? அதில எந்தவிதமான மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. அதேபோலத்தான் நீங்க பசீரா போங்க, கவிமதியா போங்க.அதப்பத்தி எங்களுக்கு கவலையில்லை

    ReplyDelete
  51. தஸ்லீமாவைத் தூக்கி பிடிக்கும் நீங்கள் அவள் சொன்ன முதல் பெண்ணடிமைத் தன கருத்தான பர்தாவை உங்கள் மனைவிக்கு அணிவித்து அழகு பார்ப்பது ஏனோ? அப்படி தஸ்லீமா மீது பற்று கொண்ட நீங்கள் முதலில் அந்த பர்தாவைப் பிடிங்கி தீவைத்து இருக்க வேண்டாமா?

    ReplyDelete
  52. //நமது விவாதங்களில் நான் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன் மாறாக வீண் விவாதம் செய்வது என் நோக்கம் அல்ல. //

    எங்களுக்கு மட்டும் என்ன வேறு வேலை இல்லையா உங்களோடு வீண் விவாதம் செய்து கொண்டிருக்க? உங்கள் கருத்து அப்பட்டமான தவறான கருத்து என்பதே என் வாதம். அதை மாற்றி மன்னிப்பு கோருங்கள்.

    ReplyDelete
  53. //போகட்டும் என்னால் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தேவையிருப்பின் நான் உங்களிடம் தோற்றுவிட்டதாகவே ஒப்புக்கொள்கிறேன். இதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.//

    போனால் போகட்டும் என விட்டு விட இது தனி நபர் தாக்குதல் அல்ல. ஒரு சமுதாயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்

    ReplyDelete
  54. //என் நோக்கமெல்லாம் (முஸ்லீமாகிய) நம்மை நாமே சுய விமர்சனம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதே..//

    கொடுமை! முதலிலே உங்கள் மனைவியின் பர்தாவை தீவைத்து கொழுத்தி விட்டு அடுத்தவன் பொண்டாட்டி ப‌ர்தா போட்டு இருக்கா. அது அடிமைத்தனம் என பேசுங்கள்

    ReplyDelete
  55. அன்பர்களே...

    பரந்த இவ்வுலகிலிருந்து கற்றுக்கொள்ளவே இவ்வலைப்பூவினை நடத்துகிறேன்.
    மற்றபடி பதிவுகள் வைத்து யார் மனதினையும் புண்படுத்தவோ, விவாதங்கள் என்ற பெயரில் நமக்குள் மோதிக்கொள்ளவோ பதிவுகளைவைப்பதில்லை.
    நமக்குள் மோதிக்கொண்டால் நம் பொது எதிரி பாப்பானும்,இந்துத்துவாவும் தான் மகிழ்வான்.எனவே நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க "தஸ்லிமா நஸ்ரின்" என்கிற இப்பதிவை
    எவ்வித நிபந்தனையுமின்றி எடுத்துவிடுகிறேன்.என்னால் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனி அன்பர்கள் யாரும் இதில் பதிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்ளுகிறேன்.
    நன்றி.....

    ReplyDelete
  56. Anonymous7:33 AM

    இதுக்கு பேசாம அவிங்க மூத்திரத்தைக் குடித்திருக்கலாம்.

    ReplyDelete
  57. நண்பர் கவிமதி! அந்தப் பதிவை நீங்கள் நீக்கியது தவறு. ஏதோ நாங்கள் மிரட்டி உங்களை நீக்கச் சொன்னது போல ஆகிவிடும். எனவே இருபக்கத்தின் நியாயமும் எல்லாருக்கும் தெரிய வேண்டும். எனவே அதை மறுபதிப்பிடுங்கள். அழித்து இருந்தால் என்னிடம் பேக்கப் இருக்கிறது தருகிறேன்

    ReplyDelete
  58. நண்பர் கவிமதி! உங்களுக்கு தஸ்லீமா பற்றி மட்டுமல்ல! சல்மான் ருஷ்டி பற்றி கூட எழுதுவதற்கு உரிமை இருக்கிறது. அதை நாங்கள் தடுக்கவில்லை. மாறாக அது குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விடையளிக்க முடிந்தால் (இருந்தால்) தாராளமாக பதிவிட்டு எங்களுக்கும் பதில் சொல்லுங்கள். இனியாவது ஒரு வழியில் நிலையாக இருக்க முயற்சியுங்கள். என் வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தி இருந்தால் எல்லாம் வல்ல இறைவனுக்காக வேண்டி பொருத்தருளுங்கள். உங்கள் மனைவி நிச்சயமாக எனக்கு சகோதரி தான். தவறு இருந்தால் மன்னிக்கவும். எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் நிலவட்டுமாக...!!!

