உமர் தம்பி வாழ்க்கைக் குறிப்பு http://umaruni.wordpress.com/
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?
தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.
விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.
கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.
தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.
மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!
தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.
இணைய தளங்கள்:
www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி
http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131
www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html
http://www.islamkalvi.com/portal/?p=77
http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/
http://tamilnirubar.org/?p=9958
http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm
http://www.pudhucherry.com/
http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm
http://www.tmpolitics.net/reader/
http://www.desikan.com/blogcms/?item=theene-eot
குழுமங்கள்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one
http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:
http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணிதà¯à®¤à®®à®¿à®´à®°à¯-உமரà¯à®¤à®®à¯à®ªà®¿.html
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html
http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html
http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html
நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip
http://www.kavimathy.blogspot.com
ஒருங்குறி உமருக்கு என் கண்ணீர் அஞ்சலி
கணினிக் கரைகளில்
இவரும் ஓர்
கலங்கரை விளக்கம்
குண்டு குண்டு மல்லிகளாய்
தட்டச்சில் வந்து விழும்
தேனீ எழுத்துரு
இவர் தமிழ்க்கணியுலகிற்குத்
தந்தகொடை
ஆளுக்கொரு ஐயத்தோடு
வேளைக்கொரு கேள்விகேட்டு
நாளெல்லாம் இவர் அஞ்சல் பெட்டியை
நச்சரிப்புகளால் மூழ்கடித்தாலும்
அலுப்போ சலிப்போ இன்றி
சிக்கெடுத்துக்கொடுக்கும்
சேவை நெஞ்சம்
அதிரையில் பிறந்து
இருபது ஆண்டுகளை
வளைகுடாவில் வளைத்து
அனுபவ முத்தாரம் கோத்தவர்
சர்க்கரைக்கு
பாகுபாடில்லைதான்
ஆனால்
இனிப்பொன்றே நிறைந்த
இவர் இதயத்தின்
எல்லாச் சந்துகளையும்
நிறைத்ததோடு
நிறைவு பெற்றிருக்கலாம்
இளமையிலேயே
இவரின் இரத்தத்திலும்
கசிந்திருக்க வேண்டாம்
கசிந்தும் இவர் விசித்ததில்லை
தித்திப்பு மொழியே
தன் நாமொழி என்று வாழ்ந்தார்
வாழ்ந்தவரின்று ஏன்பிரிந்தார்
ஈதென்ன கொடுமை
எவரேற்பார் இப்பிழையை
எவருக்கிங்கே விழிகளில்லை
விதையற்ற அவன்
எதைவேண்டுமானாலும்
செய்யலாமா
செய்தி கேட்டதும்
சில்லுகளாய்ச் சிதறினேன்
செய்வதறியாது சிதைந்தேன்
அதிர்ச்சியின் ஆக்கிரமிப்பில்
அழிந்துபோன இதயம்
மெல்ல மீண்டபோது
அழுகையே வாயிலானது
ஓவென்று கதறக்கூறி
ஒப்பாரிதான் முட்டியது
உயர்வுகள் நிறைந்த
ஒருங்குறி உமர்
சிறந்ததோர் மனிதர்
கணித்தமிழ் எழுத்துக்களின்
தரம்மாற்றித் தந்தவர்
துயர்மாற்றும் வழியற்றுத்
தேம்பும் தமிழிணைய நெஞ்சங்களில்
என்றென்றும் வாழ்வார்
திரும்பும் திசையெலாம்
பெருந் துக்கம்
கணித்தமிழ்ச் சரித்திரத்தில்
ஒரு பக்கம்
அது உமர் பக்கம்
ஒருங்குறி உமருக்கு
என் கண்ணீர் அஞ்சலி
அன்புடன் புகாரி
உரக்கச்சொல்லுவோம்.
ReplyDeleteகட்டாயம் கிடைக்கவேண்டும்.
மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இனியும் ஒதுக்க அனுமதியோம்
எங்கள் உமர்தம்பி மாமா அவர்களுக்காக அதரவு குரல் கொடுக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கு எங்கள் நன்றி, சிறிய வேண்டுகோள் பின்னோட்டமிடும் அனைத்து தமிழ் ஆர்வ சகோதரர்களும் இந்த கட்டுரையை தங்கள் வலைப்பூக்களில் மீள்பதிவு செய்தால் இன்னும் சிலருக்கு சென்றடையும். இதை ஒரு campaign யை தமிழார்வமிக்க அனைவரும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஈழத்தமிழர்களை இழிவுபடுத்தி இனக்கொலைக்கு மறைமுக ஆதரவு கொடுத்த அரசின் செம்மொழி மகாநாட்டுக் கண்துடைப்பினைப் பகிஸ்கரிப்போம்.
