Friday, August 19, 2011

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

அன்புத் தோழர்களே!

ராஜீவ் கொலை வழக்கில் நீதிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாமும் மரண தண்டனையினை இந்திய அரசியலைமைப்பு சட்டத்திலிருந்து நீக்ககோரியும், நமது தோழர்கள் அனைவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து தண்டனை குறைப்பு செய்யக்கோரியும் வேண்டுகோள்வைத்து சனநாயக முறையில் உள்ளரங்கு நிகழ்வாக நிகழ்த்தி மரணதண்டனைக்கு எதிராக பதிவுகளை
அமீரகத்திலிருந்தும் பதிக்கவேண்டி நாம் ஒர் இடத்தில் கூடுவோம்.

ஆர்வலர்களும், தமிழர் அமைப்புகளும் ஒன்றிணைந்து நடத்தினால் இவ்விடயத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுடன் வருங்காலத்தில் ஏனைய உயிர்கள் காக்கப்படலாம் என்பது உண்மை.

அமீரகம் தொடர்ந்து அனைத்து வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உள்ளரங்கு நிகழ்வுகள் நிகழ்த்தி மரண தண்டனைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை பதிவுசெய்ய வேண்டுகிறோம் நன்றி.

1 comment:

  1. இந்த கருனையை நம்முடைய வீட்டில் ஒருவர் பாதிக்க பட்டால் வழங்குவீர்களா??? அவர்களுடைய உயிர் மட்டும் என்ன அத்தனை பெரிது??? பாதிக்க பட்டவர்களுத்தான் தெரியும் அந்த வலியும் வேதனையும்....அவர்களை கேட்டுபாருங்கள், பின்பு முடிவெடிக்கலாம்...நன்றி..

    ReplyDelete