
வாயக்கட்டி வயித்த கட்டி
விதை நெல்லுக்கு வட்டிக்கட்டி
சோறு தந்தவனுக்கு இன்று
கஞ்சித்தொட்டி.
ஆளும் கட்சி போராட்டம்
எதிர்க்கட்சி போராட்டம்
அனைத்துக்கட்சி போராட்டம்
எதுவும் கொண்டுவருவதில்லை
காவிரியில் நீரோட்டம்.
வாங்கிவைத்த
பூச்சி மருந்து வீணாகுதாம்
வரப்பில் நின்று
வயிறு நிறைய குடித்துவிட்டான்
உழவன்.
கையும் காலுமாவது மிச்சமாச்சு
அந்த காலம்
கடன் தொல்லைதான் கூடிபோச்சு
இந்த காலம்.
நமக்கென்று ஆறுகள் உண்டு
நாலா பக்கமும்
தண்ணீர்தான் வருவதில்லை
தாகம் தீர்க்க.
தடையில்லா மின்சாரம்தான்
தருகிறோமே எடியூரப்பா
காவிரியில் தண்ணீருக்கு
இன்னும் ஏன் நீ... இடையூரப்பா.
ஏற்கனவே தண்ணீர் இல்லை
மணலையும் எடுத்தப்பிறகு
என்ன பெயர் வைப்பது
ஆற்றுக்கு?.
கங்கையில் வேண்டுமானால்
பிணங்கள் விழுவது
புனிதமாக இருக்கலாம்
காவிரிக்காக
பிணங்கள் விழுவது
மனிதமா?
(கடந்த மாதம் துபையில் "நாம் தமிழர் அமைப்பு" நிகழ்த்திய கவியரங்கில் வாசித்த என் கவிதை)
புகைப்படம்: நன்றி திரு.சுரேசு அவர்கள்.
மனதை வருத்தும் உண்மைகளினாலான வரிகள்
ReplyDeleteநன்றி தோழர் உங்கள் வருகைக்கும் வரிகளுக்கும்.
DeleteI was very pleased. Thanks
ReplyDelete