    ReplyDelete
  59. நண்பர் கவிமதி! உங்களுக்கு தஸ்லீமா பற்றி மட்டுமல்ல! சல்மான் ருஷ்டி பற்றி கூட எழுதுவதற்கு உரிமை இருக்கிறது. அதை நாங்கள் தடுக்கவில்லை. மாறாக அது குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விடையளிக்க முடிந்தால் (இருந்தால்) தாராளமாக பதிவிட்டு எங்களுக்கும் பதில் சொல்லுங்கள். இனியாவது ஒரு வழியில் நிலையாக இருக்க முயற்சியுங்கள். என் வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தி இருந்தால் எல்லாம் வல்ல இறைவனுக்காக வேண்டி பொருத்தருளுங்கள். உங்கள் மனைவி நிச்சயமாக எனக்கு சகோதரி தான். தவறு இருந்தால் மன்னிக்கவும். எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் நிலவட்டுமாக...!!!

    ReplyDelete
  60. sariyana pathiladi koduthingal sago nizam avarkale

    ReplyDelete
  61. அப்பாஸ்8:32 AM

    கவிமதி என்ன லூசா?
    4 எழுத்து எழுத தெரிந்தால் என்ன வேண்டுமானலும் உளரலாம் என்று நினைத்துவிட்டார் போல் தெரிகிறது. அதோடு கேவளம். அவர் ஒரு முஸ்லிம்(?)என்று வேறு சொல்கிறார்கள். இவரைப் போன்றவர்கலைத்தான் பெயர் தாங்கி முஸ்லிம் அல்லது முனாஃபிக் என்கிறார்களோ?

    ReplyDelete
  62. அப்பாஸ்9:01 AM

    //anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத்து என்னால் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதே.// இது கவிமதி.

    சென்றுவிடக்கூடது என்றல்ல.... முஸ்லிமின் வயிற்றில் பிறக்கும் சிறந்த பாக்கியம் கிடைத்தும், முனாஃபிக்காக மாறிப்போன பரிதாபம். நாளை மறுமையில் கிடைக்கும் கடும் பரிசுக்காக காத்திருங்கள்! இறைவன் எதனையும் மன்னிப்பான். தன்னையும் தன் இஸ்லாத்தையும் கேவலப்படுபவர்களைத் தவிர!

    ReplyDelete
  63. அப்பாஸ்9:03 AM

    /anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத்து என்னால் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதே.// இது கவிமதி.

    சென்றுவிடக்கூடாது என்றல்ல.... முஸ்லிமின் வயிற்றில் பிறக்கும் சிறந்த பாக்கியம் கிடைத்தும், முனாஃபிக்காக மாறிப்போன பரிதாபம்!! நாளை மறுமையில் கிடைக்கும் கடும் பரிசுக்காக காத்திருங்கள்! இறைவன் எதனையும் மன்னிப்பான். தன்னையும் தன் இஸ்லாத்தையும் கேவலப்படுத்துபவர்களைத் தவிர!

    ReplyDelete
  64. அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.

    சகோதரர் நிஜாம் கான்
    உங்களிடம் தஸ்லிமா நஸ்ரின் உடைய சில கருத்துக்கள் தொடர்பான ஆவனப் பதிவின் பிரதிகள் இருப்பின் என்னுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா? குறிப்பாக தங்கள் http://kavimathy.blogspot.com/2010/03/blog-post.html இல் குறிப்பிடட
    //கர்ப்பப்பை சுதந்திரம். எந்தப் பெண்ணும் யாருடைய/ எத்தனை பேருடைய‌ கருவை வேண்டுமானாலும் சுமக்க உரிமை வேண்டும் என கேட்டார். //
    தொடர்பானவை.

    ஏனெனில் என்னுடன் சில பெண்ணியல் வாதிகள் அவள் குறித்து வாதிடுகின்றனர்.

    My email. mu.a.fas@gmail.com
    WhatsApp : 0094773018332

    ReplyDelete