ReplyDeleteஅரசியல்வியாபாரிகளினதும் வியாபார அரசியல்வாதிகளினதும் பின்னணியிலே இயங்கும் உத்தமத்தினையும் கண்டிப்போம்
திரு.உமர்தம்பி அவர்களின் நினைவுக்கூர்ந்து துபாயில் கடந்த ஆண்டு ஒரு நிகழ்வு நடந்தது அதில் கலந்துக்கொண்டு நானும் என் கருத்துகளை வைத்தேன். நிகழ்ச்சி திரு.உமர்தம்பி அவர்களின் மருமகன் கூட்டியதாகவோ,அதில் கலந்துக்கொண்டதாகவோ நினைவு.
ReplyDeleteஅன்பர்கள் ஒன்றிணைந்தால் ஒவ்வொரு ஆண்டும் அவரிகளின் நினைவுநாளன்று நாம் ஒன்றுக்கூடி அவர்களுக்கு நன்றி நவிழலாம்.
குறிப்பாக வெட்டி நிகழ்வுகளை நடத்தி பொருளாதாரத்தை விரையம் செய்யும் ஒரு சில அமீரக அமைப்புகள் இதற்கு ஒத்துவந்தால் சிறப்பு.
அன்பர் தாஜுதீன் திரு,உமர்தம்பி அவர்களின் படம்கிடைத்தால் என் வலைப்பூவில் வெளியிடுவேன்.
ReplyDeleteதிரு. கவிமதி, தங்களுடைய ஈமெயில் முகவரிக்கு மடல் அனுப்பியுள்ளேன், பார்த்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteமூன்று ஆண்டுகளுக்கு முன்பு உமர் தம்பி அவர்களின் இரங்கல் கூட்டம் துபாயில் நடந்தது, தமிழ் ஆர்வளர்கள் அதை நடத்தினார்கள் (அவர்களிடம் இப்போது தொடர்புகள் இல்லை), என் சகோதரர் கலந்து கொண்டார், நான் உமர்தம்பி மாமா அவர்கள் பற்றி எழுதிய மடல் அன்றைய தினம் வாசிக்கப்பட்டது.
அன்றை காலகட்டத்தில் தங்களுடை வலைப்பூவில் உமர்தம்பி அவர்களை பற்றி வந்த செய்தியை பார்த்தேன்.
மீடியாக்களை தன் வசப்படித்துக்கொண்டு தழிழுக்காக சேவைகள் செய்தோம் என்று பெருமையடித்துக் கொள்ளும் மனிதர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், பெருமை அடிப்பதை விரும்பாத உமர் தம்பி அவர்களுக்கு கிடைக்காதா என்ற ஏக்கம் உமர்தம்பி அவர்களின் கணிமை தமிழ் சேவையை அனுபவித்து வரும் தமிழ் நல்உள்ளங்களுக்குள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
உங்கள் நண்பர்களிடமும் தெரியப்படுத்தி அவர்கள் வலைப்பூக்களில் இந்த செய்தியை பதிய செய்யுங்கள். சிறு துளி பெரு வெள்ளம், முயற்சி செய்வோம், வெற்றி கிடைக்கும் என்று நம்பலாம்.
உமர் தம்பி அவர்களின் புகைப்படங்கள் எதுவும் தற்சமையம் என்னிடம் இல்லை, வலைப்பூக்களில் உள்ள புகைப்படம் தான் உள்ளது. இந்த இணைய தொடுப்பில் எடுத்துக் கொள்ளுங்கள்.
ReplyDeletehttp://photos1.blogger.com/blogger/1909/1194/1600/Umartahmbi.jpg
அன்பின் கவிமதி............
ReplyDeleteஅருமையான ஆலோசனை இதை இணையத்தில் உள்ள உலகலாவிய அமைப்பான உத்தமம் தான் முன்னெடுக்கவேண்டும்.
செம்மொழி மாநாடு யாருக்காக --- தானும் ஒரு தமிழ் மாநாட்டை நடத்திவிட்டதாக உலகிற்கு தெரியப்படுத்தவே....
இந்த விசயத்தில் எம்.ஜீ.ஆர், செயலலிதா எவ்வளவோ மேல்...
இந்த விசயத்தை முன்னெடுத்த உமக்கு என் கோடன கோடி நன்றிகள் ..
யாரும் அறிவிக்கவில்லை என்றால்
உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாரத் முன்னெடுப்பார்.
யுனிகோட் சமைத்தவர் உமர்தம்பி என்ற இசுலாமியத் தமிழர் என்றறிந்து உவகை ஏற்பட்டது
ReplyDeleteகமால்